ஸ்வீட் ஹார்ட் திரை விமர்சனம்

ஸ்வீட் ஹார்ட்
நடிப்பு: ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரர், பவுசி தயாரிப்பு: யுவன் சங்கர் ராஜா இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: பாலாஜி சுப்பிரமணியம்இயக்கம்: ஸ்வினீத்.எஸ். பி ஆர் ஓ: யுவராஜ்..
கதை .. open பண்ணா ..!
ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் நட்பாக பழகுகின்றனர். ஒரு கட்டத்தில் வாசுவை காதலிக்கும் மனு திருமணம் செய்ய கேட்கிறார். அதை வாசு ஏற்கவில்லை. இந்நிலையில் அவர்களுக்குள்”அது” முடிகிறது. தான் கர்ப்பமானதை காரணம் சொல்லி திருமணம் செய்ய கேட்கிறாள் மனு. அதற்கு சம்மதிக்காத வாசு கருவை கலைக்க சொல்கிறான் ….இந்த முரண் எங்கு சென்று முடிகிறது என்பதை சென்டிமெண்ட் டச் உடன்….காதலர்காளான ரியோராஜும், கோபி ரமேஷும். அவர்கள் பிரிவதற்கான காரணத்தை விட, திரும்பி சேர்வதற்கான காரணம் ஒன்று அமைகிறது. அந்தக் காரணம் என்ன என்பதும், காதலர்கள் இணைந்தார்களா என்பதும் தான் ஸ்வீட்ஹார்ட் கதை கிளைமாக்ஸ் …!சம்பவம் நடந்த பிறகு காதலியின்கர்ப்பத்தை கலைக்க ரியோ, டாக்டரிடம் அலையும் காட்சி தொடங்கி அதுவே முக்கால்வாசி படத்தை விழுங்கி விடுகிறது….ரியோ ராஜ் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்வதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. அது உறுத்தலாக இருந்தாலும் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளும் விதமாகவே உள்ளது….!
ரியோவின் நண்பராக வரும் 10 நிமிஷ டைம்காரர் அருணாசலேஸ்வரர் காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார் . மற்றபடி கோபிகா ரமேஷுக்கு வீட்டுக்குள்ளேயே செக் வைக்க ஒரு குட்டி பிசாசு உள்பட குடும்பமே இருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா தயாரித்திருப்பதுடன் ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டு இசை அமைத்திருக்கிறார்…பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு தெளிவு.
புதுமுக இயக்குனர் ஸ்வினீத் முதல் பாதி கொஞ்சம் கத்திரி போட்டு இருந்தால் …. இரண்டாம் பாதி சென்டிமெண்ட்டை ரசிக்க முடியும் ..!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.2/5