படைத்தலைவன் திரைவிமர்சனம் Rating 3.2/5

படம்: படை தலைவன்
நடிப்பு: சண்முக பாண்டியன் விஜயகாந்த், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனிஷ் காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ வெங்கடேசன், யூகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், லோகு என் பி கே எஸ் தயாரிப்பு: ஜெகநாதன், பரமசிவம் இசை: இளையராஜா ஒளிப்பதிவு: எஸ் ஆர் சதீஷ்குமார் இயக்கம்: யு.அன்பு. பிஆர்ஓ: சதீஷ் (AIM) சிவா
கதை open பண்ணா ..!
வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த குட்டி யானை ஒன்றை நாயகன் சண்முக பாண்டியனின் தாயார் பிள்ளையைப் போல வளர்க்கிறார்..அவரது அப்பா கஸ்தூரி ராஜா அந்த குட்டி யாணைக்கு “மணியன்” என்று பெயர் சூட்டி தனது மகனாகவே வளர்த்து வருகிறார். அம்மாவின் மறைவுக்குப் பிறகு அவர் பாசமாக வளர்த்த யானை அந்த வீட்டில் ஒருவராகிப் போகிறது. இதற்கிடையே தொழிலுக்காக கடன் கொடுத்த உறவினர் பல்வேறு நெருக்கடி கொடுக்கிறார். குறித்த நாட்களில் பணத்தை வட்டியுடன் திருப்பி தரா விட்டால் நடப்பதே வேறு என்று அவர் கர்ஜித்துப் போக, இதனால் யானையை திருவிழாக்கள் கல்யாண வீடுகளுக்கு வாடகைக்கு விட்டால் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கடனை அடைத்து விடலாம் என்று சண்முக பாண்டியன் நண்பர்கள் ஆலோசனை சொல்ல, அதை குடும்பமும் ஏற்கிறது.அப்படி ஒரு திருமண வீட்டுக்கு யானையை கூட்டி சென்றபோது அந்த யானைக்கு ஒருவர் தர்பூசணி பழத்தில் மதம்பிடிக்கும் மருந்தை ஊசியின் மூலம் செலுத்தி சாப்பிட கொடுக்கிறார். பழத்தை சாப்பிட்ட யானைக்கு மதம் பிடிக்கிறது. கல்யாண வீட்டை துவசம் செய்கிறது. சண்முகப்பாண்டியனையும் தூக்கி வீசுகிறது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன. அதனால் அந்த யானையை வனத்துறையினர் பிடித்துச் சென்று விடுகிறார்கள். யானையை மீட்டுக் கொண்டுவர கஸ்தூரி ராஜாவும் சண்முகப்பாண்டியனும் சட்டரீதியாக முயற்சிகிறார்கள். ஆனால் முடியவில்லை. லஞ்சம் கொடுத்தும் பார்க்கிறார்கள் அப்படியும் முடியவில்லை. வனப்பதுகாப்பிலிருந்த யானை தப்யோடிவிட்டது என்று வனத்துறை ஆய்வாளர் சொல்லுகிறார். அதை ஏற்க மறுக்கும் சண்முக பாண்டியன் யானையை தேடி கண்டுபிடித்து அழைத்து வர புறப்படுகிறார். அதேசமயம் சண்முக பாண்டியனை கொலை செய்ய ஒரு கூட்டம் சுற்றி அலைகிறது. அதற்கு காரணம் என்ன? யானையை சண்முக பாண்டியனால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது
படத்தின் முதல் பாகம் வரை சண்டை போடவே தெரியாது என்பது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு நடித்திருக்கும் சண்முக பாண்டியன் தன் யானைக்கு ஒரு ஆபத்து என்றவுடன் பொங்கி எழுந்து எதிரிகளை அதிரடியாக தாக்கி தூக்கி வீசுவதெல்லாம் எதிர்பார்க்காத ஆக்சன் காட்சிகள். தந்தை விஜயகாந்த் போலவே தாவி பறந்து ஒற்றைக் காலில் தாக்கி முத்திரை பதிப்பது அரங்கில் கைதட்டல் அள்ளுது. நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியனிடம் அவரது முந்தைய இரண்டு படங்களை விட, இதில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. ஓங்குதாங்கான அந்த உடல்வாகு நூறு பேரை அவர் அடித்து போட்டாலும் நம்ப வைக்கிறது.
ஒடிஸா காட்டுப்பகுதிக்கு தனது யானையை கொண்டு சென்று விட்டார்கள் என்பதை அறிந்து நண்பர்களுடன் புறப்படும் சண்முக பாண்டியன் அங்கு ஒரு ஆக்சன் அவதாரம் எடுக்கப் போகிறார் என்பதை யூகிக்க முடிந்தாலும் அது எப்படிப்பட்ட ஆக்சன் காட்சியாக இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடியவில்லை கற்பனைக்கு எட்டாத வகையில் சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்பி விட்டார் ..படத்தில் விஜயகாந்திதை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறார் சண்முகப்பாண்டியன். . சண்முகப்பாண்டியனின் உச்சக்கட்ட காட்சியின் ஆக்ரோஷத்தை படதின் ஆரம்பத்திலேயே காட்டியிருந்தால் கேப்டனின் ரசிகர்களுக்கு இன்னும் துள்ளாட்டமாக இருந்திருக்கும். தனது இரு கண்களையும் சண்முகப்பாண்டியனுக்கு கொடுத்து மறைந்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.
இளையராஜாவின் பின்னணி இசையில் சண்டைக்காட்சிகள் திரையரங்கை அதிரச்செய்கிறது. இனிமையான பாடல்களை தந்து பார்வையாளர்களின் இதயத்தை வருடுகிறார் இளையராஜா. வறுமையிலும் தன்மானம் இழக்காத ஏழை குடிமகனாக வாழ்ந்திருக்கிறார் கஸ்தூரி ராஜா. அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒளிப்பதிவவாளர் சதிஷ்குமாரின் உழைப்பு பாராட்டத்தக்கது. யாமினி சந்தர், முனிஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, வெங்கடேஷ், யூகி சேது, ஶ்ரீஜித் ரவி, அருள்தாஸ், லோகு ஆகியோர் அவரவர்களின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள். சண்முகப்பாண்டியன் விஜய்காந்துக்கு இப்படம் வெற்றியின் முதல் படிக்கட்டாக அமைந்திருக்கிறது.ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் கேமரா வனப்பகுதிகளை அழகாகவும், ஆக்ஷன் காட்சிகளை அதிரடியாகவும் கண்களுக்கு நெருக்கமாக்குகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் யு.அன்பு. இந்த படைத்தலைவன் பாசத்தலைவன் .
நம்ம tamilprimenews.com Rating 3.2/5