ஏஸ் (ACE) திரைவிமர்சனம் Rating 3.8/5

ஏஸ் (ACE) திரைவிமர்சனம்  Rating 3.8/5

படம்:ஏஸ் (ACE)

நடிப்பு: விஜய்சேதுபதி, ருக்மணி வசந்த், யோகிபாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ் திவ்யா பிள்ளை, முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ்  தயாரிப்பு: ஆறுமுக குமார்  ஒளிப்பதிவு: கிரண் பகதூர் ராவத்

இசை: ஜஸ்டின் பிரபாகரன், சாம் சி எஸ் இயக்கம்: ஆறுமுக குமார்  பி ஆர் ஒ: யுவராஜ்

கமர்ஷியலான ஒரு படத்தில் எப்படி காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்திருக்க வேண்டுமோ அப்படி உருவாகியிருக்கிறது ஏஸ் .

 

கதை open பண்ணா ..!

 தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு செல்கிறார் விஜய் சேதுபதி. விமான நிலையத்தில் தன் உறவினனின் சிபாரிசில் வேலைக்கு வரும் நபருக்காக காத்திருக்கிறார் யோகிபாபு. தான் எதிர்பார்த்திருக்கும் நபர் விஜய் சேதுபதிதான் என நினைத்து, அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் யோகிபாபு. மலேசியாவில் தனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாததால் யோகிபாபுவோடு செல்கிறார். அவரை யோகி பாபு தன் ஒருதலை காதலி திவ்யா வின் கடையில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். விஜய் சேதுபதி. யோகிபாபுவின் எதிர் வீட்டில் குடியிருக்கும் ருக்குமணியை  பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார் விஜய் சேதுபதி. ருக்குமணி தன் வளர்ப்பு தந்தையான பப்லுக்கு  ரூ.10 லட்சம் வெள்ளி  கொடுக்க வேண்டியிருக்கிறது. அதேபோல் யோகிபாபு ஆசைபடும் திவ்யாவின் அம்மாவின் மருத்துவ செலவுக்கும் பணம் தேவைபடுகிறது. இப்பணத்தை சம்பாதிக்க விஜய்சேதுபதியும் யோகிபாபுவும் வில்லன் அவினாஷ் நடத்தும் சூதாட்ட விடுதிக்கு சென்று சூதாடுகிறார்கள். சூதாட்டத்தில் விஜய் சேதுபதி வில்லன் அவினாஷிடம் ரூ.10 கோடி மலேசிய பணத்துக்கு  கடனாளியாகிவிடுகிறார். இந்த கடனை சமாளிக்க விஜய் சேதுபதியும் யோகிபாபுவும் ஒரு வங்கியில் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளயடிக்கப்பட்ட பணம் இந்திய மதிப்புக்கு ரூ. 40 கோடி என்று தெரிய வருகிறது. இவர்கள் இருவரையும் போலீஸ் தேடுகிறது.

இந்த நேரத்தில் அதிர்ஷ்டம்  விஜய் சேதுபதி வாங்கிய லாட்டரி சீட்டுக்கும் ரூ.40 கோடி கிடைக்கிறது. இந்த மொத்த பணத்தையும் விஜய் சேதுபதியிடமிருந்து கொள்ளையடிக்க வில்லன்கள் அவினாஷும் பப்லுவும்   தனித்தனியாக முயற்சிக்கிறார்கள். அந்த் பணம் என்னானது?. பப்ளுவிடம் சிக்கியிருக்கும் ருக்குமணியும் அவினாஷிடம் சிக்கியிருக்கும் திவ்யாவும் மீட்கப்பட்டார்களா?. போலீசிடமிருந்து இருவரும் தப்பினார்களா?. விஜய் சேதுபதி உண்மையில் யார்?.அடுத்து நடப்பது என்ன . என்பதை நகைசுவையோடு  சொல்லுவதுதான் மீதிக்கதை..!

விஜய் சேதுபதியின் நடிப்பு ராக்ஸ்.. மலேஷியா வீதிகளில் முழுக்க விஜய் சேதுபதியுடன் பயணித்திருக்கும் யோகிபாவுவின் நகைசுவை காட்சிகள் ரசிக்கலாம் . . ருக்குமணியின் அலட்டல் நடிப்பும் திவ்யாவின் கவர்ச்சி சிரிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. வில்லத்தனத்தை காட்டுவதில் அவினாசும் பப்லு வும் போட்டிப் போட்டு நடித்துள்ளார்கள். . இரண்டரை மணி நேரத்தை சலிப்புத்தட்டாமல் விறு விறுப்பாக commercial படமாக்கியிருக்கும் இயக்குநர் ஆறுமுக குமார் மற்றும்   ACE படக்குழுவிற்க்கு பாராட்டுக்கள் .

மொத்தத்தில் ஏஸ் (ACE) குடும்பத்துடன் போய் மலேஷியா சுற்றி பாரத்த உணர்வை உண்டாக்கும் ..!

நம்ம tamilprimenews.com Rating 3.8/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *