சுமோ திரைவிமர்சனம்

படம்: சுமோ
நடிப்பு: சிவா, பிரியா ஆனந்த், விடிவி கணேஷ், யோஷினோரி தஷிரோ, நிழல்கள் ரவி, சதீஷ், யோகி பாபு, நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலர் நடிக்க தயாரிப்பு: ஐசரி கணேஷ்
இசை: நிவாஸ் கே பிரசன்னா இயக்கம்: எஸ்.பி.யோசிமேன் பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத், பாரஸ்
கதை open பண்ணா ..
ஒரு நாள் டிராஃபிக் போலீஸ் வி டிவி கணேஷ் வந்த காரை மடக்கி சோதனை செய்து ஒரு பெட்டியை திறக்க சொல்ல அவர் முடியாது என அடம்பிடிக்க காவல் நிலையம் கொண்டு செல்கிறார்கள் அங்கு இன்ஸ்பெக்டர் சதீஷ் கிட்ட இவரின் கதை சொல்ல . ஆரம்பிக்கிறார் … பிளாஷ் பேக் இல் காட்சிகள் விரிவடைகிறது ..கடற்கரையில் சர்ஃபிங் பயிற்சியாளராக இருக்கிறார் சிவா. ஒரு நாள் கடற்கரையில் ஜப்பானை சேர்ந்த சுமோ மல்யுத்த வீரர் மயக்க நிலையில் கரை ஒதுங்கி கிடக்கிறார். அவரைப் பார்த்து ஷாக்காகும் சிவா, சுமோவை மீட்டு தனது பயிற்சி இடத்துக்கு தூக்கிச் செல்கிறார். யானை போல் பலசாலியாக இருந்தாலும் குழந்தை போல் நடந்து கொள்கிறார் சுமோ. அவருக்கு லாலிபாப் வாங்கி கொடுத்து சமாளிக்கிறார் சிவா. ஒரு கட்டத்தில் அந்த சுமோ யார் என்று கண்டுபிடித்து அவரை அவரது நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்கிறார். அவர் ஜப்பான் நாட்டைசேர்ந்தவர் என்பது தெரிய வருகிறது. ஜப்பானை சேர்ந்த சுமோ தமிழ் நாட்டு கடற்கரைக்கு எப்படி வந்தார், மீண்டும் அவரை ஜப்பானுக்கு அனுப்ப முடிந்ததா? ஜப்பான் இல் சுமோ ஏன் தாக்கபட்டு தமிழக கடற்கரை வந்தார் என்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது சுமோ கிளைமாக்ஸ்
.
அகில உலக superstar சிவா. இந்த படத்திலும் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். ஆனால் காமெடியை குறைத்துக் கொண்டு செண்டிமென்ட்டாக நடிக்க முயற்சித்திருக்கிறார். கடற்கரையில் மயங்கி கிடக்கும் சுமோவை மீட்கும் சிவா அவரை ஒரு குழந்தைபோல் பார்த்துக்கொள்வது சிவா செண்டிமென்ட். கடைசி வரை சுமோ மீது ஒரு சகோதர பாசத்துடன் சிவா நடந்து கொள்வது குழந்தைகளை கவரும்.சுமோவாக நடிக்க ஜப்பானிலிருந்து நிஜ சுமோ வீரர் யோஷினோரி தஷிரோ என்பவரை தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பது awesome .சுமோ வீரர் யோஷினோரி தஷிரோ நம் ஊர் ரசிகர்களுக்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்.சில காட்சிகளை ஜப்பானிலேயே படமாக்கி இருப்பதும், .சுமோ வை படம் பார்க்கும் குழந்தைகள் ரொம்ப ரசிப்பார்கள் . அப்டி ஒரு குழந்தை தனம் .
சிவாவை தேவையான அளவுக்கு பயன்படுத்திக் கொண்டார்களா என்பது சந்தேகமாதான் இருக்கிறது.. வழக்கமான அவரது காமெடி பஞ்ச்சும் மிஸ்ஸிங்.. சண்டைக்காட்சியில் காமெடி செய்யாமல் நடித்திருப்பது புதிது …அதேபோல் சுமோ வீரர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகளில் (எடுத்ததில்) நம்ம ஐசரி “கணேஷ்” தயாரிப்பாளர் அவர்க்கு கிடைத வெற்றி ….ஜப்பான் நாட்டின் காட்சிகள் காணாகளுக்கு விருந்தாக உள்ளது
மொத்தத்தில் சுமோ .. குடும்பத்துடன் குழந்தைகளுடன் குதூகலிக்க அருமையான படம் .
நம்ம tamilprimenews.com rating 4/5