ராபர் திரை விமர்சனம்

படம்: ராபர்
நடிப்பு: மெட்ரோ சத்யா, தீபா சங்கர், சென்ராயன், டேனி பாப் தயாரிப்பு: இம்ப்ரஸ் பிலிம்ஸ் கவிதா எஸ். மெட்ரோ புரடக்ஷன் ஆனந்த் கிருஷ்ணன் இசை: ஜோகன் சிவனேஷ் ஒளிப்பதிவு: என்.எஸ்.உதயகுமார் கதை. திரைக்கதை: ஆனந்த கிருஷ்ணன் இயக்கம்: எஸ்.எம்.பாண்டி
வெளியீடு: சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி ஆர் ஒ: திரைநீதி செல்வம்
கதை open பண்ணா
கிராமத்தில் இருந்து தாயை தனியாக விட்டுவிட்டு நகரில் வேலைக்காக வந்த சத்யாவுக்கு ஐ. டி. யில் வேலை கிடைக்கிறது. நகர வாழக்கையில் நாயகன் சத்யா,பண ஆசை, பெண் ஆசைக்கு அடிமையாகி சொகுசு வாழ்க்கை வாழ ஆசை. அதற்கு கணக்கில்லாமல் பணம் வேண்டுமே. அதற்காக பகுதி நேர வேலையாக பெண்களிடம் செயின் பறிப்பு, கத்தி காட்டி மிரட்டி கொள்ளை சம்பவம் என சட்ட விரோத செயலில் ஈடுபடுகிறான்.. வழிப்பறியில் பணம் கொட்டுகிறது. முகம் தெரியாத அவரது வளர்ச்சியை கண்டு அந்தத் துறையில் பழம் தின்று கொட்டை போட்ட வழிப்பறி ஆசாமிகள் கூட திகைத்துப் போகிறார்கள்.
ஆனால் அவர்களின் எதிர்ப்பையும் சத்யா சுலபத்தில் எதிர்கொள்கிறார்.இந்நிலையில் தான் ஸ்கூட்டரில் வந்த பெண்ணை துப்பட்டாவைப் பிடித்து இழுத்து செயின் பறிக்க முயல, அந்த அதிர்ச்சி பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காவு வாங்கி விடுகிறது.வழிப்பறித் திருடனால் தன் மகள் உயிர் இழந்ததை தாங்க முடியாத அவளது தந்தை தன் மகள் சாவுக்கு காரணமானவனை கொல்லத் துடிக்கிறார்.இதற்கு போலீஸ்காரர் ஒருவரும் அவருக்கு துணை நிற்க, வழிப்பறி திருடன் சத்யா இப்போது அவர்கள் கையில்..அடுத்து எதிர்பாராத டிவிஸ்ட்கள் நிகழ்கின்றன. அது என்ன என்பதற்கு பரபரப்பான திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது…பெண்ணின் தந்தையிடம் இருந்து சத்யா உயிர் தப்பினாரா? என்பது திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சத்யா அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் அராஜகங்கள் மிரட்டல் …. முகத்தை கர்ச்சிப்பால் மறைத்துக் கொண்டு அவர் வழிப்பறி வேட்டையை தொடங்கும் போதெல்லாம் என். எஸ். உதயகுமாரின் கேமரா வழிப்பறி காட்சிகளை படமாக்கிய விதம் …நம் மனதுக்குள் பயம் தொடங்கி விடுகிறது. அலுவலகம் செல்லும் இதே சத்யாவின் வேறு முகம் வித்தியாச நடிப்பு அருமை ..!வில்லன் டேனியல் போப் மிரட்டுகிறார். .சிறையில் சத்யாவின் கதை சுருக்கம் சொல்லும் கைதியாக சென்ராயன் கிளைமாக்சிலும இவரது நடிப்பு கவனிக்க தக்கது..மகளுக்காக பழி வாங்க துடிக்கும் கேரக்டரில் ஜெயபிரகாஷின் நடிப்பும் ஆவேச தந்தையை கண் முன் நிறுத்துகிறது…சத்யாவின் பாசமிக்க அம்மாவாக வரும் தீபா சங்கர் அருமையான நடிப்பு..!
படத்தில் சத்யா ஹீரோ என்பதைவிட வில்லத்தனத்தைத்தான் சீனுக்கு சீன் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அதேபோல் ஹீரோயின் என்று யாரும் கிடையாது. முழுக்க நெகடிவ் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வித்தியாசமான கதைக்களத்தை அமைத்திருக்கிறார் மெட்ரோ பட.இயக்குனர் அனந்த கிருஷ்ணன்.!
ஜோகன் சிவநேஷ் இசை படத்துக்கு பெரிய பலம் ..!
ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை ஏதோ ஒரு கொலையை காட்டினோம் அதை கண்டுபிடித்தோம் என்ற படமாக இல்லாமல் பெண்கள் விழிப்புணர்வுக்கான கதையாகவும், நகரில் வேலை செய்யும் சி சி டிவி கேமரா இருக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி இருப்பது இந்த அரசின் கவனத்துக்கு செல்ல வேண்டிய அவசியத்தை சுட்டி காட்டி உள்ளது …எடிட்டரின் நேர்த்தியான எடிட்டிங் எந்த குழபமும் இல்லாமல் கதையை கச்சிதமாக கொண்டு போகிறது ..!
. இயக்கிய எஸ்.எம்.பாண்டி தனது முதல் இயக்கத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்…அனைவரும் குடும்பமாக வந்து பார்க்க வேண்டிய படம் ..!
இம்ப்ரஸ் பிலிம்ஸ் கவிதா எஸ்., மெட்ரோ புரடக்ஷன் ஆனந்த் கிருஷ்ணன் கமர்சியல் ரீதியாக இந்த படம் தயாரித்திருந்தாலும் நல்லதொரு கருத்தை தர முயன்றிருப்பது .பெண் பாதுகாப்பு பற்றி சொன்ன விதம்.. இதபோல நல்ல கருத்துக்களோடு அவர்கள் அடுதடுத்து படங்கள் பண்ண வேண்டும்,,,!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் ….3.4/5