கட்ஸ் திரைவிமர்சனம்

படம்: கட்ஸ்
நடிப்பு: ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், நான்சி, டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா தயாரிப்பு: ஜெயபாரதி ரங்கராஜ் இசை: ஜோஸ் ப்ராங்க்ளின் ஒளிப்பதிவு: மனோஜ் இயக்கம்: ரங்கராஜ் பிஆர்ஓ: நிகில் முருகன்.
கதை open பண்ணா..!
ரங்கராஜ் நேர்மையான இன்ஸ்பெக்டர். அநீதிக்கு துணை போகாதவர். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கத் தயங்காதவர். இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னணியில் அந்த ஊரின் தொழில் அதிபர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவர, கைது செய்ய முனைகிறார். அதற்கு தண்டனையாக அவரது கர்ப்பிணி மனைவி தொழிலதிபரின் அடியாட்களால் கொல்லப்படுகிறார். தாயை இழந்து வாடும் ஐந்து வயது மகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கிறார் போலீஸ் அப்பா…இந்த சமயத்தில் அவரது தந்தையும் இதே நபரின் தந்தையால் கொல்லப் பட்டது தெரிய வர, நாயகன் ரங்கராஜ் எடுக்கும் ஆக்ஷன் தான் கதை.
தந்தை, மகன் என்ற இரண்டு கதாபாத்திரத்திலும் ரங்கராஜ் நடித்து அசத்தியிருக்கிறார். விவசாயியான அப்பா கதாபாத்திரத்திற்கும் காவல்த்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்திற்கும் உள்ள வேறுபட்ட நடிப்பை துல்லியமாக திரையில் காட்டி நடித்து பார்வையாளர்களின் பாராட்டை வெகுவாக பெற்றுள்ளார். விவசாய நிலத்தை அதிக மகசூல் என்ற பெயரில் ஆசை காட்டி ஊராரை ஏமாற்ற முனைந்த வெளியூர்க் காரனை துரத்தி அடிக்கும் கிராமத்து விவசாயி பெத்தனசாமி கேரக்டரிலும், அவரது மகனாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் கேரக்டரிலும் அறிமுக நடிகர் ரங்கராஜ் திரை பிரவேசம் செய்து இருக்கிறார்.
எந்த காட்சியிலும் குறைவில்லாமல் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் புகழ் பெற்ற ஸ்ருதி நாராயணன். ஆய்வாளர் ரங்கராஜின் மனைவியாக் நடித்திருக்கும் நான்ஸியும் ஸ்ருதி நாராயணனுக்கு இணையாக சொல்லப்போனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டு நடிக்கிறார்கள்… அப்பாவாக, மனைவி சுருதி நாராயணனிடம் காட்டும் அந்த பரிவிலும் பணிவிலும் நடிப்பு முத்திரை பதிப்பவர், மகனாக மனைவி நான்சியுடனான செல்லக் குறும்புகளிலும், .மனைவியின் சடலம் முன்பு விழுந்து கதறும் இடத்தில் அந்த தவிப்பும் துடிப்பும் புதுமுக நடிகரா இவர் என்று கேட்க வைக்கிறது.. திரைக்கதைக்கு தகுந்தாற்போல் தாளம் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ர்ங்கிளின். மனோஜின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து. ரஞ்சித்தின் படத்தொகுப்பு திரைக்கதையை நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது. டில்லி கணேஷ், சாய் தீபா, பிர்லா போஸ் , ஶ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா ஆகிய அனைவரும் அவரவரின் கதாபாத்திரம் உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்க்ள்.
கார்ப்பரேட் வில்லனாக பிரவீன் மஞ்ச்ரேக்கர் ஓகே. ஒளிப்பதிவாளர் மனோஜின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து . இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் ஓகே . பின்னணி இசையில் இரைச்சல் அதிகம். . சினிமாவின் பல்வேறு கால கட்டங்களில் நாம் பார்த்த வழக்கமான பழிவாங்கும் ஆக்ஷன் படம் தான்.
முதல் படத்திலேயே இரட்டை வேடம் என்று களமிறங்கிய இயக்குனர் ரங்கராஜ் அவரது GUTS தைரியத்தை பாராட்டலாம் .
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 2.9/5