பரமசிவன் பாத்திமா திரைவிமர்சனம் rating 3.9/5

படம்: பரமசிவன் பாத்திமா
நடிப்பு: விமல், சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், எம்.சுகுமார், அருள்தாஸ், ஶ்ரீ ரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, வி. ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆருபாலா, வீரசமர், களவாணி கலை தயாரிப்பு: இசக்கி கார்வண்ணன் இசை: தீபன் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு: எம் சுகுமார் இயக்கம்: இசக்கி கண்ணன்பி ஆர் ஒ: நிகில் முருகன்
கதை .. open பண்ணா ..!
திண்டுக்கல் அருகே இருக்கும் சிறுமலை அந்த மலைதான் இந்தப் படத்தின் கதை களம்.அந்த மலையில் மூன்று ஊர்கள் இருக்கின்றன. ஒன்று ‘சுப்ரமணியபுரம்’. இன்னொன்று ‘யோகோபுரம்’. இன்னொன்று ‘சுல்தான்புரம்’. இதில் ‘சுப்பிரமணியபுரம்’தான் முதலில் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ்ந்து இருந்தபோது இருந்திருக்கிறது.
(ஆனால் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் அந்தப் பகுதிக்கு வந்த கிறிஸ்தவர்கள் சர்ச், பள்ளிக்கூடம் கட்டும்பொழுது கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அவர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பிலும், பள்ளியிலும், கல்வியிலும் முன்னுரிமை தரப்படும் என்று சொல்லி அவர்களை மன மாற்றம் செய்து, மதமாற்றமும் செய்தார்கள் .)
அப்படி மதம் மாற்றம் செய்யப்பட்டவர்கள் எல்லாம், ‘யோகோபுரம்’ என்கின்ற ஊருக்கு தனியாக வந்து குடி பெயர்ந்து விட்டார்கள். அந்த ஊரில்தான் இப்போது சர்ச் இருக்கிறது. உண்மையாக அந்த சர்ச் இருந்த இடத்தில் முன்பு மாரியம்மன் கோவில்தான் இருந்திருக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் சர்ச் கட்டிய பிறகு அந்த மாரியம்மன் சிலையை இப்போது மேரியம்மாளாக மாற்றி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் . அந்த சர்ச் பாதர் MS BASKAR
இந்த இரண்டு ஊர்களுக்கு இடையில் சதாசர்வகாலமும் சண்டைகளும், மோதல்களும் நடந்து கொண்டே இருப்பதால் சுப்ரமணியபுர எல்லையில் அந்நியர்கள் உள்ளே பிரவேசிக்க கூடாது என்று போர்டை ஊரின் எல்லையில் வைத்திருக்கிறார்கள். அது போல யோகோபுரம் எல்லையில் சாத்தான் களுக்கு அனுமதி இல்லை என்று போர்டை அந்த ஊரின் எல்லையில் வைத்திருக்கிறார்கள் ., அப்படி இருந்தும் இரு தரப்பிலும் சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் அந்த ஊரில் நடக்கும் திருமணத்தின்போது புது மாப்பிள்ளையை அன்றைய இரவில் விமலும், சாயாதேவியும் சேர்ந்து கொலை செய்து விடுகிறார்கள்.இறந்த சூசை யின் உடல் சுப்ரமணிய புற கோயில் அருகே கிடக்கிறது . இரண்டு கிராமமும் கலவர பூமியாக மாற போலீஸ் வருகிறது. போலீஸ் அதிகாரியாக இயக்குனர் இசக்கி கார்வண்ணன் வருகிறார் விசாரணை நடக்கிறது . ஆனால் கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை…ஊருக்குள்ள இருந்து யாரையும் வெளியில்விடாமல், வெளியிலிருந்து யாரையும் ஊருக்குள்ள அனுமதிக்காமல் தன்னுடைய விசாரணையை தொடங்குகிறார் இன்ஸ்பெக்டர்..இரு கிராமங்களின் எல்லையில் ஒரு செக் போஸ்ட் அமைத்து கொலைக்கான காரணமானவர் யார் என விசாரணை செய்கிறார்கள் ..இந்த சூழலில் துபாய் return கூல் சுரேஷ் திருமணம் செய்ய சில கட்டுப் பாடுகளுடன் போலீஸ் அனுமதி பெறுகிறார்கள் இரண்டாவதாக இந்த திருமணமும் நடைபெறுகின்ற சூழலில், அந்த புது மாப்பிள்ளை கூல் சுரேஷூம் ஏற்கெனவே நடந்தது போல விமல்-சாயா தேவியால் படுகொலை செய்யப்படுகிறார்.அவரது உடல் சர்ச் வாசலில் கிடக்கிறது. மீண்டும் இரு கிராம மக்கள் அடிதடிக்கு தயாராக ..
இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் புதுசா ஒரு திட்டம் போடுகிறார் ..இவருடைய விசாரணை என்னவானது.. விமலும், சாயாதேவியும் இவர்களை ஏன் கொலை செய்தார்கள்.. அவர்கள் வாழக்கையில் என்ன நடந்தது ??.. ஏன் அவர்கள் பழி வாங்க துடிக்கிறார்கள் ?? … இதற்கெல்லாம் விடை கிடைத்ததா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
விமலை விட சாயா தேவி இந்தப் படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். . அவர் அண்ணனை எதிர் கொள்கிற காட்சியாகட்டும் துணிச்சல் மிக்க பெண்ணாக மிளிறுகிறார் . அதே நேரதில் கொடூரமாக கொல்லப்படுகின்ற அந்தக் காட்சியில் நம்மை பரிதாபபட வைத்துவிடுகிறார்
விமலும், சாயாதேவியும் முதலில் அறிமுகமாகும்போது சாதாரண மனிதர்களாகத்தான் நினைக்க தோன்றும் . ஆனால், போகப் போக அவர்கள் இறந்தும் ஆத்மா வாக அலைகிறார்கள் என்ற உண்மை தெரியும்போது ஏன் எதற்க்கு என்கின்ற ஒரு உள் உணர்வும் நமக்குள் தோன்றுகிறது.படத்தின் இரண்டாம் பாதி இந்த நாட்டில் நடக்கும் கிறிஸ்தவ மதவாதிகள் எப்படி மதம் மாற்ற முயலுகிறார்கள்.. வெளிநாட்டு நிதி இவர்களுக்கு எப்படி வருகிறது.. அதை வைத்து தோட்டம் எஸ்டேட் வாங்க பண ஆசை காட்டுவது ..வெளிநாட்டின் fund தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயத்தில் சாயாதேவி யின் அண்ணன் ஃபெலிக்ஸ் தன் தந்தையே கொலை செய்கிறான் . ஃபெலிக்ஸ் செய்த சதியால் பரமசிவன் பாத்திமா எப்படி பாதிக்க பட்டார்கள் என்பதை நெற்றி பொட்டில் அறைந்தது போல சொல்லி உள்ளார் இயக்குனர் .
படத்தின் இரண்டாம் பாதி இயக்குனர் மிக தைரியமாக உண்மைகளை உரக்க சொல்லி உள்ளார் .. கிறிஸ்தவ மத மாற்ற கும்பல் சுப்ரமணியபுரதுக்குள் வந்து நோட்டீஸ் கொடுக்கும் போது ஆசிரியர் விமல் அவர்களை பார்த்து கேட்கும் கேள்விகள் AWESOME..அது போல அரசு சலுகை பெற்று கொண்டு அரசு சம்பளத்தில் இயங்கும் கிறிஸ்தவ பள்ளிகள் செய்யும் தவறுகளை விமல் தட்டி கேட்பது ராக்ஸ் ,,சாயாதேவி யின் அப்பா மனோஜ் குமார் தன் வேலைக்காக மதம் மாறி கிறிஸ்தவராக போனாலும் உள்ளுக்குள் இந்து மத கடவுள்கள் இறங்கி சாமியாடுகின்ற நிலைமையில் இருக்கும் மனோஜ்குமார் .. இவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஆதிரா அந்த ஒரேயொரு காட்சியில் அனைவரையுமே அசர வைத்து விட்டார் என்றே சொல்லலாம். மனோஜ் குமாருக்கு சாமி வந்தவுடன் அவரது வீட்டுக்குள்ளே சுத்தி சுத்தி கதறும் ஆதிராவின் அந்த நடிப்பு பாராட்டுக்குரியது. உள்ளுக்குள் மனோஜ் குமார் இயல்பு சுடலையாக வாழ்கிறார் ..அந்த காட்சிகளை ரொம்ப அற்புதமாக காட்டி உள்ளார் இயக்குனர்…!நம் நாட்டின் ஊர் எல்லையில் இருக்கும் சுடலைகள் நம் கூட வாழ்ந்து மறைந்த தெய்வங்களே .. பின்னணி இசை சுடலை வரவுக்கான ஆட்டம் தானாக படம் முடியும் போது அனைவருக்கும் வந்து போகும் ..!
மொதத்தில் பரமசிவன் பாத்திமா இயக்குனர் இசக்கி கார்வண்ணன் எடுத்த துணிச்சலான படம் . பாராட்டுக்கள் .. இனியும் இது போல உண்மைகளை உரக்க சொல்லுங்கள் ..!
பரமசிவன் பாத்திமா team ROCKS
நம்ம TAMILPRIMENEWS.COM rating 3.9/5