வருணன் (God of water) திரை விமர்சனம்

படம்: வருணன் God of water
நடிப்பு: ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த், கேப்ரில்லா, ஹரிப்ரியா, சங்கர் நாக் விஜயன், பிரிய தர்ஷன், ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன் ஹைடி கார்த்தி, கவுசிக், கிரண்மய், தும்கன் மாரி, பேபி ஜாய்ஸ், ஐஸ்வர்யா
தயாரிப்பு: கார்த்திக் ஶ்ரீதரன் இசை: போ போ சசி ஒளிப்பதிவு: எஸ்.ஶ்ரீரமா சந்தோஷ் இயக்கம்: ஜெயவேல் முருகன் பி ஆர் ஒ: நிகில் முருகன்
வடசென்னை ராயபுரம் பகுதியில் கேன் வாட்டர் சப்ளை செய்யும் தொழில் செய்கின்றனர் ராதாரவி, சரண்ராஜ். இவர்கள் தனித்தனியாக பிஸ்னஸ் செய்தாலும் ஒருவர் பகுதிக்குள் இன்னொருவர் வருவதில்லை என்பதால் சண்டை சச்சரவு இல்லாமல் தொழில் நடக்கிறது. ஆனால் இவர்களிடம் கேன் வாட்டர் போடும் வேலை செய்யும் பையன்களாக துஷ்யந்த் மற்றும் பிரியதர்ஷன்..! . இதில் ஹீரோ துஷ்யந்த் அவருக்கு ஒரு காதலும் வருகிறது. இரு கேங்வார், ஹீரோவின் காதல் என படம் பயணிக்கிறது..! துஷ்யந்த், பிரியதர்ஷன் முதலில் நெல்லைக்காரன், மதுரைக்காரன் என்று நக்கலடித்து மோதிக் கொள்கின்றனர். பின்னர் ஊர் வம்பு எதற்கென்று காம்ப்ரமைஸ் ஆகிறார்கள். அவ்வப்போது சரண்ராஜ் கேங்குடன் சிறு சிறு மோதலில் ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் இது இருதரப்புக்கும் பெரிய மோதலாக வெடிக்கிறது. இதன் எதிர்வினையாக கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன….தண்ணீர் கேன் பிஸ்னெஸ் பின்னணியில் ஒரு கேங்க்ஸ்டர் சம்பவம்..! இந்த மோதல் எங்கு சென்று முடிகிறது என்பதற்கு அதிர்ச்சியுடன் பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ஹீரோவாக நன்றாக நடித்துள்ளார். கேப்ரில்லாவிற்கு பெரிதாக வேலையில்லை. ராதாரவி வழக்கம் போல நடித்துள்ளார். சரண்ராஜ் தனது நடிப்பால் கவர்கிறார். ஜீவா, மகேஸ்வரி இருவரும் நடிப்பில் நல்ல பங்களிப்பைச் செய்துள்ளனர். வருணன் பட தலைப்பு அதற்க்கு ஏற்றவாறு தண்ணீர் கொள்ளையின் பின்புலத்தைப் பேசியிருக்கிறார் இயக்குநர். அதற்காக பாராட்டலாம்
நம்ம tamilprimenews.com Rating 2.7/5