“டோர்” திரை விமர்சனம்

படம்: டோர்
நடிப்பு: பாவனா, கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, நந்தகுமார், க்ரிஷ், பாண்டி ரவி, ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினோ, ரோஷினி, சித்திக், வினோலியா தயாரிப்பு: நவீன் ராஜன் இசை: வருண் உன்னி ஒளிப்பதிவு: கௌதம் ஜி இயக்கம்: ஜெய் தேவ் பி ஆர் ஓ: பரணி அழகிரி
கதை .. open பண்ணா
.கட்டிடக்கலை நிபுணரான பாவனா வடிவமைக்கும் கட்டிட பணிக்காக சிறு கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது . கோவில் இடிக்கப்பட்ட அதே நாளில் பாவனாவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதன் பிறகு பாவனாவை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. ஓரிரு முறை அவர் கண் முன் ஒரு அம்மாவும் பெண்ணும் ஆவி தோற்ற த்தில் அடிக்கடி வந்து போகிறார்கள். இதனால் பயந்து போகும் பாவனா, அந்த அமானுஷ்ய சக்தி பற்றி விசாரிக்க முயல்கிறார். அது தொடர்பாக அவர் யாரையெல்லாம் பார்த்துவிட்டு வருகிறாரோ அந்த நபர்கள் மறுநாளே இறந்து போன தகவல் தெரிய வருகிறது. அவர்களின் இறப்புக்கும், பாவனாவுக்கும் என்ன சம்பந்தம்?, அவரை பின் தொடரும் ஆவிகளின் பின்னணி என்ன? என்பதை திகிலும் திரில்லருமாய் சொல்லி இருக்கிறார்கள்.
கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெய் தேவ்.
பாவனாவை நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் இப்படம் மூலம் காண முடிகிறது. மித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடவுள் மீது நம்பிக்கை இல்லை, பேய் மீதும் நம்பிக்கை இல்லை என்ற எண்ணத்தில் இருக்கும் பாவனா வாழ்வில் ஒரு கோவிலும், ஒரு பேயும் எப்படி எல்லாம் அவரை அலைக்கழிக்கிறது என்பது சுவாரஸ்மாக சொல்லப்பட்டிருக்கிறது.பாவனா தங்கி இருக்கும் வீட்டில் திடீரென்று சத்தம் கேட்பது, உருவம் நடப்பது என்ற காட்சியெல்லாம் பயமுறுத்துகிறது ஆனால் பாவனா மட்டும் எதற்கும் ரியாக்சன் தராமல் எதுவுமே நடக்காது போல் நடித்திருப்பது காட்சியின் பய உணர்வை குறைத்து விடுகிறது. தன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு அவர் போனில் அழைக்கும்போது கூட பேசாத நிலையை எண்ணி பாவனா வருந்தும்போது மனதை வருடுகிறது.தன் கண்ணிற்கு ஒரு பெண் உருவம் தெரிவது பற்றி நீண்ட நேரத்துக்குப் பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் வெங்கட்ராமனிடம் கூற அதுபற்றி அவர் விசாரிக்க தொடங்கும்போதுதான் கதையில் விறுவிறுப்பு கூடுகிறது பாவனா தேடும் ராம் யார்? என்ற தேடல் பயணத்தில் ஏற்படும் திருப்பங்கள் இறுதி வரை காட்சிகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. அம்மா மகள் சம்பந்தப்பட்ட அந்த பிளாஷ் பேக் தான் கதையின் மைய முடிச்சு. .
போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு அந்த காக்கி சட்டை நடிப்பு கம்பீரம் தருகிறது. நாயகியின் அம்மாவாக ஸ்ரீரஞ்சனி, அலுவலக பாஸ் ஆக ஜெயப் பிரகாஷ் பாத்திரச் சிறப்பில் பளபளக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜி, தனது கேமராவில் கொடைக்கானலை இன்னும் அழகாக்கி இருக்கிறார். வருண் உன்னியின் பின்னணி இசை ஆவி வரும் காட்சிகளில் திகிலையும் தருகிறது. எழுதி இயக்கியிருக்கும் ஜெய்தேவ், பேய் கதை அழகாக டோர் படம் மூலம் சொல்லி இருக்கிறார்.
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.1/5