கிளாடியேட்டர் 2 எப்படி இருக்கிறது ?

கிளாடியேட்டர் 2 எப்படி இருக்கிறது ?

கிளாடியேட்டர் முதல் பாகத்திற்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமும், ஒரு மதிப்பும் இருக்கிறது. முதல் பாகம் எடுத்து 24 வருடங்கள் ஆனாலும், அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. அப்படிப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம், 24 ஆண்டுகள் கழித்து வந்து இருக்கிறது எனும் போது, அதற்கான எதிர்பார்ப்புகளும் உயர்ந்து தான் நிற்கிறது.

அந்த எதிர்பார்ப்பை இந்த பாகம் பூர்த்தி செய்து இருக்கிறதா, என்று பார்த்தால், நிச்சயமாக பூர்த்தி செய்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். நேர்த்தியான திரைக்கதை, அட்டகாசமான மேக்கிங்க், மிரள வைக்கும் நடிப்பு, ஆச்சர்யப்படுத்தும் காட்சியமைப்பு என கிளாடியேட்டர் மீண்டும் மிளிர்கிறார்.

ரோமன் நகரத்தின் அரியாசனம் யாருக்கு என்பது தான் ஒற்றை வரி கதை.

முதல் பாகத்தின் முடிவில் , அப்படத்து நாயகனான மேக்சிமஸ் அரியாசனத்தை வென்று, அதை தனது முன்னால் காதலியான லூசிலாவிடம் கொடுத்துவிட்டு செல்கிறான், லூசிலாவின் மகனான லூசியஸ் தான் அரசனாவான் என்ற எதிர்பார்ப்புடன் முதல் பாகம் முடியும்.

ஆனால் இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தில் லூசியஸ் அரசனாகவில்லை, லூசில்லா ராஜ மாதாவா இருக்கிறாள், மேக்சிமஸின் படையில் இருந்த அகேசியஸ் அவளது கணவனாக இருக்கிறான். ஆனால் லூசியஸ் எங்கும் காணவில்லை. இரண்டு இளைஞர்கள் பேரரசர்களாக இருக்கிறார்கள்.

லூசியஸ் என்ன ஆனான், அவன் திரும்பி வருவானா என்பது ஒரு கதையாகவும், தனது நாட்டில் நடந்த போரில் தோல்வியுற்று, கிளாட்டியேட்டராக மாறிய ஹன்னா எப்படி தனது தோல்விக்கு பழி தீர்த்தான் என்பது ஒரு கதையாகவும் அமைக்கப்பட்டு, இந்த இரண்டும் இணையும் இடம் கதை முடியும் இடமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

அற்புதமான திரைக்கதை தான் இந்த படத்திற்கு அசுர பலம். ஒளிப்பதிவு, சண்டை வடிவமைப்பு, நடிப்பு, இசை, இயக்கம் என அனைத்திலும் ஜொலித்து இருக்கிறது கிளாடியேட்டர்.

நிச்சயம் தவறவிட கூடாத படமாக கிளாடியேட்டர் வந்துள்ளான்.

ஒளிப்பதிவு – John Mathieson
இசை – Harry Gregson Williams
இயக்கம் – ரிட்லி ஸ்காட் (கிளாடியேட்டர் முதல் பாகத்தை இயக்கியதும் இவரே!)

நவம்பர் 15 ஆம் தேதி அன்று, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் Viacom 18 STUDIOS வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *