சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைவிமர்சனம்

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைவிமர்சனம்

படம்: சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்

நடிப்பு: வைபவ், அதுல்யா ரவி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, ஜான் விஜய், மணிகண்ட ராஜேஷ்

தயாரிப்பு: பாபி பாலச்சந்திரன்  இசை: டி இமான்  ஒளிப்பதிவு: டிஜோ டாமி  இயக்கம்: விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ்   பி ஆர் ஓ: ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்

 

கதை open பண்ணா ..!

ஹூசைனியும் லிவிங்ஸ்டனும் மிகப்பெரிய மோசடி பேர்வழிகள், தாதாக்கள். இவர்களிடம் வைபவும் மணிகண்டாவும் வேலைக்காரர்களாக இருக்கிறார்கள். லிவிங்ஸ்டன் மோசடியாக இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக தன் வீட்டிலிருக்கும் பணம் நகைகளை  வைபவிடமும் மணிகண்டாவிடமும்  கொடுத்து மறைத்து வைக்க சொல்லி அனுப்பிவிடுகிறார். பிறகு லிவிங்ஸ்டன் தனது வீட்டிலுள்ள பணம் நகைகளை கொள்ளயயர்கள் கொள்ளையடித்து விட்டார்கள் என காவல் நிலையத்தில் புகாரளித்து அதற்குரிய இன்சூரன்ஸ் பணத்தையும் மோசடியாக பெறுகிறார். லிவிங்கனிடமிருந்து வாங்கி வந்த பணத்தையும் நகைகளையும் வைபவ் தொலைத்து விடுகிறர். தொலைத்த பணத்தை எப்படி திருப்பி கொடுப்பது என்று வைபவ்வும் மணிகண்டாவும் யோசித்துக் கொண்டிருக்கும்போது, ரெடின் கிங்ஸ்லி அவர்களிடம். “எனது நண்பர்கள் நான்கு பேர் ஒரு வங்கியில் கொள்ளையடிக்கும்போது போலீசில் மாட்டிக் கொண்டு இப்போது சிறையில் இருக்கிறார்கள். நாளை விடுதலையாகி வருகிறார்கள். அவர்களோடு நீங்களும் சேர்ந்து வங்கியில் கொள்ளையடித்து உன் முதலாளியின் பணத்தை திருபி கொடுத்துவிடு” என்று யோசனை கூறுகிறார். சிறையிலிருந்து வெளியில் வரும் ஆனந்தராஜ், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி ஆகிய நால்வருடன் வைபவும் மணிகண்டாவும் கூட்டு சேர்ந்து வங்கியை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்கள். முடிவு செய்தபடி வங்கியை கொள்ளையடித்தார்களா?. லிங்ஸ்டனுக்கு பணம் திரும்ப கிடைத்ததா?. தாதாவான ஹூசைனி என்ன ஆனார்?. என்பதுதான் கதை.

.

சிட்டி கேங்ஸ்டர்ஸ் காமெடி கதாபாத்திரத்திரங்களை சர்வசாதாரணமாக கையாளும் வைபவ், இதிலும் அப்படியே செய்கிறார்.  இரண்டாவது நாயகனாக வரும் மணிகண்ட ராஜேஷ், காமெடி நடிப்பில் இன்னும் தேற வேண்டும். ஆனந்த ராஜின் கொள்ளைக் கூட்டணியில் மறதி மொட்டை ராஜேந்திரன், மதுப் பிரியர் சுனில், காது கேளாத, ஜான் விஜய் என்ன வித்தியாசமாக கேரக்டர்களை வடிவமைத்திருக்கிறார்கள். இவர்களில் சைரன் சத்தம் கேட்டால் போலீஸாக மாறிவிடும் ஆனந்தராஜ் கேரக்டர் முதலிடம் பிடிக்கிறது. லிவிங்ஸ்டன், சிஹான் ஹூசைனி என அனைவரும் வழக்கம் போல் கொஞ்சம் சிரிக்க வைக்க நினைத்து தூக்கம் வர வைக்கிறார்கள் .. நாயகியாக வரும் அதுல்யா தான் பாவம். தனது கேரக்டர் எத்தகையது என்பதை புரிந்து கொள்ளாமல் கடைசி வரை அந்த கேரக்டருக்கு ஒட்டாமல்  இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் டிஜோ டாமியின் கேமரா காட்சிகளை கலர்புல்லாக இருக்கிறது .விக்ரம் ராஜேஸ்வர்- அருண் கேசவ் இயக்கி இருக்கிறார்கள் ரொம்ப பழைய கதையை காமெடியாக சொல்ல முயற்சி எடுத்து.. சாரி  ரொம்ப வீக்கான கதைக்களம் ..திரைகதை சொல்லவே வேண்டாம் . அடுத்த படம் எடுக்கும் போது குறைகளை குறைத்து நிறைவான படம் கொடுக்க வாழ்துக்கள்

நம்ம tamilprimenews.com rating 2.3/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *