அலங்கு திரை விமர்சனம் !!

எழுத்து & இயக்கம் :- எஸ் பி சக்திவேல்.
ஒளிப்பதிவாளர் :- பாண்டிக்குமார்.
படத்தொகுப்பாளர் :- சான் லோக்கேஷ்.
இசையமைப்பாளர் :- அஜீஷ்.
தயாரிப்பு நிறுவனம் :- DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணி.
கோவைஅருகே உள்ள ஆனைக்கட்டி பகுதியில் கதாநாயகன் குணாநிதி தனது தாய் ஸ்ரீரேகா மற்றும் தங்கையோடு அங்குள்ள மலைகிராமம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார்கள்.
தனது மகன் குணாநிதியின் தாய் ஸ்ரீரேகா வட்டிக்கு கடன் வாங்கி டிப்ளமோ படிக்க வைக்கிறார்.
ஆனால், கல்லூரியில் போராடும் குணம் கொண்ட குணாநிதியை சஸ்பெண்ட் செய்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் குணாநிதி சாக கிடந்த ஒரு நாயை காப்பாற்றி காளி என்று பெயர் சொல்லி தன்னுடனே வளர்த்து வருகிறார்
தன் தாய் ஸ்ரீ ரேகா கிட்ட கடன் கொடுத்தவர் பணம் கேட்டு தாயை மிரட்டுவதை கண்டு குணாநிதி வருமானம் தேடி தனது நண்பர்களுடன் தான் வளர்த்த அந்த நாயையும் அழைத்து கொண்டு கேரளாவில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்கிறார்.
நம் கதாநாயகன் குணாநிதி வேலைக்குச் செல்லும் ரப்பர் தோட்டத்தின் முதலாளியாக இருக்கும் செம்பன் வினோத் அப்பகுதியின் நகராட்சி தலைவராகவுமே இருக்கிறார்.
ரப்பர் தோட்டத்தின் முதலாளியாக இருக்கும் செம்பன் வினோத்க்கு திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்த ஒரு பெண் குழந்தை மிகவும் செல்லமாக வளர்த்து வருகிறார்.
செம்பன் வினோத் வீட்டில் வைத்து நாய் ஒன்று தனது செல்ல மகளை பிறந்தநாள் அன்று கடித்து விட, இதனால் கோபம் கொண்ட செம்பன் வினோத், தனது அடி ஆட்களை கூப்பிட்டு அந்த ஏரியாவில் ஒரு நாயும் இருக்கக் கூடாது அனைத்தையும் கொன்று விடுமாறு கூறுகிறார்.
செம்பன் வினோத்தின் அடியாட்களும் கிடைக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த ஏரியாவில் உள்ள கையில் கிடைக்கும் அனைத்து நாய்களையும் கொன்று குவிக்க கதாநாயகன் குணாநிதியின் நாயையும் செம்பன் வினோத்தின் ஆட்கள் பிடித்து சென்று விட்டார்கள்.
கதாநாயகன் குணாநிதியின் நாயை கண்டுபிடித்தார்களா?, கண்டு பிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த “அலங்கு” திரைப்படத்தில் மீதிக்கதை.
முற்பாதி Man vs Dog
பிற்பாதி Man vs Man
என்கிற பாணியில் விருவிறுப்பாக போகிறது..!
குணாநிதி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்… இவர் ஏற்கெனவே selfie படத்தில் 2nd ஹீரோ வாக நடித்துள்ளார்
மலைவாழ் பழங்குடியினர் வாழ்க்கையுடன் பயணித்து தர்மனாக கல்லூரி படிப்பை சூழ்நிலை காரணமாக விட்டு விட்டு தன் குடும்ப நலனுக்காக தாய் பெற்ற கடனை அடைக்க வருமானம் தேடி கேரளாவில் கூலி வேலைக்கு செல்வது… மேலும் வில்லனிடமிருந்து நாயை (காளி) காப்பாற்ற போராடும் இடங்களிலும், சண்டை காட்சிகளும் குணாநிதி திரும்பி பார்க்க வைக்கிறார்.. முதல் பட நாயகன் போல் இல்லாமல் நல்ல நடிப்பு அனுபவம் பெற்றவர் போல் வலம்வருகிறார்… நாய் மீது பாசம் காட்டுவது…தாய் மற்றும் தங்கை மீதான அன்பை வெளிப்படுத்துவது என இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குணாநிதி கவனிக்க படும் நடிகராக வருவார்..!
வில்லனின் நம்பிக்கை பெற்ற அடியாளாக அப்பானி சரத் நடிப்பு மிரட்டலாக இருந்தது.
செம்பன் வினோத் வில்லனாக மிரட்டினாலும் தன் மகளின் மேல் பாசத்தை அதிகமாக காட்டும் தந்தையாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
காளி வெங்கட் மலையன் பாத்திரத்தில் ஹீரோவின் மாமாவாக சிறப்பாக நடித்துள்ளார் , அதே நேரத்தில் தாயாக வரும் ஸ்ரீரேகா கண்களாலேயே மிரட்டியுள்ளார்.tea கடை மற்றும் வாழை தோப்பு சண்டை காட்சியில் மிரட்டியுள்ளார். திரையுலம் வாய்ப்பு தரும்.
இவர்களுடன் ரெஜின் ரோஸ், சவுந்தர்ராஜா, கொட்ரவை, செம்பன் வினோத் மகளாக வரும் தீக்ஷா, மஞ்சுநாதன் ஆகியோர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்குனர் மற்றும் படகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐
நம்ம tamilprimenews. com ரேட்டிங் 3.9/5