சுழல் 2 வெப் சீரீஸ் இரண்டாம் பாகம் விமர்சனம்

சுழல்  2 வெப் சீரீஸ்  இரண்டாம் பாகம் விமர்சனம்

படம் : சுழல் தி வோர்டெக்ஸ் சீசன் 2 (Suzhal – The Vortex Season 2)

நடிப்பு:கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கௌரி கிஷன், சம்யுக்தா, மோனிஷா பிளஸ்சி, சிரிஷா, அபிராமி போஸ், நிகிலா ஷங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், சாந்தினி, அஸ்வினி நம்பியார்

தயாரிப்பு: வால்வாட்சர் பிலிம்ஸ், அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்

கதை திரைக்கதை: புஷ்கர், காயத்ரி

இசை: சாம் சிஎஸ் படத்தொகுப்பு: ரிச்சர்ட் கெவின் ஒளிப்பதிவு: ஆபிரகாம் ஜோசப்  இயக்கம்: பிரம்மா மற்றும் சர்ஜுன் கே. எம்.     பி ஆர் ஓ: யுவராஜ்

ரிலீஸ்: அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் ஓ டி டி தளம்

 

 

சுழல் முதல் பாகம் வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. புஷ்கர் காயத்ரி வழங்கிய அந்த சீரிஸ் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் அதாவது சுழல் வோர்டெக்ஸ் சீசன் 2 தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினலில் வெளிவந்துள்ளது .முதல் பாகத்தின் தொடர்ச்சி தான் இரண்டாம் பாகம் என்றாலும், முதல் பாகத்தை விட இதில் காட்சி அமைப்புகள் இன்னும் மிரட்டலாக அமைந்திருப்பது சிறப்பு….

முதல் பாகம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை சொந்த சித்தப்பாவாலேயே பாலியல் பலவந்தம் பண்ணப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், துப்பாக்கியால் சுட்டு சித்தப்பாவை சாகடிக்கிறார். அதற்காக கைதாகி ஜெயிலில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்காக வாதாடுகிறார், பிரபல வழக்கறிஞர் லால். . முதல் பாகத்தில் நடித்த கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் எல்லாமே புதிது ..8 எபிசோட்கள் கொண்ட சுழல் வோர்டெக்ஸ் சீசன் 2 கதை என்ன? என்பதை பார்க்கலாம்..

ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை வழக்கில் அவருக்கு ஆதரவாக ஆஜராகிறார் வக்கீல் லால் கிட்டத்தட்ட வழக்கு வெற்றி பெறும் நிலையில் நான் அவரது கடற்கரை பங்களாவில் பிணமாக கிடக்கிறார்,. இவர் பொதுநல சிந்தனை கொண்டவர். எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ அதை எதிர்த்து வழக்குகள் போட்டு தீர்வு காண துடிப்பவர். இதனால் அவருக்கு நிறைய எதிரிகள் உண்டு. திடீரென்று அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அதுவும் தலையை தோட்டா துளைத்த நிலையில்.
வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் கதிரிடம் ஒப்படைக்கும் டி.ஐ.ஜி. அந்த ஏரியா காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து செயல்பட உத்தரவிடுகிறார். ஆய்வாளர் சரவணன் அது தற்கொலை தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.ஆனால் அது கொலை என்பதற்கு ஆதாரமாக லால் கொலை செய்யப்பட்ட வீட்டில், வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில் துப்பாக்கியுடன் கெளரி கிஷன் இருப்பது தெரிய வர…

இப்போது நடந்தது கொலை என்று முடிவு செய்து கௌரி கிஷ னை கைது செய்கிறார்கள். போலீஸ் விசாரணையில் அவர் பலத்த மௌனம் சாதிக்கிறார்.
இப்போது போலீசுக்கு ஒரு சந்தேகம்.. அப்படியே கொலை செய்துவிட்டு அவர் அலமாரியில் ஒளிந்திருந்தாலும் அந்த அலமாரியின் வெளிப்பகுதியை
பூட்டியது யார் எந்த கேள்வி விசாரணை அதிகாரி கதிரின் மண்டையை குடைய…இந்நேரத்தில் இன்னொரு அதிர்ச்சியாக மாவட்டத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்கறிஞர் லாலை கொலை செய்ததாக 7 இளம் பெண்கள் சரணடைகிறார்கள்….இதனால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. உண்மையில் லாலை சுட்டுக் கொன்றது யார்? இந்த எட்டு இளம் பெண்களுக்கும், லாலுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் அதிர்ச்சிகரமான பதில் அளிக்கிறது. …கொலை செய்த காரணம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள்
8 பெண்கள் ஒரு கொலை வழக்கில் சரணடைந்தாலும், அவர்கள் அனைவருக்கும் இடையே அதுவரை எந்தவித தொடர்பும் இல்லாததும், அவர்களின் பின்னணி குறித்த எந்தவித தகவல்களும் கிடைக்காததும், காவல்துறை விசாரணை மேற்கொண்டு நகர மறுக்க… வழக்கறிஞர் லாலை கொலை செய்ததாக   ஒருவர் சரணடைந்தால் சரி. எதற்காக எட்டு பெண்கள் சரணடைய வேண்டும்? உண்மையான குற்றவாளி இந்த எட்டு பேரில் ஒருவரா? ஒருவேளை இவர்கள் இல்லையென்றால் வேறு யார் கொலையாளி என்பதை சஸ்பென்ஸ் முடிச்சுகளோடு கொஞ்சமா எதிர்பார்ப்பு குறையாமல் தந்து இருக்கிறார்கள்.

