டிடி நெக்ஸ்ட் லெவல். திரைவிமர்சனம் RATING 3.2/5

படம்: டி டி நெக்ஸ்ட் லெவல்
நடிப்பு: சந்தானம், கீதிகா திவாரி, கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, மாறன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் தயாரிப்பு: நடிகர் ஆர்யா, வெங்கட் இசை: ஆப்ரோ ஒளிப்பதிவு: தீபக் குமார் இயக்கம்: எஸ். பிரேம் ஆனந்த் பி ஆர் ஓ: நிகில் முருகன்
சந்தானம் நடித்து ஏற்கனவே வந்த டிடி ஒன், டிடி ரிட்டர்ன்ஸ் படங்களைத் தொடர்ந்து அதே பாணியில் இந்த பேய் வந்திருக்கிறது டிடி நெக்ஸ்ட் லெவல்.
சந்தானம் திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்பவர். பல படங்களை அவர் நெகட்டிவ் விமர்சனம் செய்த நிலையில் உங்கள் குடும்பத்துக்காக ஸ்பெஷல் ஷோ போடுகிறோம் தியேட்டருக்கு வாருங்கள் என்று அழைப்பு வருகிறதுஅந்த அழைப்பின் பேரில் அவரது குடும்பம் புதிய படம் பார்க்கும் ஆர்வத்தில் அந்த திரையரங்கத்திற்கு செல்ல…அந்த தியேட்டர் பேய் ஆளும் தியேட்டர் என்பதால். உள்ளே வந்தவர்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு தடைகள் ஏற்படுகிறது. குறிப்பாக திரையில் படம் ஓடும்போது அந்த திரைக்குள்ளேயே சென்று படத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள் .
அது ஒரு பேய் கதை…சைக்கோ கிரைம் திரில்லர் படமான அதில் சிக்கிக் கொண்ட தனது குடும்பத்தினர், படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை அறிந்து அதிர்ந்து போகும் சந்தானம், அந்த சிக்கலில் இருந்து தன் குடும்பத்தை எப்படி மீட்கிறார் என்பதை. அந்த பேய்களிடமிருந்து சந்தானம் தப்பித்து வந்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற ஒரு கண்டிஷனை தியேட்டரில் இருக்கும் பேய் கூறுகிறது. திரையில் ஓடிய சினிமாக்குள் பேய்களிடம் சிக்கிய சந்தானம் அவரது குடும்பம் மற்றும் காதலியின் கதி என்ன ஆனது..? சந்தானம், அந்த சிக்கலில் இருந்து தன் குடும்பத்தை எப்படி மீட்கிறார் ? என்பதை காமெடி கலாட்டாவாக சொல்லி உள்ளார் இயக்குனர் ..!
மொட்டை ராஜேந்திர னுக்கு எலி காமெடி, நிழல்கள் ரவிக்கு டாய்லெட் காமெடி, ரெடின் கிங்ஸ்லிக்கு சொம்பு காமெடி, மாறனுக்கு கஸ்தூரியை சைட் அடிக்கும் காமெடி…???, கௌதம் மேனனுக்கு யாசிகாவை காதலிக்கும் காமெடி என்று ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு காமெடி எபிசோடை இயக்குனர் உருவாக்கியிருப்பது படத்தை கொஞ்சம் கலகலவென்று நகர்த்த உதவி இருக்கிறது…இவர்கள் எல்லோரையும் அரவணைத்தும் பேய்களுக்கும் ஈடு கொடுத்து, எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் காமெடி பன்ச் கொடுத்து படம் முழுவதையுமே கலகலப்பு மூடுக்கு மாற்றியிருக்கிறார் சந்தானம்..!.நாயகியாக வரும் கீத்தி திவாரி பேயாக நடிப்பில் ரசிக்க வைக்கிறார்… கெளதம் மேனன், செல்வராகவன், நிழல்கள் ரவி,…ர(சிரி)க்க வைக்க முயற்சி செய்கிறார்கள்
இவர்களை விட கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் இருவரும் கிளாமர் காட்டுவதில் போட்டி போட்டு அதில் கஸ்தூரி வெற்றி பெறுகிறார்… மொட்டை ராஜேந்திரனுடன் சேர்ந்து சந்தானம் அடிக்கும் காமெடிக் களேபரம் கலகலப்பாக்குகிறது.லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லியும் சிரிப்பு பெரிய அளவில் இல்லை
இசையமைப்பாளர் ஆப்ரோ இசை பின்னணி இசை ஹாரர் காட்சிகளை ரசிக்க வைக்கின்றன..ஒளிப்பதிவாளர் தீபக் குமார் harror மூவி என்ன கேட்குதோ அதை தீபக் “பக் பக்” என காட்சிப்படுத்தி உள்ளார் ..!
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் திரைக்கதை காமெடி இன்னும் தூக்கலாக இருந்திருக்கலாம் ..!
டிடி நெக்ஸ்ட் லெவல்… (சந்தானம் பேய்களை விட்டு விலகி வருவது நல்லது )
நம்ம TAMILPRIMENEWS.COM RATING 3.2/5