வீர தீர சூரன் திரை விமர்சனம்

வீர தீர சூரன் 2ம் பாகம்
நடிப்பு: விக்ரம், எஸ் ஜே சூர்யா, சுராஜ், தூஷ்ரா விஜயன், மாருதி பிரகாஷ் ராஜ், பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி
தயாரிப்பு: ஹெச் ஆர் பிக்சர்ஸ் ரியா சிபு, மும்தாஜ்.எம். இசை: ஜிவி பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
இயக்கம்: எஸ் யு அருண்குமார் பிஆர்ஓ: யுவராஜ்
கதை open பண்ணா
செல்வாக்கு மிக்க பெரியவர் ரவி குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து கதை தொடங்குகிறது.அந்த பெரியவர் வீட்டில் வேலை பார்த்த கொண்டிருந்த தன் கணவரை காணோம் என்று ஒரு இளம் பெண் தன் குட்டி மகளுடன் பெரியவர் வீடு தேடி வந்து தகராறு செய்கிறாள்.
பெரியவரின் மூத்த மகன் சுராஜ் அந்தப் பெண்ணை அடித்து துரத்துகிறான்.இதற்கிடையே பெரியவர் வீட்டுக்கு தன்னை தேடிப்போன மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று அவள் கணவன் போலீசில் புகார் தர…ஏற்கனவே பெரியவர் குடும்பத்தின் மீது தீரா பகையிலிருந்த அந்த ஏரியா எஸ்.பி. எஸ் ஜே சூரியா .. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறார். பெரியவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடைத்தது போல் போலியாக ஏற்பாடு செய்து பெரியவரையும் அவர் மகனையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுகிறார்.
இந்த தகவல் பெரியவருக்கு தெரிய வர….மகன் ஒரு காரிலும் பெரியவர் இன்னொரு காரிலுமாக தப்பிச் செல்கிறார்கள்.இப்போது பெரியவர் நேராக சென்ற இடம் வெளியூரில் மளிகை கடை நடத்தி வரும் காளி(விக்ரம் ) இல்லம்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு அடிதடிக்கு அஞ்சாத விக்ரம் இதே பெரியவருக்காக அசால்டாக ஒரு கொலையும் செய்கிறான். அதன் பிறகு இப்போது மனைவி, இரு குழந்தைகள் என்று புதிய மனிதனாக சின்னதாய் ஒரு மளிகை கடை. அதில் கிடைக்கும் குறைந்தபட்ச வருமானம் என்று வாழ்ந்து வருகிறான்.
இப்போது மீண்டும் தேடி வந்த இதே பெரியவர் இப்போது கொல்லச் சொல்வது அந்த போலீஸ் எஸ்பி.சூர்யாவை .. முதலில் மறக்கும் விக்ரம் , பெரியவர் காலில் விழுந்து கேட்டபோது வேறு வழியின்றி சம்மதிக்கிறான் .
பெரியவர் குடும்பத்துக்கும் போலீஸ் எஸ்.பி. சூர்யாவிற்கும் இடையே இருக்கும் பகைக்குள் சிக்கிக்கொண்ட விக்ரம் இந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறான்? பெரியவரின் விருப்பப்படி போலீஸ் எஸ்.பி.யை போட்டுத் தள்ளினானா? அல்லது அப்படி செய்யாமல் பெரியவரின் குடும்பத்தின் பகைக்கு ஆளானானா என்பது தட தடக்கும் திரை கதை …!!!
ஜட்டியுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்து எஸ் பி.யின் கண் முன்னே தன்னை மிரட்டியவரை துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்குவது, ‘டேய்..’ சொன்ன இன்ஸ்பெக்டரை அந்தக் கணமே போட்டுத் தள்ளுவது என்று படம் முழுக்க விக்ரம் ஆடும் கதகளி.
மனைவியின் வார்த்தைக்கு கட்டுப்படுவது, பெரியவர் மீதான விசுவாசத்தை மீற முடியாமல் தவிப்பது என்ற இந்த இரு வேறு நிலைகளிலும் நடிப்பில் இதுவரை பார்த்திராத இன்னொரு விக்ரம் தெரிகிறார். விக்ரமின் மனைவி துஷாரா விஜயன் அந்த கேரக்டரில் படம் முழுக்க தனது நடிப்பால் ஜொலிக்கிறார். கணவன் தன் சொல்லை மீறி மீண்டும் பழைய வாழ்க்கைக்கு போய்விட்டானோ என்ற தவிப்பையும் பதட்டத்தையும் கண்கள் வழியே அவர் கடத்துவது தேர்ந்த நடிப்பு. கிளைமாக்ஸ்சில் குடும்பத்தை காப்பாற்ற அவர் காட்டும் ஆவேசம் வேறு லெவல் .
மனைவி, குழந்தைகள் என்று எளிமையாக சந்தோஷமாக வாழும் வாழ்க்கையே போதும் என்று எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் இருக்கும் விக்ரமை மாருதியும் , சுராஜும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிக்கலில் மாட்டி விடுவதும் அதிலிருந்து விடுபட முடியாமல் விக்ரம் சிக்கிக் கொண்டு ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கு செல்வதும் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.சண்டை காட்சிகளில் அது பற்றி கவலைப்படாமல் விக்ரம் நடித்திருக்கும் காட்சிகள் இவருக்கு எங்கெல்லாம் அடிபட்டிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.பெரியவராக மாருதி, அவரது மகன் கண்ணனாக சுராஜ் இருவரும் வில்லன்கள் என்றாலும் நயவஞ்சகமாகவும், குடும்ப உணர்வுடனும் வெளிப்படுத்தி காட்சிகளுக்கு வெறியை ஏற்றியிருக்கிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியில் இருந்து விடுபட்டு நடிப்பில் புதிய முகம் காட்டி இருக்கிறார். இது ரசிக்கத்தக்க முகம். பெரியவர் குடும்பத்தின் மீதான பகையை மனதில் அடைகாக்கும் அந்த வன்மத்தை திரையில் அவர் காட்டுவது தனி அழகு….காவல் அதிகாரி அவருக்கே உரிய சுயநலம்..யாரை வேண்டுமானாலும் காட்டி கொடுப்பது .. இவர் நடிப்பில் வெளிப்படுவது அருமை ..!
ஜிவி பிரகாஷ் குமார் வழக்கமான ஒரு இசை இல்லாமல் கதைக்கு தேவையான இசையை தன் எல்லைக்குள் நின்று காட்சிகளையும், பாடல்களையும் இசையால் தூக்கி நிறுத்துகிறார்….ஒளிப்பதிவு செய்யும் படங்களில் தனி முத்திரை பதித்து வரும் தேனி ஈஸ்வர் இன்னொரு முறை உண்மையை உணர்த்தி இருக்கிறார் … பிரம்மாண்ட சண்டை என காட்சிகளுக்கு வாய்ப்புகள் இருந்தும் அது எல்லாமே படத்தை சினிமாத்தனமாக்கி விடும் என்பதை உணர்ந்து படம் முழுவதையுமே மனிதர்களின் உணர்ச்சி கொப்பளிப்புகளால் கோர்த்து யதார்த்தமாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ். யூ.அருண்குமார்.
HATSOFF வீர தீர சூரன் டீம்
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 4.2/5