மையல் திரை விமர்சனம்

மையல்
நடிப்பு: சேது, சம்ருதி தாரா, பி எல் தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணியன், ரத்னகலா, சி எம் பாலா
தயாரிப்பு: அனுபமா விக்ரம் சிங், வேணுகோபால்.ஆர். இசை: அமர்ஜித்.எஸ். ஒளிப்பதிவு: பாலா பழனியப்பன் கதை வசனம்: ஜெயமோகன்
இயக்கம்: ஏ பி ஜி ஏழுமலை பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
கதை open பண்ணா ..
சேது (மாடசாமி) ஒரு ஆடு திருடன். கிடையில் இருக்கும் ஆட்டை திருடிக் கொண்டு ஓடும்போது ஊர்காரர்களிடமிருந்து தப்பிக்க கிணற்றில் விழுந்து விட அவரை நாயகி சம்ருதி தாராகாப்பாற்றி அப்பகுதியில் உள்ள சூன்யகாரி வீட்டுக்குள் கூட்டி போய் வைத்தியம் பார்க்க … சூனியகாரி மகள் சேது மீது காதல் கொள்கிறாள். அவளை மணப்பதற்காக திருட்டு தொழிலை விட முடிவு செய்கிறான் சேது..
நாயகனை காதலிக்கும் நாயகிக்கு அவளின் மந்திரவாதி பாட்டி எதிர்த்து நிற்க, ஆடு திருடும் நாயகனை ஊரைவிட்டு அனுப்பிவிட, சொந்த ஊருக்கு சென்ற நாயகன், தன் வீட்டை விட்டு வெளியேறி நாயகியை மணமுடிக்க வரும்போது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. . .ஊரில் யாரோ செய்த இரட்டை கொலை பழி இவர் மேல் விழ. போலீஸ் சேது வை கைது செய்கிறது அதன் பிறகு எதிர்பாராத அதிர்ச்சி சம்பவங்கள் நடக்கின்றன அது என்ன என்பது கிளைமாக்ஸ்…மையல் என்றால் காதல் என்றும் அர்த்தம். திருடன் ஒருவனுக்கு இளம் பெண் மீது காதல் மயக்கம் ஏற்படுகிறது அது அவனை என்ன பாடு படுத்துகிறது என்பதை எல்லாம் திரைக்கதை எதிர்பாராத திருப்பபங்களுடன் சொல்லி நகர்த்துகிறது.
நாயகன் சேது மாடசாமி பாத்திரத்தில் ஒரு எதார்த்த கிராம வாசியாக சேது வாழ்ந்திருக்கிறார். ஹீரோ என்ற இமேஜ் எல்லாம் பார்க்காமல் கதாபாத்திரத்தை உணர்ந்து குணச்சித்திர நடிகராக மட்டுமே கண் முன் நிற்கிறார்.. இவர் மைனா படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் தோன்றியவர். அதன் பிறகு மையல் படம் மூலம் நாயகனாக வலம் வருகிறார். தமிழ் கதாநாயகனுக்குரிய பரட்டை முடி, தாடி, லுங்கி என ஒரு நாயகனாக நம் முன் வந்தாலும் தன் நடிப்பில் வேறு எந்த ஒரு தனித்தன்மை இந்த கதையில் இல்லாதது சேதுவை ஹீரோ வாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
நாயகி சம்ருதி தாரா தமிழ் திரைக்கு கிடைத்திருக்கும் இன்னொரு அழகு பதுமை .. இவர் தமிழ் சினிமாவில் இனி ஒரு வலம் வரலாம் அவரது சிரிப்பு மையல் கொள்ள வைக்கிறது .ஒவ்வொரு பிரேமிலும் சம்ருதி சிரிக்க தவறவில்லை அதில் ரசிகர்களும் மயங்க தவறவில்லை. இப்படி சிரித்துக் கொண்டிருக்கும் கதாநாயகிக்கு கிளைமாக்சில் இப்படி ஒரு கதியா என்று கதி கலங்க வைக்கிறார் இயக்குனர்..1!
கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார் ஜெயமோகன் . இவரது கதை என்றாலே அதற்கு ஒரு ரசிகர் வட்டாரம் உண்டு. அதை ஏற்கனவே சில படங்கள் நிரூபித்திருக்கின்றன. ஆனால் இந்த கதையை பொறுத்தவரை .. இரவு நேர படப்பிடிப்பு, , வில்லன்கள் ஒன்று சேர்ந்து நாயகியை சீரழிக்கும் கொடூரம் ,திருந்தி வாழ நினைக்கும் நாயகனை சீரழிக்கும் காவல்துறை, அதிகாரி இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சிறப்பு சேர்த்து இயக்கியிருக்கிறார். ஆனால் மையல் மாபெரும் வெற்றி பெற வேண்டிய இடத்தில் இரண்டாம் பாதி காட்சி அமைப்புக்கள் திரைக்கதையை அமெச்சூர் தனமாக கொண்டு போன விதம். ரசிகர்கள் மனசை இந்த மையல் கொள்ள தவறியது ஏன் என்பது இயக்குனர் ஏபிஜி ஏழுமலை க்கு புரியும் ..
நம்ம tamilprimenews.com rating 2.4/5