10 ஹவர்ஸ் திரை விமர்சனம்

10 ஹவர்ஸ் திரை விமர்சனம்

படம்: 10 ஹவர்ஸ்

நடிப்பு: சிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் ஐயப்பா, முருகதாஸ், திலீபன், தங்கதுரை, சரவண சுப்பையா, சருமிஷா, நிரஞ்சனா

இசை: கே எஸ் சுந்தரமூர்த்தி  ஒளிப்பதிவு: ஜெய் கார்த்திக்  இயக்கம்: இளையராஜா கலியபெருமாள்  பிஆர்ஓ: நிகில் முருகன்

கதை .. ஓபன் பண்ணா ..

ஒரே night ல highway ல நடக்கற மாதிரி தான் கதையே கொண்டு போயிருக்காங்க. ஒரு பொண்ணு miss ஆக .அதைக் கேட்கும் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ (சிபிராஜ்). காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க துரித நடவடிக்கையில் இறங்குகிறார்.  . sibiraj தான் inspector castro வ நடிச்சிருக்காரு. இவருக்கு clues மட்டும்  போதும் ரொம்ப சீக்கிரமா solve பண்ணிடற திறமை இவருக்கிட்ட இருக்கு. அப்படி தான் சேலம் law  காலேஜ் ல படிக்கற ஒரு பொண்ணு தொலைஞ்சு போய்டுரா அந்த பொண்ணை கண்டுபிடிக்க போலாம் னு  போகும் போது திடீருனு  கேஸ் அப்படியே மாறி போய் சென்னை திண்டிவனம் highway வை  காமிக்கறாங்க. இங்க போலீஸ் துப்பாக்கி சூடு நடக்குது  அப்புறம் ஒரு பொண்ண கள்ளக்குறிச்சி to கோவை  போகும்  bus ல மாத்தி விடுறாங்க. அப்புறம் bus அ toll ல வச்சு check பண்ணும்  போது அதுக்குள்ள இளம்  வாலிபன் செத்து  கிடக்க … அப்புறம் என்ன நடக்குது என்பது  தான் இந்த ten hours படத்தோட விறு  விறு  மீதி கதை இருக்கு. . ஒவ்வொரு நூலாக பிடித்து பெண் எப்படி காணாமல் போயிருப்பார் என்று படிப்படியாக நகர்வுகளை புத்திசாலித்தனமாக நகர்த்தி செல்கிறார். அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடிந்ததா, அதற்குப் பின்னால் என்ன மர்மம் அடங்கி இருக்கிறது என்பதை காஸ்ட்ரோ கண்டுபிடிக்கும் போது அதிர்ச்சியான தகவல் வெளிப்படுகிறது. அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

 

அடுத்து என்ன நடக்க போகுது னு தெரியதனால audience க்கு இந்த படம் ரொம்ப interesting அ இருக்கு. மக்கள் க்கு பிடிக்கிற மாதிரி ஏகப்பட்ட twist and turns அ வச்சிருக்காங்க. ஒரு சில விஷயங்கள் எதுக்காக பண்ணறங்க னு நமக்கு தெரியாது ஆனா அது எதுக்கு ன்றதா கடைசில explain பண்ணற விதம் நல்ல இருந்தது. sibiraj எப்படி investigate பண்ணறாரோ அதே மாதிரி தான் இந்த படத்தை பாக்கறவங்களும் மனசுக்குள்ள investigate பண்ணிட்டு இருப்பாங்க ஏன்னா அந்தள்வுக்கு நம்மள யோசிக்க  வைக்குது னு சொல்லலாம்.

ரெண்டு மணி நேரத்துக்குள்ள பக்காவான thriller படமா director குடுத்திருக்காரு. இவரோட முதல் படத்துல மக்களோட மனச கவர்ந்துட்டாரு னு தான் சொல்லணும் .. cinematographer  work அருமை… படம் night time ல இருக்கின்றதுனால frame setting எல்லாம் செமயா இருந்த்தது இதுக்கு jai karthick க்கு தான் நன்றி சொல்லணும்.

மொத்தத்துல 10 Hrs .. suspense thiriller கலந்த படம்.

நம்ம tamilprimenews.com rating   3.1/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *