டி என் ஏ திரைவிமர்சனம் Rating 4.1/5

படம்: டி என் ஏ
நடிப்பு: அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன்
தயாரிப்பு: ஜெயந்தி அம்பேத்குமார் பாடல் இசை: ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் பின்னணி இசை: ஜிப்ரான் ஒளிப்பதிவு: பார்த்திபன் இயக்கம்: நெல்சன் வெங்கடேசன் பி ஆர் ஒ: யுவராஜ்
கதை .. open பண்ணா ..
அதர்வா குடும்பத்தில் மூத்த பிள்ளை காதல் தோல்வியால் மனம் உடைந்து மதுக்கு அடிமையாகிறான் ..அதனால் தன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகி திரிகிறார் . இந்த சூழலில் சுசீந்திரத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்காக நடத்தப்படும் மறுவாழ்வு இல்லத்தில் அதர்வாவை சேர்க்கிறார்கள். அங்கு அதர்வா யோகாசனம் கற்று மது பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு வீடு திரும்புகிறார்…மறுபுறத்தில் நாயகி நிமிஷா சஜயன் தன் வெகுளித்தனமான பேச்சால் திருமணம் ஆகாமல் பெற்றோர்களின் கவலைக்கு ஆளாகியிருக்கிறார்.. நிமிஷாவுக்கிம் அதர்வாவுக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள் .அந்த பெண் சற்று கிறுக்குத்தனமாக இருப்பதால் பைத்தியம் என்கின்றனர் சிலர்..மற்றவர்கள் சொல்வதை பொருட்படுத்தாமல் நிமிஷா வுடன் திருமணம் செய்து கொள்கிறார் அதர்வா ..!
தம்பதிகள் இருவரும் மிகவும் சந்தோஷ்மாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். பிறகு நிமிஷா கருவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை வயிற்றிலிருந்து வெளியே வந்ததும் தொப்பிள் கொடியை அறுத்துவிட்டு முதலில் தாய் நிமிஷாவுக்கு குழந்தையை காட்டுகிறார் பிரசவம் பார்த்த் மருத்துவர் ரித்விகா. குழந்தையை குளிப்பாட்டி எடுத்துவர செவிலியரிடம் கொடுத்து அனுப்புகிறார் ரித்விகா. குழந்தையை குளிப்பாட்டிவிட்டு வெளியே காத்திருக்கும் அதர்வாவிடமும் அவர்களது பெற்றோர்களிடம் குழந்தையை காட்டுகிறார் செவிலியர். அதன் பிறகு நிமிஷாவை பார்க்க அனைவரும் உள்ளே வருகிறார்கள். செவிலியும் குழந்தையை எடுத்துக்கொண்டு நிமிஷாவிடம் கொடுக்கிறார். குழந்தையை கையில் வாங்கிய நிமிஷா “இது யார் குழந்தை? என் குழந்தை எங்கே?” எனக் கேட்கிறார்.
இதுதான் நம் குழந்தை என்று அதர்வா சொல்கிறார்..! ஆனால், நம் குழந்தை இது இல்லை என்று நிமிஷா கூறுகிறார். ..இதுவே தான் உன் குழந்தை என்கிறது, மருத்துவமனை நிர்வாகம். முதலில் மனைவி சொன்னதை நம்பாத கணவன் அதர்வா .சந்தேகத்தை நிவர்த்தி செய்ய டி.என்.ஏ. பரிசோதனை செய்கிறார்கள். பரிசோதனையில் அதர்வா – நிமிஷா குழந்தை அது இல்லை தெரிகிறது. அப்படியானால் அத்ர்வாவின் குழந்தை எங்கே? யார்? எதற்காக கடத்தினார்கள்.. ..அதன் பிறகு போலீஸிடம் போகிறார். .பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியாக பாலாஜி சக்திவேல் அதர்வா கூட்டணி போலீஸ் உதவியுடன் கடத்தப்பட்ட குழந்தையை தேடும் படலம் தொடர்கிறது.. அதன் பின்னர் கதையில் நடப்பது தான் செம ட்விஸ்ட்..காணாமல் போன குழந்தை மீண்டும் கிடைத்ததா? கடைசியில் என்ன ஆனது? என்பது தான் இந்த டிஎன்ஏ படத்தின் கதை..!, கிளைமேக்ஸ் வரை செம த்ரில்லர் படமாக மாறி ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது…
நாயகியாக நிமிஷா . தனது திருமணம் ஒவ்வொரு முறை தள்ளிப் போகும் போதும், தாயாகி குழந்தை காணாமல் போகும் போதும் , இன்னொரு குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கும் சூழல் வரும்போது அந்த குழந்தை மீதான இவரது அன்பு நம் கண்களில் நீர் வரவழைத்து விடுகிறது..!.ஒரு கட்டத்தில் இந்த குழந்தையை சொந்த அம்மாவிடம் கொடுத்து விட்டு வீட்டில் வந்து அந்த (பட்டு) குட்டியை நினைத்து கதறும் காட்சியில் நடிப்பில் அசத்தி விட்டார் ..! கோவிலில் தன் குழந்தை என்று தெரியாமல் அதை வாங்கும் இடத்தில் பெற்றெடுத்த தாயின் உணர்வுகளும் அந்த நடிப்பும் உணர்வான உடல் மொழியும் நிச்சயமாக நிமிஷா நடிப்பில் awesome.
கிளைமாக்ஸ் வரும்போது தியேட்டர் ல பெண்கள் ஆண்கள் பாகுபாடு இல்லாமல் கண்ணீரை மறைக்க கண்களை துடைத்து கொள்வதை கண்ணால் பார்க்க முடிகிறது ..!
சஸ்பென்ஸே கதை என்பதால் சில கதாபாத்திரங்கள் பற்றி சொல்ல முடியவில்லை ..! குறிப்பாக அந்த பாட்டி rocks , சுப்ரமணிய சிவா மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா , கருணாகரன் போஸ் வெங்கட் தவிர்க்க முடியாத பாத்திரங்கள்.பார்த்திபனின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் நன்று. ஐந்து இசையமைப்பாளர்களின் இசையில் ஒலிக்கும் பாடல்கள் அருமை ..! எழுதி இயக்கியிருக்கிறார் நெல்சன் வெங்கடேசன்.!
மான்ஸ்டர் படத்தில் நம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் டி என் ஏ படத்தில் கைக்குழந்தை சென்ட்டிமென்ட்டை கொண்டு வந்து ஒவ்வொரு குடும்பத்தினர் மனதையும் கவர்ந்து விட்டார்.
DNA இது படம் அல்ல இது ஒரு உணர்வு .. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் ..!
நம்ம tamilprimenews.com Rating 4.1/5