விடா முயற்சி திரை விமர்சனம்..
Lyca production தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளி வந்துள்ள படம் விடாமுயற்சி..
இந்த படத்தில் அஜித்குமார் அர்ஜுன் ஆரவ் த்ரிஷா ரெஜினா ரம்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.. படத்துக்கு இசை அனிருத்.. ஒளிப்பதிவு. ஓம்பிரகாஷ்.
இப்போ கதைக்கு வருவோம்..
கதை களம் அசர்பைஜான் நாடு.!
12 வருடம் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அஜித் திரிஷா ஜோடி..! இவர்களுக்கு குழந்தை இல்லை சூழ்நிலை காரணமாக இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றும் அறிந்து கொள்கிறார்கள்… நாட்கள் நகர நகர கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வருகிறது.. திரிஷா தனக்கு இன்னொருவர் மேல் விருப்பம் இருப்பதாகவும் அதனால் பிரிந்து விடலாம் என முடிவு செய்து விட்டதாக அஜித் கிட்ட கூற..!!! தன் மனைவி பிரிவது ஏற்று கொள்ள மனம் இல்லாவிட்டாலும்.. அவரை கடைசியாக திரிஷாவின் அப்பா வீட்டுக்கு கொண்டு போய் விட கிளம்புகிறார்கள்..!
கார் பயணத்தோடு கதை நகர தொடங்குகிறது
.!
போகும் வழியில் மிக பெரிய விபத்தை தவிர்க்க அங்கு ஆரவ் அஜித் குமார் மோதல் ஆரம்பம்… அடுத்தடுத்து ஆரவ் குரூப் இவர்களிடம் வம்பு செய்ய ஒரு கட்டத்தில் நடு ரோட்டில் அஜித் கார் “breakdown”ஆகி விட.. அங்கு வரும் டிரக் ஒன்றில் தன் மனைவி த்ரிஷாவை அருகில் உள்ள restarunt ஒன்றில் wait பண்ண சொல்கிறார்.. அந்த டிரக் ல் இருக்கும் அர்ஜுன் மற்றும் ரெஜினா த்ரிஷாவை பாதுக்காப்பாக கூட்டி செல்வார்கள் என்று நம்பி அனுப்பி வைக்கிறார்.. அதன் பின் தன் கார் சரி செய்து திரிஷாவை தேடி அஜித் கிளம்ப… கதை பல ட்விஸ்ட்கள் மத்தியில் த்ரிஷா காணாமல் போகிறார்… மனைவியை தேடும் கணவன் கண்டுபிடித்தாரா..? த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு..? அர்ஜுன் ரெஜினா ஆரவ் இவர்கள் யார்..? என்பதை திரைக்கதையில் அந்த நாட்டு பாதைகளில் ஓட விட்டுள்ளார் மகிழ் திருமேனி இயக்குனர்..!
அஜித் ஒரு சாந்தமான மனைவியை நேசிக்கும் கணவறாக தேடும் படலத்தில் வாங்கும் அடிகள் அவமானங்கள் இவற்றை தாங்கி கொண்டு.. ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து எதிரிகளை துவம்சம் செய்வது.. அஜித் ராக்கிங் performance..!!
திரிஷா சிறுது நேரமே வந்தாலும் காதல் காட்சிகளில் ஜோடி அருமை..!
அர்ஜுன் மங்காத்தா நடிப்பை இதில் எதிர் பார்க்க முடிய வில்லை.. ரெஜினா மற்றும் ரம்யா கொடுத்த பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர்.. ஆரவ் அருமையான intro பிற்பாதியில் அவரும் சரியாக பயன் படுத்த படவில்லை..!!
அனிருத் இசை அஜித் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது..
அசர்பைஜான் நாட்டின் பாதைகளில் கார் பயணத்தை racing சேசிங் என்று அனைத்து கோணத்திலும் அருமையாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் 💐
படம் ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருவது போல இருப்பது படத்துக்கு பிரேக் போடுகிறது..!
அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்…!
நம்ம tamilprimenews.com rating 3.9/5