டூரிஸ்ட் பேமிலி – திரை விமர்சனம்

கதை .. open பண்ணா ..
இலங்கை வல்வெட்டித்துறையில் வசிக்கும் சசிகுமார், அங்குள்ள பொருளாதார பிரச்சனைகள் காரணமாக தன் மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்கு படகில் வருகிறார்.இலங்கையிலிருந்து ஆவணமற்ற குடியேறிகளாக வந்ததால் ராமேஸ்வரம் பகுதி போலீஸ் ஏட்டு ரமேஷ் திலக் கைது செய்து வேனில் கொண்டு செல்லும் போது சசிகுமார் இரண்டாம் மகன் பேசும் பேச்சில் மனம் இறங்கி அவர்களை கைது செய்யாமல் அனுப்பி விடுகிறார் ரமேஷ் திலக்..
ஆரம்பத்தில் யோகி பாபு உதவியுடன், சென்னையில் உள்ளூர் காவல் ஆய்வாளருக்கு (பக்ஸ்) சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்கிறார்கள். திசசிகுமார் ஒரு ஓட்டுநராக M S பாஸ்கர் வீட்டில் வேலை யில் சேருகிறார்,அவர்கள் வந்த தினத்தில் ராமேஸ்வரத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ, அந்த குண்டுவெடிப்பு காவல்துறையின் சந்தேகத்தை இலங்கையர்களை நோக்கித் திருப்பி விட ,இந்த சூழலில் சசிகுமார் தன் இயல்பான குணத்தால் அந்த காலனியில் உள்ள எல்லா குடும்பங்களிடமும் நன்றாக பழகி நல்ல உறவை வளர்த்துக் கொள்கிறார்… ஆனால் சசிகுமாரின் மூத்த மகன் மிதுன் ஜெய்சங்கர் என்ன காரணத்தாலோ தன் அப்பாவுடன் முகம் கொடுத்து பேசாதது மட்டுமின்றி அவ்வப்போது கோபப்படுவதுடன் எரிந்தும் விழுவதுமாக இருக்கிறார் . சசிகுமார் அவர் மைவி சிம்ரன் அந்த காலனியில் அனைவரின் நன்மதிப்பை பெற்று வாழும் சூழலில் .இலங்கையில் இருந்து வந்த சசிகுமாரின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகிறது காவல் துறை. அதனால் அவர்களை தீவிரமாக தேடத் தொடங்க…அந்த இலங்கை குடும்பம் காவல்துறை கண்ணில் சிக்கியதா? தப்பியதா? என்பது படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ்.
அப்பா கேரக்டரில் ரொம்பவே அடக்கி வாசித்துள்ளார் சசிகுமார். அவருக்கும் மூத்த மகன் மிதுனுக்குமான சின்ன சின்ன மோதல்கள் ..அதிலும் மகன் தன் காதல் பிளாஷ் பேக்கை தந்தையிடம் சொல்லும் இடத்திலும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளிலும் படம் சுவாரசியமாகி விடுகிறது.அவ்வப்போது காமெடித் இதெல்லாம் இளைய மகன் கமலேஷின் கலகல பக்கங்களாகி விடுகிறது. இன்னொரு புறம் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்து தாயை இழந்த ஒரு இளைஞனின் சோகமான மர்ம நோயால் பாதிக்கப்பட்ட தாயின் பின்னணிக் கதை சொல்கிறது, சசிகுமார் மட்டுமே அக்கறை காட்டுகிறார், அவரது மகத்துவத்தைப் எல்லோரும் உணர்கிறார்கள்..
.அம்மா சிம்ரனின் குடியிருப்பு கொண்டாட்டத் தின் போது சிம்ரனின் சின்ன நடன அசைவு அவரின் இளமை கால படங்கள் கண் முன் வந்து போகுது …மூத்த காதல் தம்பதிகளாக வரும் இளங்கோ குமரவேல் – ஸ்ரீஜா ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் காதல் எப்போதுமே இளமையானது தான் என்பதை உணர வைக்கின்றன. சசிகுமாருக்கு மீண்டும் வேலை கொடுக்கும் எம்.எஸ். பாஸ்கர் அதற்கு சொல்லும் காரணம் மகத்தானது. சசிகுமாரை கொலை வெறியுடன் தேடும் அந்த வடக்கத்திய இன்ஸ்பெக்டர் தன் வேலைய காப்பாற்றி கொள்ள வெறி கொண்டு வேட்டையை சசிகுமார் வீட்டு வாசலுக்கு செல்லும்போது அது திரில்லர் படம் போல நமக்குள் படபடப்பு தொற்றி கொள்கிறது ..
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், , மனிதர்கள்.அன்பை தொலைத்து விட்டு புன்னகையை தூரத் தூக்கி எறிந்து விட்டு யாரைப் பார்த்தாலும் எரிச்சலோடு வாழுகின்றனர் …ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் சுகமாகவும் பின்னணி இசை அருமை… இயக்குனர் அபிஷன் ஜீவிந் படம் நெடுக மனிதநேயத்தை தூவி விட்டிருக்கிறார். அந்த கிளைமாக்ஸ் தான் படத்தின் ஜீவன் என்பதை உணர்ந்து அங்கேயும் அன்பால் இந்த உலகத்தை வெல்லலாம் என்று தத்துவத்தை அருமையாக சொல்லி இருக்கிறார் அற்புதமான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனருக்கு மற்றும் அவரது டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
டூரிஸ்ட் பேமிலி இனிய திரை பயணம்… ஃபேமிலி யோட வந்து பார்க்க வேண்டிய படம்
நம்ம tamilprimenews.com Rating 3.9/5