மனிதர்கள் திரைவிமர்சனம்

மனிதர்கள் திரைவிமர்சனம்

மனிதர்கள்

நடிப்பு: தமிழ் வேலன், தக்ஷா, அர்ஜுன் தேவ், சரவணன், குணவந்தன், சாம்பசிவம்   தயாரிப்பு: ஸ்டுடியோ மூவிங் டர்டில், ஶ்ரீ கிருஷ்ணா பிக்சர்ஸ்

இசை: அனிலேஷ் எம் மேத்யு   ஒளிப்பதிவு: ஆபிரகாம் ஜார்ஜ்  இயக்கம்: இராம் இந்திரா  பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா

 

 

கதை .. open பண்ணா ..

இரவு நேரத்தில் 6 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்துகிறார்கள். போதை தலைக்கேறி ஒருவருக்கொருவர் வாய்த்தகறாரில் ஆரம்பித்து கைகலப்பில் ஒருவர் இறந்துவிடுகிறார். நண்பரில் ஒருவர் மரணமுற்றத்தும் தலைக்கேறிய போதை இறங்கி அச்சம் அவர்களை பற்றிக்கொள்கிறது. இறந்தவரின் உடலை யாருக்கும் தெரியாமல் அந்த உடலை புதைத்து விட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்க மற்ற ஐவரும் முடிவு செய்கிறார்கள்.. அவர்களது முடிவு அவர்களை எந்த நிலைக்கு தள்ளுகிறது என்பதுதான் மீதிக்கதை… மனிதர்களின் யதார்த்த மனநிலையை .. ஒரு இரவில் நம் கண்முன்னே திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் ராம் இந்திரா.. வித்தியாசமான  கதையோட்டமென்றாலும் படமுழுக்க அதே முகங்கள்  ஒரே  இரவு என்பதால் பொறுமை சோதிக்கப்படுகிறது.. அதில் ஒரு  நபர் காட்டு கத்தல் போடுகிறார் பாக்கிறவர்களுக்கு  தலைவலி வருகிறது ..திரைகதை முடிவில் என்ன தான் சொல்ல வறீங்க .. உங்க திரைகதை மேல் மட்ட அறிவுஜீவிகளை நம்பி எடுக்க பட்டதா ..?  

 

திரைத்துறை வல்லுனர்கள் எக்ஸ்ட்ரா மூளை உள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம் இது .ஆனால் பொது மக்கள்  காசு கொடுத்து படம் பார்க்க வரும் சாமானியர்  மனநிலையை இயக்குநர் மறந்திருப்பது அநியாயம் ..! இது உங்கள் அறிவு சார் படம் .. இதை  பிலிம் ஃபெஸ்டிவல் worldwide நடக்கும் போது அங்கு திரை இட்டால் கை தட்ட லுடன் award  கிடைக்கும் ..!.குறும்படமாக வர வேண்டிய கதை நீண்ட படமாக திரையில் ஓ…..ட… !!!  இருப்பினும் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரஹாம் ஜார்ஜும் இசையமைப்பாளர் அனிலேஷ் மேத்யூவும் இருவருக்கும் வாழ்த்துக்கள் ..!

மனிதர்கள் .. இயக்குனர் சாமானிய ரசிகனை படிக்கணும் ..!இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டுக்கள் ..!

நம்ம tamilprimenews.com Rating 2.4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *