“பிரதர்” திரைப்படம்,  ZEE5 இல் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

“பிரதர்” திரைப்படம்,  ZEE5 இல் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதர் திரைப்படம் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காமெடி படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்களுக்கு விருந்தாக இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன்  ZEE5 இல் பிரதர் திரைப்படத்தைக்  கண்டுகளியுங்கள்.

கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த இப்படம் தற்போது ZEE5 தளத்தில் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இயக்குநர் ராஜேஷ் M கூறியதாவது…
பிரதர் திரைப்படம் மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு. திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் தந்த வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது. ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஜெயம் ரவியை இயக்கியது மிக அட்டகாசமான அனுபவம். இப்போது இந்த திரைப்படத்தை உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள், இந்த ZEE5 டிஜிட்டல் வெளியீடு மூலம் ரசிக்கவுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி. அவர்களின் கருத்துக்களை அறிய ஆவலுடன் உள்ளேன்.

நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது…
பிரதர் படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். என்னிடமிருந்து ரசிகர்கள் குடும்பத்தோடு ரசிக்கும் படைப்பை எதிர்பார்த்த நிலையில் இந்தப்படம் மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்தது. அனைவரும் ரசிக்கும்படி அருமையான கதையில், ஒரு அசத்தலான பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தந்ததற்கு இயக்குநர் ராஜேஷிற்கு நன்றி. என்னுடன் இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது ZEE5 உடன் வீட்டில் இருந்தபடியே அனைவரும் இப்படத்தை கண்டு ரசிக்கலாம். இப்படத்தை உலகமெங்கும் பரந்த அளவில் ரசிகர்களுக்கு எடுத்து செல்லும் ZEE5க்கு நன்றி.

காதல், பாசம், சென்டிமென்ட் கலந்து வெளியான பிரதர் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அமைந்த மக்காமிசி பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. இயக்குநர் ராஜேஷ் தனக்கே உரிய பாணியில், கலக்கலான காமெடியுடன் குடும்பங்கள் ரசிக்கும்படி, இப்படத்தை இயக்கியுள்ளார். திரையில் கொண்டாடிய இப்படத்தை ZEE5 இல் கொண்டாட தயாராகுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *