“டெஸ்ட்” திரை விமர்சனம்

படம்: டெஸ்ட்
நடிப்பு: மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் தயாரிப்பு: சக்கரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் சசிகாந்த் இசை : சக்தி ஸ்ரீ கோபாலன்
ஒளிப்பதிவு: விராஜ் இயக்கம்: சசிகாந்த் ..ரிலீஸ்: நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளம் பிஆர்ஓ: நிகில் முருகன்
வசதியற்ற மாதவன் – நயன்தாரா தம்பதிக்கு குழந்தை இல்லை.. மாதவன் ஹைட்ரோ பெட்ரோல் கண்டுபிடிக்க போராடுகிறார் .. அவரது மனைவி நயன்தாரா செயற்கை குழந்தை பெற்றுக் கொள்ள கணவன் மாதவனிடம் 5 லட்சம் பணம் ரெடி செய்யச் சொல்கிறார். இந்நிலையில் மாதவனின் ஹைட்ரோ பெட்ரோலிக் கண்டுபிடிப்பை அங்கீகரிக்க அதிகாரிகளுக்கு 50 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்கப்படுகிறது. .இதே நேரத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சித்தார்த் தன்னுடைய தோல்வியால் மனமுடைந்து இருக்கிறார். மீண்டும் அணியில் சேரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், சித்தார்த்தை கட்டாய ஓய்வு பெறச் சொல்லி அவரது அணியில் வற்புறுத்துகின்றனர் கிரிக்கெட் வாரியத்துடன் போராடுகிறார். இவரது மனைவி மீரா ஜாஸ்மின் … இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடக்கும் டெஸ்ட் போட்டியில் மும்பை தாதா ஒருவர் பெட்டிங் நடத்துகிறார். இதில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் மூவரும் எப்படி சிக்கிக் கொள்கின்றனர். அதிலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா.இந்த இரு குடும்பங்களின் பாதை, ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒன்றிணைவது . அதுதான் கதையின் பல்வேறு கேள்வி களுக்கு டெஸ்ட் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது
ஆரம்ப காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த மாதவன் ஒரு கட்டத்துக்கு பிறகு தனது பாணியை மாற்றிக் கொண்டு முரட்டுத்தனமான வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். அது ஒர்க்அவுட்டும் ஆனது..அந்த வரிசையில் ஒரு பாத்திரமாகத்தான் டெஸ்ட் படத்தில் மாதவன் நடித்திருக்கிறார்.
இயக்குனர் சசிகாந்த் அவரிடம் சொன்னபோது “இந்த வேடத்தில் நடிக்கிறேன். ஆனால் பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு அந்த பாத்திரத்தை மாதவன் ஏற்றுக் கொண்டு நடித்திருக்கிறார். அவர் ஏன் இந்த பாத்திரத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது படத்தில் அவரது நடிப்பை பார்க்கும்போது தெரிகிறது. maddy ராக்ஸ்.
கிரிக்கெட் வீரர் சித்தார்த் அர்ஜுனாக சித்தார்த் நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் என்றால் சினிமாத்தனமான கிரிக்கெட் வீரராக இல்லாமல் நிஜ கிரிக்கெட் வீரராக மாறுவதற்கு ஆறு மாத காலம் கிரிக்கெட் கோச்சுகளிடம் பயிற்சி பெற்றிருக்கிறார். அந்த பயிற்சிதான் அவரை காட்சிகளில் நிஜ கிரிக்கெட் வீரராக கண்முன் நிறுத்துகிறது.
நயன்தாரா, தனது சொந்த குரலில் பேசுவதன் மூலம் உணர்வுகளை மிக அழுத்தமாகக் கொண்டு வந்துள்ளார். “நீ ஜாலிக்காக குடித்தாய்.. ஆனால் நான் தாயாக முடியாமல் மலடி என்ற பெயர் எனக்கா?” என்ற கேள்வி, திரையில் பட்டென்று மின்னுகிறது…சித்தார்த் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மீரா ஜாஸ்மின். நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைகாட்டி இருக்கிறார். சித்தார்த்தை கன்னத்தில் அறையும் அந்த ஒரு காட்சியில் நடிப்புத்திறனை முத்திரையாக பதிக்கிறார் மீராஜாஸ்மின்.
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் சசிகாந்த் ஏற்கனவே பிரபலமான பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர். பட இயக்குனராக ஆக வேண்டும் என்று திரையுலகுக்கு வந்த சசிகாந்த் படங்களை தயாரித்து அதில் பெற்ற அனுபவத்துடன் தற்போது இயக்குனராக மாறியிருப்பது அவரை ஒரு தரமான இயக்குனராக உருமாற்றி இருக்கிறது. ..நாசர், காளி வெங்கட், சித்தார்தின் மகன் மற்றும் வில்லனாக ஆடுகளம் முருகதாஸ் – அனைவரும் தங்கள் பங்களிப்பை நன்கு செய்துள்ளனர்.சக்திஸ்ரீ கோபாலனின் இசை – பாடல்களிலும் பின்னணி இசையிலும் மனதை கொள்ளை கொள்ளுகிறது. ஒளிப்பதிவாளர் விரஜ் சிங் கவனிக்க படுவார்..!
டெஸ்ட் டீம் பெற்ற வெற்றியை ott தளமான netflix வழங்குகிறது .. டெஸ்ட் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3,8/5