நிழற்குடை திரைவிமர்சனம்

நிழற்குடை திரைவிமர்சனம்

நிழற்குடை

நடிப்பு: தேவயானி, விஜித், கண்மணி, ஜி . வி. அஹானா அசினி, நிஹாரிகா, ராஜ்கபூர், இளவரசி, வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன் சிவா, ஆண்டர்சன், அக்ஷரா, கவிதா ரவி, மனோஜ்குமார், பிரவின்  தயாரிப்பு:சிவா ஆறுமுகம்  இசை: நரேன் பாலகுமார்  ஒளிப்பதிவு: ஆர் பி.குருதேவ்  இயக்கம்: சிவா ஆறுமுகம்  பி ஆர் ஒ: A. ஜான்

கதை ஓபன் பண்ணா…

விஜித், கண்மணி இருவரும்  மதம் மாறி திருமணம் செய்ததால் அவர்களை உறவினர்கள் தள்ளி வைக்கின்றனர். தனியாக வாழும் இவர்கள்  தங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள ஒரு பெண்ணை நியமிக்கின்றனர்.. அவளோ .குழந்தையை கவனிக்காமல் தூக்க மருந்து கொடுத்து விட்டு  தன் காதலனை வீட்டுக்கு வர வைத்து ஜாலியாக ல் இருக்கும் அவரை ஒரு சூழலில் வீட்டில் குழந்தை மயங்கி  விழ…,அப்போ தான் நடப்பது என்ன என்பதை cctv  உதவியுடன் அந்த பெண்  செய்யும் தவறுகளை கண்டு பிடித்து வீட்டை விட்டு  விரட்டிவிடுகிறார்கள் ..

தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையின் கேர் டேக்கராக தேவயானியை வேலையில் அமர்த்துகிறார்கள். தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால் குழந்தையும் அவரிடம் பாசத்தோடு ஒட்டிக்கொள்கிறாள். இதற்கிடையே, அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கும் விஜித் – கண்மணி தம்பதிக்கு விசா கிடைத்து விட… தேவயானியை தாய்க்கும் மேலாக நேசிக்கும் அந்த குழந்தை …அமெரிக்காவுக்கு தேவயானியும் வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறது.இதற்கிடையே, அமெரிக்கா புறப்படுவதற்கு முந்தின இரவு குழந்தை திடீரென்று காணாமல் போக.

தங்கள் அமெரிக்கா பயணத்தை தடுக்க இதை செய்திருக்கலாம் என்று நினைக்கும் குழந்தையின் பெற்றோர், சிலர் மீது புகார் அளிக்கிறார்கள். அதன்படி, அவர்களிடம் போலீஸ் விசாரித்தும் குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் போக… குழந்தையை கண்டு பிடித்தார்களா?, தேவயானியை விட்டு பிரிய மறுக்கும் குழந்தையின் நிலை என்ன? என்பதை நெஞ்சுக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி, அந்த கேரக்டரில் ஒரு பாசமுள்ள தாயை பிரதிபலிக்கிறார். குழந்தை காணாமல் போன நிலையில் போலீசின் சந்தேகம் தன் மீது திரும்பும் இடத்தில் அவரது நடிப்பும் உடல் மொழியும் வேறு லெவல். குழந்தை மீது அவர் காட்டும் அன்பும், அக்கறையும் தாய்மையின் பரிபூரண அடையாளம். வசதியாக வாழ்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழும் பெற்றோராக சுஜித்- கண்மணி நடிப்பில் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிகாரிகா சிறப்பு.ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா இசை அனுபவ நடிப்பில் காட்சிக்கு பலம் சேர்க்கிறார்கள்.வித்தியாசமான லுக்கில் மிரட்டும் தர்ஷன் சிவா ..காமெடி இல்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது வில்லன்போல் வரும் தர்ஷனை காமெடி பீஸ் ஆக்கிவிடுகிறார்கள்.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் இசை.. பெற்றோரை மறக்கும் பிள்ளைகளின் கதையை எடுத்துக்கொண்டு  பிடிவாத மனங்களை இந்த  ‘நிழற்குடை’மூலம் மாற்ற முயற்சி செய்துள்ளார் இயக்குனர்  சிவா ஆறுமுகம்..

மொத்தத்தில், இந்த ‘நிழற்குடை’ குடும்ப கதையில் கொஞ்சம் ட்விஸ்ட், கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்த பாசக்கதை . .

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.7/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *