கீனோ – திரை விமர்சனம்

கதை ஓபன் பண்ணா ..
மகாதாரா பகவத்- ரேணு சதீஷ் தம்பதியருக்கு ஒரே மகன் கந்தர்வா. அவன் தனியாக இருக்கும் போதெல்லாம் மனித உடலும் வித்தியாசமான தலையும் கொண்ட ஓர் உருவம், அவன் முன் தோன்றி, ‘ நான் தான் கீனோ என்னிடம் வா’ என்று அழைக்கிறது. சிறுவன் பயந்து நடுங்க, பெற்றோர் இது ஏதேனும் பேய் சேட்டையாக இருக்குமோ என்ற கோணத்தில் மந்திரவாதிகளை அழைத்துப் பார்க்கிறார்கள்.
அவர்கள் அலசி ஆராய்ந்து வீட்டில் தீய சக்தி எதுவும் இல்லை என்று உறுதி கூறுகிறார்கள். ஆனாலும் மறுநாளே வந்து சிறுவன் முன் நிற்கிறது கீனோ. அதே அழைப்பு.அதே மிரட்டல்.உண்மையில் அந்த கீனோ யார்? சிறுவன் கீனோவில் மிரட்டலில் இருந்து விடுபட்டானா என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கதைக்களம்.
சிறுவன் கந்தர்வா, இந்தப் படத்தின் மொத்த கதைக்கும் மைய முடிச்சாக இருக்கிறார். கீனோவை பார்த்ததும் முதலில் பயந்து பின்பு துணிந்து எதிர்க்கும் எல்லா இடங்களிலும் நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்து விடுகிறார்.
அப்பாவாக நடித்திருக்கும் மகாதாரா பகவத், நடுத்தர வர்க்க தந்தையை நடிப்பில் பிரதிபலிக்கிறார். அலுவலகத்தில் அவருக்கு நடக்கும் சூழல் கூட காமெடி கலந்து அருமை. மேலும் நண்பரிடம் வீடு கேட்டு அங்கு மகனோடு வந்து தங்குவது , மகனின் பயம் கண்டு கலங்கும்போதும், அதற்கு தீர்வு காண முயலும் போதும் நம்மையும் கலங்க வைக்கிறார்…தாயாக நடித்திருக்கும் ரேணு சதீஷ் சொந்தவீடு வாங்க வீடு புரோக்கரை டென்ஷன் ஆக்கும் இடங்கள் காமெடி அவர் வேலையின் நிமித்தம் ஆஸ்திரேலியா போன போதும் மகனின் நலத்தில் பாசமுள்ள தாயை கண் முன் நிறுத்துகிறது.
ஆலிவர் டேனியின் ஒளிப்பதிவு, கதை, ,திரைக்கதை,வசனம், பாடல்கள், இசையுடன் இயக்குனர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் ஆர்.கே.திவாகர். கீனோவாக நடித்திருப்பதும் அவரே.எதற்காக ஒரு உருவம் ஒரு சிறுவனைக் குறி வைத்துத் தொடர வேண்டும்? என்கிற கேள்விக்கான விடையை உளவியல் ரீதி யாக அணுகிய விதத்தில் சிறந்த இயக்குனராக வெற்றி பெற்று இருக்கிறார்…கீனோ நமக்குள் நடக்கும் மன ஓட்டங்களை தெளிவு படுத்தும் OPENER..!
நம்ம TAMILPRIMENEWS.COM ரேட்டிங் 2.9/5