ஜின் தி பெட்..திரைவிமர்சனம் RATING 3.2/5

ஜின் தி பெட்..திரைவிமர்சனம் RATING 3.2/5

ஜின் தி பெட்

நடிப்பு: முகன் ராவ் பவ்யா ட்ரிக்கா, வடிவுக்கரசி, பால சரவணன், ராதாரவி, நிழல்கள் ரவி, வினோதினி, ரித்விக்   தயாரிப்பு: டி ஆர் பாலா

இசை: விவேக் -மெர்வின்  ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா    இயக்கம்: டி ஆர் பாலா   பிஆர்ஓ: நிகில் முருகன்

 

கதை .. open பண்ணா ..!

முகேன் ராவ் மலேசியாவிலுள்ள ஒரு  நடச்திர விடுதியில் மாலை நேரத்து பாடகராக் 5 வருட ஒப்பந்தத்தில் பணியாற்றுகிறார். ஒப்பந்த காலம் முடிவுற்றவுடன் சென்னைக்கு திரும்புகிறார்.. முன்னதாக  ஊருக்கு திரும்பும்போது முகேன் ராவ், பழங்காலப் பொருட்களை விற்கும் ஒரு சீனக் கடையிலிருந்து ஒரு ஜின்னை (மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் இருப்பதுபோல், கண்ணுக்கு தெரியாத நல்லது கெட்டதுகளை செய்யக்கூடிய ஒரு இனம்). வாங்கி வருகிறார்.அதை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும் என்று எண்ணி தன் வீட்டிற்கு வாங்கி வருகிறார். வீட்டில் ஜின்னை, நாய்க் குட்டி போல் பிஸ்கட், பால் வைத்து வளர்க்கிறார். முகன் ராவிற்கு காதல், சந்தோஷம் எல்லாம் சேர்ந்தாலும் குடும்பத்தினருக்கு அவ்வப்போது சோகங்கள் ஏற்படுகிறது.முகேனின் அப்பா இமாம் அண்ணாச்சி, அம்மா வடிவுக்கரசி, அக்கா விநோதினி ஆகியோர் ஜின்னை பேய் என்று நினைத்து பயப்படுகிறார்கள்.. ஜின்னால்தான் இந்த சோகம் ஏற்படுகிறது என்று குடும்பத்தினர் கூறினாலும் அதை முகன் ராவ் ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் தன் காதல் மனைவி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடையும் முகன் ராவ், தனது மனைவியை ஜின்தான் கொலை செய்ய முயற்சித்திருக்கிறது என்று நினைத்து ஜின் இருக்கும் பெட்டியை தெருவில் வீசிவிடுகிறார் முகேன். உண்மையில் பவ்யாவை  கொலை செய்ய முயற்சி செய்தது யார்? எதற்காக?. வெளியே வீசிய ஜின் என்னானது? என்பதுதான் மீதிக்கதை..

 

மலேசியாவில் பழங்கால கடைக்கு சென்று ஜின் பெட்டியை வாங்கும் போது ஒரு அதிர்வலை ஏற்படுவது ஆவலை தூண்டுகிறது.   ஜின் பெட்டியை தன் வீட்டிற்கு எடுத்து வந்ததும் அதை பார்த்து வடிவுக்கரசி உள்ளிட்ட குடும்பத்தினர் பயப்படுவதும், இரவில் 12 மணிக்கு மேல் ஜின்னிற்கு பாலும் பிஸ்கட்டும் சாப்பிட தர வேண்டும் என்று சொல்ல அதைக் கேட்டு பயந்தபடி வினோதினி பால், பிஸ்கட் இரண்டையும் ஜின் பெட்டிக்குள் வைக்க படும்பாடு என்ன நடக்குமோ என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது.

ஹீரோ முகன் தன் கதாபாத்திரத்தை எந்தவித அலட்டலும் இல்லாமல் செய்வதும், யார் கண்ணுக்கும் தெரியாத ஜின்னிடம் பேசி மற்றவர்களை குழப்புவதும் காமெடி.முகுன் ராவ் காதலியாக பவ்யா நடித்திருக்கிறார். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். . நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட இமாம் அண்ணாச்சி குணச்சித்திர நடிகராக திரையில் காட்சியளிக்கிறார்… வடிவுக்கரசி தன் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள் கைதேர்ந்தவர். அதை அழகாக கையாண்டிருக்கிறார் வடிவுக்கரசி… அதேபோல்  வயோதிகத்திலும் வில்லத்தனம் செய்ய முடியும் என்பதை ராதாரவி இப்படத்தில் நிரூபித்திருக்கிறார்.

குழந்தைகளை ரசிக்க வைக்கும் இந்த ஜின் பேய் அல்ல. மனிதர்களைவிட பல்லாயிரம் மடங்கு சக்தி பெற்ற  ஒரு இனம் என்பதை ஜினின் காமெடி பேச்சு மூலம் காட்டிய இயக்குநர்… மேலும் ஜின்னின் சேட்டைகளை முனபாதியில் இன்னும் கொஞ்சம் மசாலா கலந்து விறுவிறுப்பாக திரைக்கதையை  நகர்த்தி இருந்தால் வெற்றி பட வரிசையில் சேர்ந்திருக்கும் இந்த”ஜின் தி பெட் ” ..!

இயக்குனர்  டி ஆர் பாலா மற்றும் மூவி team congrats ..!

நம்ம tamilprimenews.com RATING 3.2/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *