“கேங்கர்ஸ்” திரைவிமர்சனம்

படம்: கேங்கர்ஸ்
நடிப்பு: சுந்தர்.சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், விச்சு, மைம் கோபி, முனிஸ்காந்த், அருள்தாஸ் ஹரிஷ் பெராடி, சந்தனபாரதி, மாஸ்டர் பிரபாகர், மதுசூதனராவ், ரிஷி இவர்களுடன் கவுரவ தோற்றத்தில் விமல் தயாரிப்பு: குஷ்பு சுந்தர் (Avni Cinemax P Ltd), ஏ.சி.எஸ் அருண்குமார் (Benzz Media Pvt Ltd) இசை: சி.சத்யா ஒளிப்பதிவு: ஈ.கிருஷ்ணமூர்த்தி திரைக்கதை வசனம் – வேங்கட்ராகவன் இயக்கம்: சுந்தர் சி பிஆர் ஒ: சதீஷ் (AIM}
கதை .. open பண்ணா .. முதலில் ஒரு சபதம் எடுத்து கொள்வோம் .. சுந்தர் c வடிவேலு கூட்டணியில் படம் வந்தால் லாஜீக் பார்க்க கூடாது . ஓகே வா ..!
ஹரிஷ் பெராடி ,, மைம் கோபி, அருள்தாஸ் மூவரும் அண்ணன் தம்பிகள். போலீசை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு சட்ட விரோத வேலைகள் செய்கின்றனர். அவர்கள் நடத்தும் பள்ளியில் ஒரு மாணவி காணமல் போகிறார்.அதுகுறித்து அந்த பள்ளியின் அழகான கேத்ரின் தெரசா டீச்சர் போலீஸுக்கு தகவல் தருகிறார். அதே சமயம் அந்த பள்ளியில் பி டி மாஸ்டராக வேலைக்கு சேர்கிறார் சுந்தர்.சி.அதே பள்ளியில் இவருக்கு போட்டியாக பி டி மாஸ்டராக இருப்பவர் வடிவேலு . அதுவே அவருக்கு வினையாக முடிகிறது .
மைம் கோபியின் சட்ட விரோத வேலைகளை மாறுவேடம் போட்டு வந்து தாக்குதல் நடத்தி தட்டிக் கேட்கிறார். தங்கள் மீது தாக்குதல் நடத்துவது யார் என்று தெரியாமல் மைம் கோபி தவிக்கிறார்.ஒவ்வொரு முறையும் வடிவேலு இவர்க்கு பதிலாக கொள்வது சுந்தர் c டச் காமெடி … ஒரு கட்டத்தில் ஹரிஷ் பெராடியின் மகனை சுந்தர் சி பயங்கரமாக தாக்கி உயிரை உசலாட்டத்தில் வைக்கிறார். இதற்கு காரணம் என்ன? மைம் கோபியால் சுந்தர் சியின் தாக்குதலை எதிர்கொள்ள முடிகிறதா? என்பதற்கு கேங்கர்ஸ் சில பல திருபங்களுடன் இடைவேளை … அதற்க்கு பின் சுந்தர் c யின் flashback கதையில் வாணி போஜன் நடிப்பில் அசத்தி உள்ளார்.100 கோடி பணத்தை கடத்தி mime கோபி பிரதர்ஸ் நடத்தும் நாடகத்தில் வாணி போஜன் என்ன ஆனார் ? .. அந்த 100 கோடி என்ன ஆச்சு? அதை வடிவேலு சுந்தர்.c டீம் மீட்டார்களா..? என்பதற்க்கு நகைசுவை டுவிஸ்ட் வைத்து கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
வடிவேலுக்கு பெண் வேடம் அட்டகாசம் அவருக்கு எத்தனை கெட்டப் என எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு மாறு வேட கெட்டப்போட்டு ஒவ்வோரு எபிசோடிலும் காமெடி அதகளம் . ”யாரையும் நான் அடிச்சதில்லை..” என்ற வசனத்தை வடிவேலு மூச்சு விடாமல் பேசுவது மீண்டும் வடிவேலுவின் காமெடி கிங் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார் ..! அவருடன் முனிஸ்கந்த், பக்ஸ், சந்தானபாரதி மற்றும் ஸ்டண்ட் வீரர்கள் பக்க துணையாக இருந்து காமெடி அதிரடி கிளப்புகிறார்கள்.
கேத்ரின் தெரசா கவர்ச்சி பாடலில் அதிக பொருட்செலவு தெரிகிறது குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ்.அருண்குமார் இணைந்து இப்படத்தை அதிக பொருட செலவில் தயாரித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர் சிக்கு மற்றொரு வெற்றி படமாக கேங்கர்ஸ் அமைந்திருக்கிறது.
சுந்தர்.சி வடிவேலுவின் காம்போ ராக்ஸ் … gangers – கவலையை மறந்து குடும்பத்துடன் ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம்.
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 4.2/5