தண்டேல் திரைவிமர்சனம்

படம்: தண்டேல்
எழுத்து & இயக்கம் : சந்து மொண்டேட்டி
ஒளிப்பதிவு : ஷ்யாம் தத் ( ISC)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
படத்தொகுப்பு : நவீன் நூலி
கதை : கார்த்திக் தீடா
தயாரிப்பு நிறுவனம் : கீதா ஆர்ட்ஸ்
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாஸ்
நடிப்பு: நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், நரேன்
ஆந்திராவில் ஒரு கடற்கரை கிராமம் அங்குள்ள மீனவ மக்கள் குஜராத் கடல் பகுதிகளில் மாத கணக்கில் தங்கி மீன் பிடித்து அதில் வரும் வருமானம் கொண்டு வாழ்க்கையை நடத்துவார்கள்… அந்த மீனவ குரூப் தலைவனாக இருப்பவனுக்கு தண்டேல் என்று பட்டம் சூடுவார்கள்.அது என்ன தண்டேல்.. அதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழும நிலையில் மீனவர்களின் தலைவனுக்கு தண்டேல் என்று பெயர் என இயக்குனர் விளக்கம் அளிக்கிறார்..
நம்ம ஹீரோ நாக சைதன்யா மற்றும் ஹீரோயின் சாய் பல்லவி இருவரும் சிறு வயதில் இருந்தே நல்ல நட்புடன் பழகினாலும்.. அவர்கள் வளர வளர காதலும் வளர்கிறது.. ஹீரோ மீனவர்களோடு குஜராத் கிளம்பி போக சாய் பல்லவி அனுமதிக்க வில்லை…
நீ மீன் பிடிக்க செல்லக்கூடாது. உனக்கு நான் வேண்டுமா? இல்ல தண்டேல் என்ற பதவி வேண்டுமா ? என்று சாய் பல்லவி கோபத்துடன் கேட்க அவரை சமாதானம் செய்வதற்காக நாக சைதன்யா படும் பாடும் அதேநேரத்தில் அங்கிருக்கும் ரயில் புறப்பட அதில் ஏறினால்தான் சக மீனவர்களுடன் செல்லமுடியும் என்ற தவிப்பையும் ஒருசேர காட்டி படபடக்க வைக்கிறார் சைதன்யா. அதேபோல் பாகிஸ்தான் சிறையில் அடைபட்டு அங்குள்ள சிறை கைதிகளிடம் தேசபக்தி கொண்டு நாக சைதன்யா மோதும் காட்சிகள் அரங்கை பரபரக்குகிறது.
நாக சைதன்யாவே இந்த அளவுக்கு நடித்தால் சாய்பல்லவி நடிப்பை கேட்க வேண்டுமா? எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் நடிப்பில்..
சைதன்யாவிடம் 100% காதலை கொடடும் சாய்பல்லவி தன் பேச்சை சைதன்யா மதிக்கவில்லை என்பதற்காக அவரிடம் போனில் கூட பேச முடியாது என்று வைராக்கியமாக இருப்பதும் கடைசி வரை அந்த வைராக்கியத்தை அவர் கடைபிடிப்பதும் என ஒரு காதல் யுத்தத்தையே நடத்தி இருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டு எல்லையில் அந்த நாட்டு கடலோர காவல் படையிடம் சிக்கி கராச்சி சிறையில் அடைக்க படுகிறார்கள்.. அங்கே நம் நாட்டு தேசிய கீதம் அவமான படுத்த படுவதை மற்றும் ஜெயிலுக்குள் இந்தியர்களுக்கு அவர்கள் கொடுக்கும் தொல்லைகள்
.. இவைகளை பார்க்கும் போது தியேட்டர் ல இருக்கும் அனைவருக்கும் தேசபக்தி என்னவென்று புரியவரும்…
ஒரு காட்சியில் article 370 காஷ்மீர் இல் இருந்து இந்தியா நீக்கிவிட்டதை அறிந்ததும்
… பாக்கிஸ்தானில் கலவரம்.. இவர்கள் விடுதலை தள்ளி போகிறது… பின் எப்படி விடுதலை ஆனார்கள்.. நாக சைதன்யா சாய் பல்லவி ஜோடி சேர்ந்ததா..? என்பதை இரு நாட்டு எல்லைகளில் பரபரப்பாக படமாக்கி உள்ளார்கள்..!
நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட கதையாக இருந்தாலும் அதில் தேசபக்தி, குடும்ப உறவு, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு உன்னதமான காதல் ஆகியவற்றை கலந்து நிறைவான ஒரு படமாக தந்திருக்கிறார் இயக்குனர் சந்து மொண்டேட்டி. saய் பல்லவியின் நிச்சயதார்த்த மாப்பிள்ளையாக வந்து அவரது மீனவர் மீட்பு போராட்டத்தில் உறுதுணையாக நிற்கும் வேடம் கருணாகரனுக்கு. மீட்டர் தாண்டாத அந்த நடிப்புக்கு நிச்சயம் ஒரு சபாஷ் சொல்ல வேண்டும்.
சாய் பல்லவியின் அப்பாவாக பப்லு, மீனவ நண்பராக ஆடுகளம் நரேன், அவரது கூட்டணி, பாகிஸ்தான் ஜெயில ராக பிரகாஷ் பெலவாடி என பாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு படத்தை மேலும் தூக்கி நிறுத்துகிறது.
படத்தின் இன்னொரு பலமாக அமைந்திருப்பது தேவி ஸ்ரீபிரசாத்தின் இசை. குறிப்பாக காதல் பாடல்களில் பொங்கி வழிகிறது இசை.
ஷாம்தத்தின் கேமராவில் அந்தக் கடற்கரை, கடல் பயண காட்சிகள் அத்தனையும் அத்துணை அழகு.சந்து மோண்டட்டி இயக்கி இருக்கிறார். கடலோர கிராமத்து காதலை அழகுற சொன்னவர், பாகிஸ்தான்ஜெயில் அதிகாரிகளின் மனிதநேயத்தைகாட்சிப்படுத்தும்இடத்திலும் சிறப்பான இயக்கம்.
ஆந்திரவின் இந்த தேச பக்தி படம் மிக சிறந்த பான் இந்தியா படம்…தமிழ்நாட்டிலும் இப்படி பட்ட படங்கள் வர வேண்டும்..! படகுழுவினருக்கு வாழ்த்துக்கள் 💐
நம்ம tamilprimenews.com rating 4.1/5