நரிவேட்டை திரைவிமர்சனம் Rating 3.9/5

படம்: நரிவேட்டை
நடிப்பு: டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சார்மூடு, சேரன், ஆர்யா சலீம், தயாரிப்பு: திப்புசான் சியாஸ் ஹாசன் இசை: ஜாகெஸ் பிஜாய் ஒளிப்பதிவு: விஜய்
இயக்கம்: அனுராக் மனோகர் பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்.
கதை .. open பண்ணா ..
அரசு வேலை அதிலும் பெரிய வேலைக்குதான் செல்வேன் என்று முடிவு செய்து கொண்டு வரும் வேலையெல்லாம் விட்டுவிட்டு பொழுதை கழிக்கிறார் டொவினோ தாமஸ். இதனால் அவரை காதலிப்பவரும் பிரிந்து செல்கிறார் வேறுவழியில்லாமல் தேடி வந்த கான்ஸ்டபிள் வேலையில் சேர்கிறார்.இந்த கதை காதலுக்காகத்தான் நகரப் போகிறது என்று பார்த்தால் ..,ஒருநாள் காட்டுப்பகுதியில் நடக்கும் பழங்குடியினர் நடத்தும் போராட்டத்தை தடுக்க செல்லும் போலீஸ் படையுடன் செல்கிறார் டொவினோ. சுராஜ் வெஞ்சார்மூடு இவருடன் நட்பாக …அங்கு நடக்கும் கலவரத்தில் அரசியல் புகுந்து நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்களை நிகழ்த்தி எதிர்பார்க்காத வேறொரு களத்துக்கு கதை நகர்வதெல்லாம் இயக்குநரக்கு hatsoff ... .அங்கு நடக்கும் கலவரத்தில் டொவினோ குற்றவாளி ஆக்கப்படுகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பது நரி வேட்டை படத்தை உருவாக்கி இருக்கிறது..!
இன்ப அதிர்ச்சியாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நம்மூர் டைரக்டர் சேரன் நடித்திருக்கிறார். திரையில் அவர் முகத்தைப் பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டாலும் நடிப்பில் . நெகட்டிவ் கதாபாத்திரம் இருந்தாலும் வேண்டாம் என்றும் மறக்காமல் அதை ஏற்று மிரட்டலாக நடித்திருப்பது அருமை .
திப்புசான் சியாஸ் ஹாசன் தயாரித்திருக் கின்றனர் ..ஜாகெஸ் பிஜாய் இசை . விஜய் ஒளிப்பதிவு ராக்ஸ்
அனுராக் மனோகர் இயக்கத்தில் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை தருகிறது.
நரிவேட்டை – காட்டில் வாழும் ஆதி வாசி மக்களை வெளியேற்ற கேரளாவில் நடந்த சம்பவம் .
நம்ம tamilprimenews,com Rating 3.9/5