ரசிகர்களின் இதயங்களை திருடிய ‘முஃபாசா: தி லயன் கிங்’ !!

ரசிகர்களின் இதயங்களை திருடிய ‘முஃபாசா: தி லயன் கிங்’  !!

கிறிஸ்துமஸ் 2024 பண்டிகைக்கு குடும்பங்களை மகிழ்விக்கும் விதமாக முஃபாஸாவுக்காக ஷாருக்கான், மகேஷ் பாபு மற்றும் அர்ஜுன் தாஸ் குரல்களில் ‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை திருடி பாக்ஸ் ஆபிஸில் ஆட்சி செய்கிறது!

தமிழில் ‘முஃபாஸா: தி லயன் கிங்’ படத்திற்காக அர்ஜுன் தாஸின் தனித்துவமான குரல், பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. அவரது குரல் முஃபாசா கதாபாத்திரத்தை மறக்கமுடியாததாகவும் பார்வையாளர்களுக்கு இன்னும் நெருக்கமானதாகவும் மாற்றியுள்ளது. ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபு முறையே இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளில் தங்கள் குரல் மூலம் பலம் சேர்த்தாலும் அர்ஜுன் தாஸின் குரல் தனித்து தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அர்ஜுன் தாஸின் ஆழமான மற்றும் கட்டளையிடும் குரல் நடிப்பு முஃபாசா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகவும் அதனை வேறொரு தளத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.

கிறிஸ்மஸ் நெருங்கும் இந்த வேளையில், ‘முஃபாசா: தி லயன் கிங்’ பிவிஆர் ஐநாக்ஸ், சினிபாலிஸ் போன்ற அனைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் சுமார் 44,000 டிக்கெட் முன்பதிவுகளை கொண்டுள்ளது. ‘புஷ்பா 2’ மற்றும் ‘பேபி ஜான்’ ஆகிய படங்களின் கடுமையான போட்டி இருந்த போதிலும் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபுவின் அற்புதமான குரல் நடிப்பு படத்தின் வெற்றிக்கு அச்சாரமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *