லெவன் திரைவிமர்சனம்

லெவன் நடிப்பு: நவீன் சந்திரா, அபிராமி, திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜெய் தயாரிப்பு: அஜ்மல் கான், ரேயா ஹரி இசை: டி.இமான்
ஒளிப்பதிவு:கார்த்திக் அசோகன் இயக்கம்:லோகேஷ் ஜெல்ஸ் பி ஆர் ஒ: நிகில் முருகன்
கதை open பண்ணா ..!
முகமூடியணிந்த மர்ம கொலையாளி ஒருவன், சில நபர்களை கொலை செய்து அரைகுறையாக எரித்து போடுகிறான்..அவனை கைது செய்ய முடியாமல் காவல்துறை திணறுகிறது. தொடர்ச்சியாக இந்த கொலைகள் நடப்பதால் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது. விசாரணையில் வெவ்வேறு விஷயங்கள் வெளியாகிறது. கொலைகாரன் 11 நபர்களை கொலை செய்வதற்க்காக அலைகிறான் என்பது தெரிய வருகிறது . அந்த கொலையாளி யார்? எதற்காக 11 நபர்களை கொலை செய்கிறான்… என்பதுதான் படத்தின் கதை …இவன்தான் கொலைகாரன் என்று ஒரு முடிவுக்கு வரும்போது திடீர் திருப்பம் ஏற்படுகிறது. என்ன திருப்பம் .. கொலையாளி பிடிபட்டானா ..? என்பதை இறுதிவரை திருப்பங்களுடன் நம்மை கொண்டு போகிறது லெவன் ,,,!
காவல்த்துறை துணை கண்காணிப்பாளர் நவீன் சந்திரா… இறுக்கமான முகத்துடனே நடித்திருக்கிறார். படம் முழுக்க தானே கதையின் போக்கை சுமந்து செல்லும் நவீன் சந்தராவின் நடிப்பு பாராட்டுதலுக்குரியது .இசையமைப்பாளர் டி.இமான் ஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்கு தேவையான இசையை கொடுத்து மிரட்டி உள்ளார் .அபிராமி இரண்டாம் பாதியில் வருகிறார் .. ரொம்ப அருமையான கதா பாத்திரம் அவருக்கு..அசத்தி உள்ளார் ..!
திரைக்கதையின் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் படத்தை திறைமையாக காட்சிபடுத்தியுள்ளார்.. ஆகவே கதையை மேலும் சொல்ல விடாமல் தடுக்கிறது . படம் பார்க்கும் போது அந்த சுவாரஸ்யம் கிடைபது உறுதி … குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் மிரமிக்க வைக்கிறது. இயக்குநர் லோகேஷ் அஜ்லிஸ் அவரது டீம் அனைவருக்கும் hatsoff ..!
.மொத்தத்தில் லெவன் அருமையான suspense திரில்லர் movie
நம்ம tamilprimenews.com Rating 3.7/5