குடும்பஸ்தன் திரை விமர்சனம்

குடும்பஸ்தன் திரை விமர்சனம்

 

சமூகத்தில் மிடில் கிளாஸ் குடும்பஸ்தனாக வாழும் ஒவ்வொரு மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கண் முன் கொண்டு வந்து திரைப்படமாக உருவாக்கி வெற்றி பெற்று இருக்கிறார்கள். இப்படத்தில்நடிகர் மணிகண்டன் நாயகனாக ,சான்வே மேகனா,நாயகியாக,குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், “ஜெய ஜெய ஜெய ஹே” புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 

படத்தின் கதை

மணிகண்டன் மாற்று சாதி பொண்ணை காதலித்து கலயாணம் செய்து கொண்டு அப்பா அம்மா வுடன் வசித்து வருகிறார்..இவர் அக்கா கணவர் மாமா குரு சோமசுந்தரம் இவரை மட்டம் தட்டி கொண்டே இருப்பார்.. மாமா முன்னால் பெருசா வாழ்ந்து காட்ட வேண்டும்… வீடு புதிதாக சீரமைக்க வேண்டும்.. தன் தாய்க்கு கோயில் சுற்றுலா செல்ல 50000 வேண்டும் மேலும் பிறக்க போகும் குழந்தைக்கு செலவு செய்ய வேண்டும்….. இத்தனை பிரச்சனைகள் நடுவே மணிகண்டன்..
தனக்கு சூழ்நிலை காரணமாக அலுவலகத்தில் வேலை பறி போனதை யாருக்கும் சொல்லாமல் கடன் வாங்கி சமாளிக்க முயலுகிறார்.

அதனால் அவர் வேறு வேலை தேடும் போது சந்திக்கும் அடுகடுக்கானா பிரச்சனை.. கடன் அடைத்தாரா..? வேலை கிடைத்ததா?மாமா முன்னால் தன்னை நிரூபித்தாரா..?
இவை அனைத்துக்கும் விடை குடும்பஸ்தன் படத்தில் நகைசுவை கலந்து சொல்லி உள்ளார் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி..

நாயகன் மணிகண்டன், கதையின் நாயகனாக நடித்திருக்கிறது. முழுக் கதையும் இவரை சுற்றியே நடக்கிறது. இதற்கு முன் நடித்த லவ்வர், குட் நைட் என்ற இரு படங்களில் கொடுத்த யதார்த்த நடிப்பை இப்படத்திலும் கொடுத்து அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் மணிகண்டன். தனது மனக்குமுறலை பாத்ரூமில் வைத்து தனக்குத் தானே பேசி கதறும் காட்சியில் பலருக்கும் காட்சியானது பலருக்கும் கனெக்ட் ஆகும் காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குனர். மேலும், வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசும் காட்சி, க்ளைமாக்ஸில் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேசும் காட்சி, பணத்திற்காக வேறு வேறு மாவட்ட மொழிகளில் பேசுவது, தனது மாமாவாக வரும் குருசோமசுந்தரத்தை விழாவில் ஓட விடும் காட்சி என பல காட்சிகளில் கைதட்டல் கொடுக்கும் அளவிற்கு நடிப்பை வீசியெறிந்திருக்கிறார் மணிகண்டன்.

மணிகண்டனின் மனைவியாக நடித்த சான்வி மேக்னா கதாபாத்திரமாகவே மாறி நடிப்பில் கூடுதல் கவனம் ஈர்த்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், பெற்றோர்களாக நடித்திருந்த ஆர் சுந்தர்ராஜன், மலையாள நடிகை குடாசாநத் கணக்கம் இருவரும் தங்களது கேரக்டர்களை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். அதிலும், முதல் பாதியில் அதிகமாகவே கவனிக்க வைத்திருந்தனர்.

அக்காவாக நடித்த நிவேதிதா ராஜப்பன் மாமாவாக நடித்திருந்த குரு சோம சுந்தரம், நண்பனாக நடித்தவர், ஓனராக நடித்த பாலாஜி சக்திவேல் என படத்தின் கேரக்டர்கள் எதுவும் சோடை போகவில்லை.

நல்லதொரு காமெடி, எண்டர்டெயின்மெண்ட் என கலந்து நகர்கிறது முதல் பாதி. இரண்டாம் பாதியில் ஏனோ சிறுசிறு வேகத்தடைகள் வந்தது போன்று ஆங்காங்கே திரைக்கதை வேகம் குறைந்து வேறு எங்கோ கதை பயணிக்க தொடங்கியது. சீரியல் பார்த்த உணர்வை இரண்டாம் பாதி கொடுத்துவிட்டது.

.இடைவேளைக்கு பின் ஏற்படும் தொய்வை எடிட்டர் கவனத்திருக்கலாம்..ஒளிப்பதிவு அருமை.

அனைவரும் குடும்பத்தோடு வந்து ரசித்து பார்க்கலாம் இந்த குடும்பஸ்தனை..!. இயக்குனர் மற்றும் நகல்டிஸ் team மணிகண்டன் குரூசோமசுந்தரம் அனைவர்க்கும் தனி பாராட்டுக்கள்..

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 4/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *