ராமாயணா:தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா திரை விமர்சனம்

கீக் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் அர்ஜுன் அகர்வால், சிபி கார்த்திக், தமோட்சு கோசானோ தயாரித்திருக்கும் ராமாயணா:தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா படத்தின் கிரியேட்டிவ் டைரக்டர் வி.விஜயேந்திர பிரசாத், திரைப்பட இயக்குநர்கள்: கொய்ச்சி சசாகி, ராம் மோகன்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-நிர்வாக தயாரிப்பு: மோக்ஷா மோட்கில், இணை தயாரிப்பு : மோகித் குக்ரேட்டி, சீனியர் புரொடியூசர்: ஜானி எமமோட்டோ, கிரியேட்டிவ் புரொடியூசர்ஸ்: மேக்னா தல்வார் – விதாத் ராமன் – அமோன் சுகியிரா -க்ஷிடிஸ் ஸ்ரீPவத்ஸா,வெளியீடு : கீக் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் – ஏ ஏ, ஃபிலிம்ஸ் – எக்ஸெல் என்டர்டெயின்மென்ட் ,பின்னணி குரல் கலைஞர்கள் :ராமர் – செந்தில்குமார், சீதை – டி. மகேஸ்வரி, ராவணன் – பிரவீன் குமார், லட்சுமணன் – தியாகராஜன், ஹனுமான் – லோகேஷ், நரேட்டர்- ரவூரி ஹரிதா, மக்கள் தொடர்பு – யுவராஜ்
கோசலை ராஜ்ஜியதில் அயோத்தி ராமரின் புராணக்கதை ஒரு பழங்கால இதிகாசத்தின் இதயப்பூர்வமான வெளிப்பாடாக அனிமேஷன் வடிவில் அதற்கு ராமர் குரல் நடிப்பில் செந்தில்குமார், சீதையாக குரல் நடிப்பில் டி. மகேஸ்வரி, ராவணனாக குரல் நடிப்பில் பிரவீன் குமார், லட்சுமணன் குரல் நடிப்பில் தியாகராஜன், ஹனுமான் குரல் நடிப்பில் லோகேஷ் மற்றும் ஆரம்பம் முதல் இறுதிய வரை இடையிடையே கதையின் சம்பவங்களை அழகாக விவரித்துள்ளார் நரேட்டர் ரவூரி ஹரிதா.
கதைக்களத்தின் துல்லியம் சக்திவாய்ந்ததாக அமைந்து அனிமேஷன் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி அதிரடி மற்றும் போர் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தி புதிய அனுபவத்தை தருகிறது. ஒட்டுமொத்தமாக, படம் இந்து கடவுளான ஸ்ரீ ராமின் வாழ்க்கையின் அழகான பிரதிபலிப்பாகும். அனிமேஷன்கள் மற்றும் உரையாடல்கள், கலாச்சாரம், மரபுகள் மற்றும் மதம் பற்றி அறிந்தவர்களுக்கு, அவரது வாழ்க்கையின் கதையை எளிதாக்கும் ஒரு அனிமேஷன் படம் கதையை புரிந்துகொள்ளக்கூடியதாகவும் ஈடுபாட்டுடன் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி ரசிக்க வைக்கிறது.
இளவரசர் ராமரின் பிறந்த இடமான அயோத்தி, மிதிலாவில் சீதாவை மணப்பது, இளவரசர் ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணருடன் வனவாசம் கழித்த பஞ்சவடி காடு, சீதையை ராவணன் கடத்திச் செல்லும் போது அவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஜடாயு பறவை, அனுமான் சீதையை கண்டுபிடிப்பது பின்னர் இலங்கையை தீயால் துவம்சம் செய்து விட்டு வருவது, ராமர் அனுமனிடமிருந்து சீதையைப்பற்றி அறிந்து கொள்வது, ராமர் சேது பாலத்தின் உருவாக்கத்தையும், அனைத்து வனவிலங்குகளும் உதவி செய்வது, ராமர் மற்றும் ராவணன் இடையே நடந்த புகழ்பெற்ற மோதலின் போர்க்களம், ராவணனின் தம்பி கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம், வானரப்படை மற்றும் லட்சுமணனின் காயங்களை குணப்படுத்த சஞ்சீவனி மூலிகையை இமயமலையிலிருந்து கொண்டு வரும் ஹனுமானின் சாகச பயணம் என்று அனைத்தும் அனிமேஷன் பாணியில் அழகாக வழங்கப்பட்டுள்ளன.
இளவரசர் ராமரின் புராணக்கதை ஒரு பழங்கால இதிகாசத்தின் இதயப்பூர்வமான வெளிப்பாடாக அனிமேஷன் வடிவில் அதற்கு ராமர் குரல் நடிப்பில் செந்தில்குமார், சீதையாக குரல் நடிப்பில் டி. மகேஸ்வரி, ராவணனாக குரல் நடிப்பில் பிரவீன் குமார், லட்சுமணன் குரல் நடிப்பில் தியாகராஜன், ஹனுமான் குரல் நடிப்பில் லோகேஷ் மற்றும் ஆரம்பம் முதல் இறுதிய வரை இடையிடையே கதையின் சம்பவங்களை அழகாக விவரித்துள்ளார் நரேட்டர் ரவூரி ஹரிதா.
படம் இந்து கடவுளான ஸ்ரீ ராமின் வாழ்க்கையின் அழகான பிரதிபலிப்பாகும். அனிமேஷன்கள் மற்றும் உரையாடல்கள், கலாச்சாரம், மரபுகள் மற்றும் மதம் பற்றி அறிந்தவர்களுக்கு, அவரது வாழ்க்கையின் கதையை எளிதாக்கும் ஒரு அனிமேஷன் படம் இது .
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.4/5