 

வழக்கறிஞர் லால் நல்லவரா கெட்டவரா என்ற கோணத்தில் போகும்புஷ்கர்- காயத்ரியின் திரைக்கதை திருப்பங்களுடன், சமூக பிரச்சனையையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதில் கதையின் கனம் கூடி விடுகிறது. இயல்பான நடிப்பில் லால், அவரது மனைவியாக அஸ்வினி அனுபவ நடிப்பில் நமக்குள் கடக்கிறார்கள். மஞ்சிமா மோகன் அவரது காதல் கணவர் கயல் சந்திரன் தொடர்பான காட்சிகள் தொடரில் முக்கிய இடம் பிடிக்கிறது. , முதலாளி எதை சொன்னாலும் செய்ய வேண்டும் என்கிற கயல் சந்திரனின் கண் மூடித்தனமான அந்த விசுவாசம் பகீர் ரகம் என்றாலும், சந்திரன் நடிப்பில் முழு நிலவாக பிரகாசிக்கிறார்.எட்டு சிறுமிகளின் உயிரை காப்பாற்ற மஞ்சிமா மோகன் மேற்கொள்ளும் பகீரத முயற்சி ஒவ்வொன்றும் தாய்மை அவரை தூக்கி நிறுததுகிறது.

 

விசாரணை அதிகாரி கதிர் மேல் அவ்வப்போது எரிச்சலைக் கொட்டும் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சரவணன் சாலப் பொருத்தம் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் விசாரணை அதிகாரியாக நடிப்பில் பிரகாசிக்கிறார் கதிர்.   கதிர் கேட்டுக்கொண்டதால் வழக்கறிஞர் லால் கொலை வழக்கில் கைதான எட்டு பெண்களையும் சிறையில் ரகசியமாய் கண்காணிக்கும் பொறுப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ். கிளைமாக்சில் சிறைக்குள் எதிரிகளின் கொலை வெறி தாக்குதலில் இருந்து எட்டு பெண்களையும் காப்பாற்ற போராடும் தருணத்தில் நடிக்கும் துடிப்பு பதற்றமுமான ஐஸ்வர்யா awesome acting .ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப்பின் கேமரா தசரா திருவிழாவை கண்முன் காட்டி பிரமிக்க வைக்கிறது.  சாம் சி.எஸ்.சின் பாடல்களும் பின்னணி இசையும் கதையோடு நம்மை பிணைத்து விடுகிறது.புஷ்கர்-, காயத்ரியின் திரைக்கதையை பிரம்மா, சர்ஜுன் இயக்கி இருக்கிறார்கள்.ஒட்டுமொத்த எபிசோடடையும் எடிட்டர் ரிச்சர்ட் கெவின் கச்சிதமாக எடிட்… கொலை விசாரணையில் எதிர்பாராத திருப்பங்கள், கொலைக் குற்றவாளி யார் என்று கடைசி வரை ஊகிக்க முடியாத கிளைமாக்ஸ்.

.கதையில் வரும் அரக்கன் அதற்கேற்ப சூரசம்காரம், காளி அவதாரங்கள், திருவிழா, பக்தர்கள் காளி வேஷம் போட்டுஆடும் ஆக்ரோச ஆட்டம், அரக்கனின் ஆட்டம் எல்லாம் சிறப்பு காட்சிகளாக இடம் பெற்று கதைக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. வால்வாட்சர் பிலிம்ஸ், அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

சுழல் வோர்டெக்ஸ் 2வது சீசன் பார்க்க தொடங்கினால் 8 எபிசோட்  முடியும் வரை நகர முடியாது .. அந்த அளவு ஈர்ப்பு இந்த “சுழல் ” 2

நம்ம tamil prime news.com rating 3.7/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *