கங்குவா திரை விமர்சனம்!

கங்குவா திரை விமர்சனம்!

இயக்கம் – சிவா

நடிகர்கள் – சூர்யா , பாபி டியால், யோகி பாபு, டிஷா பட்டாணி

இசை – டி எஸ் பி

தயாரிப்பு – ஸ்டுடியோ கிரீன் – ஞானவேல் ராஜா.

 

 

 

இரண்டு காலவரிசையில் நடக்கும் கதையில் 2024-ம் ஆண்டில் குற்றவாளிகளை ரகசியமாகப் போலீசுக்குக் கண்டுபிடித்துத் தரும் ‘பவுன்ட்டி ஹண்டராக’ இருக்கிறார் பிரான்சிஸ் தியோடர் . அதே நேரத்தில் இந்திய எல்லைப்பகுதியில் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ரகசிய பரிசோதனையைச் செய்யும் ஆராய்ச்சி கூடத்திலிருந்து தப்பித்து வருகிறான் சிறுவன் ஸெட்டா (Zeta). அவனைப் பிடிக்க ஒரு கும்பல் துரத்துகிறது. இதனிடையே பிரான்சிஸும் ஸெட்டாவும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். அங்கிருந்து கதை 1070-ம் ஆண்டுக்குச் செல்கிறது. அங்கே ஐந்தீவில் ஒன்றாக இருக்கும் பெருமாச்சியைக் காத்துவரும் இளவரசனாக இருக்கிறார் கங்குவா . அந்த தீவை அடைய ரோமானியர்கள் பெரும்படையோடு வருகிறார்கள். அவர்கள் செய்யும் சூழ்ச்சியில் பக்கத்துத் தீவில் இருக்கும் அரத்தி குல அரசன் ருத்திரன் கங்குவாவின் பெருமாச்சி மீது படையெடுத்து வருகிறான். இந்த போரில் வெல்வது யார், இரண்டு காலகட்டத்துக்கும் என்ன சம்பந்தம் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண்பதே `கங்குவா’ படத்தின் கதை.

 

 

கங்குவா, பிரான்சிஸ் என இரு வேடங்களில் சூர்யா. போர் வீரனாக ஆக்ரோஷம் பொங்கச் சண்டை செய்வது, எதற்கும் அஞ்சா நெஞ்சனாக நிற்பது எனத் தன் உடல்மொழியால் மிரட்டுகிறார். வசன உச்சரிப்பில் நேர்த்தி என அதிகம் மெனக்கெட்டுள்ளார். பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் நகைச்சுவைக்காக அவர் பேசுகிற வாய்ஸ் மாடுலேஷன் கொஞ்சம் செயற்கைத்தனமாக இருந்தது. மற்றொரு பவுன்ட்டி ஹண்டராக வரும் திஷா பதானி ‘ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், எனினும் அவருக்கு பெரிதாக காட்சியும் அமையவில்லை.

 

குழந்தை நட்சத்திரமாக இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சேயோன் சிறப்பாக நடித்துள்ளார். அனைத்து காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். கருணாஸ் ஒன்றிரண்டு இடங்களில் வந்தாலும் தனது பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். போஸ் வெங்கட்டும் நரித்தனமான கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். யோகி பாபுவின் நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை, கே.எஸ்.ரவிக்குமார், கோவை சரளா ஆகியோர் இணைந்து முதல் பாதியை நகைச்சுவையாக கொண்டு சென்றுள்ளனர் .

கற்பனைத் தீவு, காடு, மலை, அருவி என ஒரு ரம்மியமான பழங்கால தனி உலகைச் சிறப்பாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி. குறிப்பாக ஒவ்வொரு தீவுக்கும் தனி ஒளியுணர்வு, போர்க் காட்சிகளில் பிரமாண்டம் எனக் கண்களை விரிய வைப்பவருக்கு இணையாக சுப்ரீம் சுந்தரின் அட்டகாசமான சண்டைக்காட்சிகளும் மிரட்டுகின்றன.

 

கலை இயக்குநர் அமரர் மிலனும் தன் பங்குக்கு மண்டை ஓடு தோரணம், யானைத் தந்த தூண், சட்டப்பாறை, ஆராய்ச்சி கூட செட்டப் எனப் பெரும் உழைப்பைப் போட்டிருக்கிறார்.

 

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி எஸ் பி இசையமைத்துள்ளார், படம் வரும் முன்னரே குறிப்பாக கங்குவா பாடல் சொல்லலாம். பாடல்களை விட படம் முழுவதும் பின்னணி இசை இரைச்சல் அதிகம் என்பது எதிர்மறை விமர்சனத்தை சேர்த்துள்ளது,

 

 

இயக்குனர் சிவா நடிகர் அஜித்குமாரை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் சொல்லப் போனால் மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்துக்கு பெரிய வெற்றியை கொடுத்தது விசுவாசம் ,அதன் பின் ரஜினியை வைத்து அண்ணாத்தே என பெரிய நட்சத்திரங்களை இயக்கிய பின்னர் மீண்டும் நடிகர் சூர்யாவை ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்டியுள்ளார் ,

 

மொத்தத்தில் இந்த ” கங்குவா ” கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கு இடையே நடக்கும் போராட்டம்.. சூர்யா ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு கொண்டாட்டம் .

 

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 2.1/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *