சப்தம் திரை விமர்சனம்

நடிப்பு: ஆதி, லட்சுமிமேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ். பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா , அபிநயா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சப்தம்”
தயாரிப்பு: 7 ஜி சிவா இசை: தமன் .எஸ். ஒளிப்பதிவு: அருண் பத்மநாபன இயக்கம்: அறிவழகன் பி ஆர் ஓ: சதீஷ் S2
கதை .. open பண்ணா
எழில் மிக்க ஒரு மலைக்கிராமத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்று இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் சிலர், கல்லூரிக்கு சற்று தொலைவில் காட்டுக்குள் இருக்கும் நூலகத்தின் மாடிக்கு சென்று கீழே வீழ்ந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த உடல்களை பரிசோதிக்கும்போது அவர்களது கை கால் முகம் அனைத்தும் கோணலாகவும் கையில் சைத்தானின் குறியீடும் இருக்கிறது பழமையான மருத்துவ கல்லூரி அடிக்கடி சில மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அமானுஷ்ய தீய சக்திகளால் இந்த சம்பவம் நடப்பதாக கல்லூரி நிர்வாகம் சந்தேகம் அடைகிறது. அமானுஷ்ய சக்திகள் கல்லூரிக்குள் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக மும்பையில் இருந்து பேய் ஆராய்ச்சியாளர் ஆதி வரவழைக்கப்படுகிறார். அவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படவே கல்லூரி முழுவதிலும் ஒவ்வொரு இடமாக தான் வைத்திருக்கும் கருவிகள் மூலம் ஆவி இருக்கிறதா என்பதை ஆராய்கிறார். அதில் ஆவி இருப்பது உறுதியாகிறது. எதற்காக அந்த ஆவிகள் பழிவாங்கலை நடத்துகிறது என ஆராய்கிறார். அது பின்னோக்கி காலத்தை நகர்த்துகிறது. கல்லூரியின் நூலகம் இருந்த இடம் முன்பு ஒரு தேவாலயமாக இருந்தது. தேவாலயம் எப்படி சைத்தான்களின் கூடாரமாக மாறியது? ஏன் அங்கு மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.? என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை. அங்கு நடந்த சம்பவங்கள்தான் அமானுஷ்ய சக்தியின் பழிவாங்களுக்கு காரணம் என்பது தெரிகிறது. அதன் பிறகு நடப்பது என்ன? அமானுஷ்ய பேயாக வந்து பழிவாங்குவது யார்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
அமானுஷ்ய சக்திகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளராக ஆதி நடித்திருக்கிறார் . கையில் நீண்ட மைக் வைத்துக் கொண்டு கூடவே சில கருவிகளையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று பேய் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முயலும் காட்சிகள் படபடப்பை அதிகரிக்கிறது.கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் லட்சுமி மேனனிடம் ஆதி உதவி கேட்பதும், ஒரு கட்டத்தில் லட்சுமி மேனனையே பேய் உலுக்கி எடுத்து தூக்கி வீசுவதை பார்த்து அதிர்ச்சி அடைவதும் அரங்கில் திகில் கிளப்புகிறது.
ஈரம் என்ற பேய் படத்தை வித்தியாசமான அணுகு முறையில் தந்த இயக்குனர் அறிவழகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சப்தம் என்ற மற்றொரு திகில் படத்தை விறுவிறுப்பு குறையாமல் தந்திருக்கிறார். இந்த படத்துக்காக அவர் திரட்டி இருக்கும் ஆதாரங்கள் கதைக்கு வலு சேர்க்கிறது. அந்த ஆதாரங்கள் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்த பிறகு வருகிறது. சிம்ரன், லைலா முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் என்ன வேடத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதை படத்திலேயே பார்த்து ரசிப்பது நல்லது. ஆனால் ஒரு விஷயம் இதில் லைலா rocks இனி அவரை பல படங்களில் வில்லியாக பார்க்கலாம்.
இசையமைப்பாளர் தமன்.எஸ். வெவ்வேறு உயிர்களின் இசை தொகுப்பை சப்தமாக மாற்றி காதுக்குள் ஒரு கவனம் செய்திருப்பது புதிய அனுபவம். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு அருமை..இசையால் உடல் ஊனமுற்றவர்களை குணப்படுத்த முடியும் என்பதை கதையின் கருவாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
சப்தம் இசை மிரட்டல் ..
நம்ம tamilprimenews.com rating 3.2/5