“ராஜபுத்திரன்” திரைவிமர்சனம் rating 3.4/5

“ராஜபுத்திரன்” திரைவிமர்சனம் rating 3.4/5

கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும், வெற்றியும் ,தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்கும் படம் ராஜபுத்திரன் .இப்படத்தில்கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

 

கதை open பண்ணா ..!

ராமநாதபுரத்தில் 1996 ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பிரபுவின் மகன் வெற்றி. மகன் வெற்றி மீது அளவுகடந்த பாசம் வைத்க்க்கிருக்கிறார் தந்தை பிரபு. ஒரு பெரிய வீடும் சிறிதளவு விவசாய நிலமும் உள்ள நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.இப்படத்தில் மகன் மீது உயிரை வைத்திருக்கும் செல்லையா, என்ற கதாபாத்திரத்தில் பிரபு.அப்பா மீது உயிரை வைத்திருக்கும்  பட்டா என்ற கதாபாத்திரத்தில் நாயகன் வெற்றி”..பள்ளியில் வாத்தியார் அடித்துவிட்டார் என்பதற்காக பள்ளிக்கூடம் அனுப்பாத தந்தை  தன் அப்பா பெயரை சொல்லி யாராவது திட்டி விட்டால் அவரை உண்டு இல்லை என்று செய்யும் மகன்
இந்த பாசப்பிணைப்பு

 இது ஒருபுறம் இருக்க ராமநாதபுரத்து இளைஞர்கள் வெளி நாடுகளில் வேலைபார்த்து தங்களது சம்பள பணத்தை பெற்றோர்களுக்கு உண்டி (ஹவாலா பணம்) மூலமாக அனுப்புகிறார்கள். அந்த பணத்தை கோமல் குமார் வேலையாட்களை வைத்து பட்டுவாடா செய்கிறார். இப்படி அரசுக்கு வரி ஏய்ப்பு செய்யும் தொழில் அதிபர்களின் கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றி ராமநாதபுரத்தில் அசைக்க முடியாதா தாதாவாக இருக்கிறார். கோமல் குமார் இருக்கும் நாற்காலியில் தாதாவாக அமரவேண்டுமென்று ஆர்.வி.உதயகுமார் திட்டமிடுகிறார். உதயகுமாருக்கு துணையாக கோமல் குமாரிடம் வேலை செய்யும் லிவிங்ஸ்டன் துரோக வேலை செய்கிறார்.

இது ஒருபுறமிருக்க வெற்றியும்  கிருஷ்ணபிரியாவும் காதலிக்கிறார்கள்.பட்டாவை காதலிக்கும் பூச்செண்டாக நாயகி,..பிரபுவுக்கு தோழனாக வரும் இமான் அண்ணாச்சி,  இப்படி இந்த கதாபாத்திரங்களை கிராமத்து மண்வாசனையோடு பாசத்தை குழைந்து பக்குவமாக கொடுத்திருக்கிறார்கள்..
படம் பார்ப்பதற்கு அவ்வளவு ரம்யமாக இருக்கிறது. அதோடு பிரபுவுக்கு தெரியாமல் கோமல் குமாரிடம் வேலை செய்கிறார் வெற்றி. கோமல் குமார் கொடுத்தனுபிய உண்டி  பணத்தை வெற்றி தொலைத்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த கோமல் குமார் வெற்றியை என்ன செய்தார்?. தொலைத்த பணத்தை சம்பாதிக்க வெளிநாடு செல்லவிருந்த வெற்றி வெளிநாட்டுக்கு சென்றாரா?. வெற்றியை காதலித்த கிருஷ்ண்பிரியா என்ன ஆனார்?. பலபேர்களை கொலை செய்த கோமல் குமாரும் லிவிங்ஸ்டனும் என்ன ஆனார்கள்?. மகனை கோமல் குமாரிடமிருந்து காப்பாற்ற பிரபு என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் மீதிக்கதை.

பிரபுவின் நடிப்பு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மகனின் நிலைகண்டு கொந்தளிக்கும் தந்தையின் மன நிலையை முகத்தில் தெரிக்கவிடுகிறார். தந்தைக்காகவே வாழ்கின்ற மகனை, வெற்றியின் நடிப்பில் காண முடிகிறது. காதலில் கனிவதையும் காதலனுக்காக வேங்கையாக பாய்வதிலும் கிருஷ்ணபிரியாவின் நடிப்பு கைதட்ட வைக்கிறது. திரையுலகில் இன்னொரு ரேவதி போல  பிரகாசிக்க வாய்ப்பிருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து லிவிங்ஸ்டனின் வில்லத்தனத்தில் விளாசுகிறார்.வில்லன் லிங்காவாக கோமல் குமார்,ஸ்டைலாக சுருட்டு பிடித்துக் கொண்டு, அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் இவர் செய்யும் வில்லத்தனம் கொடூரம் .   படத்தை கிராமிய சூழலில் நகர்த்தியிருக்கும் இயக்குநர் ஒரு கிராமத்து கதையை கமர்சியலாக எப்படி சொல்ல வேண்டுமோ அதை பாசம் ,காதல், மோதல் என்று கச்சிதமாக சொல்லி பாராட்டு  பெறுகிறார் இயக்குநர் மகா கந்தன்..!

ராஜபுத்திரன் பட குழுவிற்க்கு வாழ்த்துக்கள்

நம்ம tamilprimenews.com Rating 3.4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *