ஹிட் : தி தேர்ட் கேஸ் திரைவிமர்சனம்

படம்: ஹிட் : தி தேர்ட் கேஸ்
நடிப்பு: நானி, ஶ்ரீ நிதி ஷெட்டி, சமுத்திரக்கனி, சூர்யா ஶ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், கோம்லே பிரசாத், ரவீந்திர விஜய், பிரதிக் பாபர், அமித் ஷர்மா தயாரிப்பு:.பிரசாந்தி டிரிபிர்நேநி , நானி இசை: மிகி ஜே மேயர் ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ் இயக்கம்: சைலேஷ் கொளனு பி ஆர் ஒ: யுவராஜ்
போலீஸ் அதிகாரி நானி கொடூர கொலை வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.. நானி கொலை வழக்கு ஒன்றை விசாரிக்கும் காவல்துறை எஸ். பி… அவர் அந்த கொலை வழக்கு விசாரிக்கும் சூழலில் அவருக்கு அதிர்ச்சி கலந்த தகவல் கிடைக்கிறது ஒரே பாணியில் காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 13 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைக்க அந்த வழக்குகள் பற்றி விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக காஷ்மீர் பயணப்படுகிறார்….அங்கே விசாரணை தொடங்கிய போது தான் இதற்கென கொடூர கறுப்பு உலகம் ஒன்று இருப்பது தெரிய வருகிறது. அந்த கறுப்பு உலக மனிதர்கள் யார்? எதற்காக இப்படி கொடூர கொலைகளை செய்து வருகிறார்கள்? இந்தக் கேள்வி,விடை இல்லாமல் கேள்வியாகவே நிற்க…இதை கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த கொடூர உலக மனிதர்கள் கூட்டத்தில் சேர வேண்டும். அப்போதுதான் அவர்கள் நோக்கம் தெரிய வரும்.ஆனால் அங்கே சேர்வது அத்தனை எளிதில்லை. மாட்டிக் கொண்டால் அப்போதே கொடூர மரணம் நிச்சயம்… அந்த சமயத்தில் .டார்க் வெப் சைட் மூலம் ஒரு கூட்டம் தீவிரவாதி களை தங்கள் குழுவில் சேர்க்கிறது..இது தெரிந்தும் உயிரை பணயம் வைத்து அவர்கள் நம்பிக்கை பெற்று அந்தக் கூட்டத்தில் ஒருவன் ஆகிறார் நானி.. போலீஸ் அதிகாரி ஒருவர் தங்கள் தீவிரவாத குழுவில் ஊடுருவியதை அக்குழுவின் தலைவன் மோப்பம் பிடிக்கிறான். அவனிடம் அர்ஜுன் சிக்கினாரா? அடுத்து நடந்தது என்ன? என்பதை இரத்தம் தெறிக்க தெறிக்க பரபரப்பாக விளக்குகிறது கிளைமாக்ஸ்.
காவல்துறை அதிகாரியாக நானி கம்பீரம் காட்டுகிறார். ஸ்ரீநிதி ஷெட்டியுடனான முதல் சந்திப்பில் நிஜமாகவே காதல் பொங்குகிறது. … சண்டைக்காட்சிகளில் வன்முறை அதிகம். துடிப்பான போலீஸ் அதிகாரியாக ரசிக்க வைக்கிறார் நானி ..!படம் முழுவதும் இரத்த ஆறு ஓடினாலும் கண்ணுக்கு இதமாக ..நானி, ஶ்ரீ நிதி காதல் இதமாக நம் மனதை தாலாட்ட …சைலேஷ் கொளனு இயக்கம் அமோகம். சஸ்பென்ஸ், த்ரில்லர் ஆக்ஷன் பாணியில் இப்படத்தை இயக்குனர் டிசைன் செய்திருப்பது தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை அதிரும் காட்சிகளாக உணர்த்துகிறது .
ஹிட் தி தேர்ட் கேஸ் – இரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் திரில்லர் மூவி
நம்ம tamilprimenews.com Rating 3.7/5