ஜோரா கைய தட்டுங்க திரைவிமர்சனம்

ஜோரா கைய தட்டுங்க திரைவிமர்சனம்

படம்: ஜோரா கைய தட்டுங்க

நடிகர்கள்  யோகி பாபு, சாந்தி ராவ், ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகீர் அலி அருவி பாலா,  தயாரிப்பு: ஜாகிர் அலி   இசை: எஸ்.என்.அருணகிரி

ஒளிப்பதிவு: மது அம்பட்   இயக்கம்: வினிஷ் மில்லினியம், பிரகாஷ். கே.   பி ஆர் ஓ :; சதீஷ் S2

 

கதை open பண்ணா ..

யோகி பாபுவின் தந்தை புகழ்பெற்ற மேஜிக் நிபுணர்.தன் தந்தையைப் போலவே தானும் மேஜிக் நிகழ்ச்சிகள் செய்து புகழ் பெற நினைக்கிறார் யோகி பாபு.ஆனால் அதில் அவருக்கு தோல்விதான் ஏற்படுகிறது..ஒரு முறை பார்வையாளர்களாக வந்த ஒரு சிறுமியை வைத்து மேஜிக் செய்யும்போது ஏற்பட்ட தவறால் சிறுமி பலத்த காயம் அடைகிறாள்.  மேஜிக் பார்க்க வந்தவர்கள் யோகி பாபுவுக்கு தர்ம அடி கொடுப்பதுடன் போலீசிலும் ஒப்படைக்க, அவர்களும் அடி கொடுத்து அனுப்புகிறார்கள்…1

யோகி பாபு வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் மூன்று இளைஞர்கள் அவருக்கு தேவையில்லாமல் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருவதையே தொழிலாக வைத்திருக்கின்றனர்…இந்த இளைஞர்களில் ஒருவன் யோகி பாபுவின் கையை வெட்டுவதற்கு அமெச்சூர்  ரவுடிகள் இருவரை ஏற்பாடு செய்கிறான். அவனும் யோகி பாபு கையை வெட்டுகிறான்….மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் யோகி பாபு திடீரென்று காணாமல் போகிறார்…கையை வெட்ட சொன்ன இளைஞனும் கல்லறைப் பகுதியில் பிணமாக கிடக்கிறான்.அதை  தொடர்ந்து மேலும் சில கொலைகள் நடக்கின்றன.இந்தக் கொலைகளை செய்வது யார்?  காணாமல் போன யோகி பாபு என்ன ஆனார் என்பதுதான் ஜோரா கை தட்டுங்கள்  பட திரைக் கதை ..!

யோகி பாபு  போலீஸ் நிலையத்தில் அடி வாங்குகிறார், ரவுடிகளிடம் அடி வாங்குகிறார், மாஜிக் செய்து தோல்வி காண்கிறார்… இப்படியே அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பது   வழக்கமான அவரது கிண்டல் கேலி பேச்சுக்கள்தான் ரசிகர்களை சிரிக்க வைக்கும். இந்த  படத்தில் அதற்கான வாய்பும் இல்லை…  சிரிக்க வைக்க அவர்  எடுத்த சின்ன  முயற்சி கூட  எடுபடவில்லை ..!.

மது அம்பட் கேமிரா நீலகிரி அழகை அழகாக பதிவு செய்துள்ளது ,ஹரிஷ் பெராடி போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் கால்ஷீட் வீனடிக்க பட்டுள்ளது . அவரை இன்னும் பயன் படுத்தி இருக்கலாம் .. ஜாகிர் அலி படத்தை தயாரித்திருப்பதுடன் நடித்தும் இருக்கிறார்…எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார்…

இயக்குனர்கள் வினிஷ் மில்லினியம், பிரகாஷ் கே.  யோகி பாபுவுக்கு ஏற்ற கதை எழுதி இருந்தாலும் திரைக்கதையில்  இன்னும் மெனக்கெட்டு இருந்தால் விறு விறுப்பாக  வந்திருக்கும் ,,!

ஜோரா கைய தட்டுங்க

நம்ம tamilprimenews.com Rating 2.4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *