நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் .. திரை விமர்சனம்

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் .. திரை விமர்சனம்

படம் :நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK)

நடிப்பு:பவிஷ் நாராயண்,
அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா P வாரியர்,
வெங்கடேஷ் மேனன்,
ரம்யா ரங்கநாதன்,சித்தார்த்தா ஷங்கர்,.ராபியா கதூன் சரத்குமார்  .சரண்யாஆ டுகளம் நரேன்உ.தய் மகேஷ்ஶ், ரீதேவி

தயாரிப்பு:கஸ்தூரி ராஜா & விஜயலக்ஷ்மி

ஒளிப்பதிவு: லியான் பிரிட்டோ    இசை: ஜி வி பிரகாஷ் குமார்

இயக்கம்: நடிகர் தனுஷ்
:பிஆர்ஓ: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் RIAZ

தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் எழுதி  இயக்கி இருக்கும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

OPEN பண்ணா …..

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பவிஷ் நாராயணன் காதல் தோல்வியில் இருக்கும் மிடில் கிளாஸ் காதலன் நம்ம ஹீரோ.. இவனுக்கு மனதை மாற்ற பெண் பார்க்க அப்பா அம்மா அழைத்து செல்ல அங்கு பார்க்கும் பெண் இவன் சக பள்ளி தோழி…இருவரும் நட்பை தாண்டி திருமணம் செய்ய வேண்டுமானால் பழகி பார்க்க முடிவு செய்து பழக ஆரம்பிகிறார்கள்..! ஒரு நாள் அவளை பார்க்க கிளம்பும் வேளையில் ஒரு invitation வருகிறது..!முன்னாள் காதலிக்கு திருமணம் அதற்க்கான அழைப்பிதழ் வருகிறது.. பிரியா விடம் தன் முன்னாள் காதலை பற்றி சொல்ல கதை பின்னோக்கி நகர…

பவிஷ் ஒரு கேட்டரிங் படித்து வரும் அருமையான செஃப் இவர் கோடீஸ்வரன் மகள் அனிகாவை காதலிக்கிறார். காதலன் பவிஷை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தந்தை சரத்குமாரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால் சரத்குமாருக்கு பவிஷை பிடிக்கவில்லை. மகளுக்காக சில நாட்கள் தன்னுடன் பவிஷ் பழக வேண்டும் அதன் பிறகு அவன் உனக்கு ஏற்றவனாக இருப்பானா என்பதை கூறுவதாக சரத் கண்டிஷன் போடுகிறார். அதை ஏற்று பவிஷ் சரத்குமார்  உடன் பழகுகிறார்…ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமாக திடீரென்று அனிகாவை வெறுப்பது போல் பவிஷ் ஒதுங்கிச் செல்கிறார்.
மனம் நொந்த அனிகா தன் தந்தை கைகாட்டிய மாப்பிள்ளையை மணக்க சம்மதிக்கிறார். தனது திருமண பத்திரிக்கையை பவிஷுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த திருமணத்தில் பவிஷ் பங்கேற்க செல்கிறார். அங்கு என்ன நடந்தது..??அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் லவ் சென்டிமென்ட் ஆகியவற்றை கலந்து சொல்கிறது கிளைமாக்ஸ்…!

நடிகர் தனுஷ் க்கு  இந்த கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் ஆனால் ஹீரோ வாய்ப்பை பவிஷுக்கு தந்திருக்கிறார். புதுமுகம் பவிஷ், எப்படி நடிக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று தனுஷ் சொல்லிக் கொடுத்தாரோ அதை அச்சு பிறழாமல் செய்திருக்கிறார் அதுவே பவிஷுக்கு பெரிய பிளஸ்..!திடீரென்று அனிகாவை முக்கிய காரணத்திற்காக பவிஷ் வெறுப்பதும் பின்னர் அவரது திருமணத்தில் கலந்து கொள்ள சென்று அவமானபட்டு காதல் தோல்வியில் ரோட்டில்.உருண்டு புரள்வது, பரிதவிப்பது. என புதுமுகம் பவிஷ் நன்றாக நடித்திருக்கிறார்.

திரைக்கதையில் வாய்ப்பு இருந்தும் ஆபாச கலப்பில்லாமல் காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர் தனுஷுக்கு பராட்டுக்கள்…!

பவிஷின் நண்பர்கள் மற்றும் காதலியாக வரும் பிரியா பி வாரியார் கலகலப்புக்கு பஞ்சமில்லை..! அதுபோல திருமண ஈவன்ட் மேனேஜராக வரும் ரம்யா ரங்கநாதன் சரியான சர்ப்ரைஸ் தருகிறார்…!அதே சமயம் படத்தில் பெண்கள் குறிப்பாக இளம் தோழிகள் எல்லாமே PUB பார் குடிமகள்களாக காட்டுவது  போல் ஆகிறது. அதை தவிர்த்திருக்கலாம்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – கவித்துவமான காதலின் கோபம் அல்ல நேசம்..!

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.7/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *