பூர்வீகம் ..திரை விமர்சனம்

பூர்வீகம் ..திரை விமர்சனம்

பூர்வீகம் கதை என்ன .. கால சக்கரம் சுழலும் போது குடும்பதில் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல் என்ன என்பதை சிக்கல் இல்லாமல் சொல்லி உள்ளார் இயக்குனர் . 

 

 

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் தனது மகன் கதிரை விவசாயத்தில் ஈடுபடுத்தாமல் நன்றாக படிக்க வைத்து, அரசு அதிகாரியக்க ஆசைப்படுவதோடு, கிராமத்து சொந்தங்களை உதறிவிட்டு நகர வாழ்க்கையில் தனது மகனை ஈடுபடுத்த விரும்புகிறார். அவரது ஆசைப்படி, அவரது மகன் நன்றாக படித்து அரசு அதிகாரியாவதோடு, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.

 

தனது ஆசைப்படி தன் மகன் வாழ்க்கையில் உயர்ந்துவிட்டாலும், ஒரு தந்தையாக போஸ் வெங்கட்டினால் மகனின் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போவதோடு, அவரிடம் உரிமையாக உறவாட முடியாத சூழலும் உருவாகிறது. நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் மகனையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படும் போஸ் வெங்கட்டின் நிலை மாறியதா?, பூர்வீகத்தை விட்டுவிட்டு படிப்புக்காகவும், பணிக்காகவும் நகர வாழ்க்கையில் ஈடுபட்டு, தனது பெற்றோரையே மறந்துபோகும் மனநிலைக்கு ஆளான கதிர், மனம் மாறினாரா? இல்லையா? என்பதை இளைய சமுதாயத்தினருக்கான வாழ்வியல் பாடமாக சொல்வதே ‘பூர்வீகம்’.

தந்தை சொல்படி வாழும் கிராமத்து இளைஞர் மற்றும் பெற்றோரை கவனிக்க முடியாமல் தவிக்கும் நகரத்து குடும்பத் தலைவர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நாயகன் கதிர், இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பில் வேறுபாட்டை காட்டியிருப்பதோடு, தனது உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் மியா ஸ்ரீ குடும்ப பாங்கான முகத்தோடும், எளிமையான அழகோடும் கிராமத்து பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவரது வெகுளித்தனமான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

 

 

 

 

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், நகர வாழ்க்கை மோகத்தால் மகனை படிக்க வைத்தாலும், அவர் தன்னிடம் இருந்து விலகும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இடங்களில் கண்கலங்க வைத்துவிடுகிறார். போஸ் வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனியும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், சிவக்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சாணக்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமத்து மண் மணத்தோடு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை மாலை நேரத்து காற்றாக சுகம் தரும்படி பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் விஜய் மோகன், கிராமத்து அழகையும், மக்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம், காட்சிகளில் இருக்கும் வண்ணங்களை சரியான முறையில் கையாள தவறியிருக்கிறார்.

 

 

படிப்பிற்காகவும், தொழிலுக்காகவும் பூர்வீகத்தை விட்டுவிட்டு நகரத்திற்கு வரும் இளைஞர்கள், தங்களது கலாச்சாரங்களையும், உறவுகளின் மேன்மைகளையும் மறந்து போகும் போது, வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் , விவசாயத்தின் முக்கியத்துவத்தை உரத்த குரலில் சொல்லி மக்களை யோசிக்க வைத்திருக்கிறார்.

கலாச்சாரம், காதல், திருமணம், உறவுகளின் முக்கியத்துவம் என்று பார்வையாளர்களுக்கு கிராமத்தில் பயணித்த உணர்வை கொடுக்கும் வகையில் காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் ஜி.கிருஷ்ணா,

நீண்ட நாட்களுக்கு பிறகு உறவுகளின் வலிமையை வெள்ளிதிரையில் ரசிக்க செய்த படக்குழுவினரக்கு பாராட்டுக்கள் ..இயக்குனர்  ஜி.கிருஷ்ணன்.. படம்  கமர்ஷியலாகவும், அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியும் கொடுத்திருக்கிறார்.

நம்ம tamilprimenews.com ரேட்டிங் ..  3.1/5

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *