லக்கி பாஸ்கர் திரை விமர்சனம் 

லக்கி பாஸ்கர் திரை விமர்சனம் 

 

துல்கர் சல்மான் மீனாட்சி சௌத்திரி

ரித்விக் மற்றும் பலர் நடிக்க GV பிரகாஷ் பின்னணி இசையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழில் வெளி வந்துள்ள படம் லக்கி பாஸ்கர்.

 

கதை என்னனு பார்த்தா..

 

90 களில் நடக்கும் கதைகளம்.. பம்பாய் (மும்பை)யில் தூல்கரின் வாய்ஸ் மூலம் கதைக்குள் நுழைகிறோம்.. தனியார் வங்கி காசாளாராக வேலை பார்க்கும் பாஸ்கர் (DQ)அவர் மனைவி சுமதி மகன் தம்பி தங்கை பக்கவாத பாதிப்பில் உள்ள தந்தை இவர்களின் ஒரே நம்பிக்கை பாஸ்கர்… இவரின் நேர்மைக்கு பரிசு கடன் அதனால் ஏற்படும் அவமானம்.. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி.. அதற்கு மேல வங்கியில் இவருக்கு வர வேண்டிய பிரமோஷன் வராமல் போக பாஸ்கர் ஒரு முடிவு எடுக்கிறார்… சூழ்நிலை அவருக்கு சாதகமாக நேர்மையை ஓரம் வைத்து விட்டு அவர் ஆடும் சூதாட்டம் அமர்க்களம்..

 

அளவுக்கு அதிகமாக பணம் வரும் போது மனித மனம் எப்படி தடுமாறும் என்பதையும்..மிக பெரிய share market சதியில் மாட்டி கொண்டு எப்படி மீண்டு வருகிறார் என்பதே மீதி கதை…

அடுத்தடுத்து திருப்பங்களுடன் 90 களில் நடைபெற்ற ஹர்ஷத் ஊழலில் வங்கிகளில் நடந்த பண பரிமாற்றல் பற்றி அப்பட்டமாக வெளிப்படுத்திய விதம் அருமை..

 

தூல்கர் மொத்த படத்தையும் தன் தோளில் தாங்கி நடித்துள்ளார்… Awesome DQ..

நிமிஷ் ரவி ஒளிப்பதிவில் பழைய பம்பாய் காட்சிகள் கண்ணுக்கு விருந்து..

பாஸ்கர் செய்வது தவறு என்றாலும் பாஸ்கர் பார்வையில் அவர் புத்திசாலியாக இருப்பது இயக்குனரின் லக்..

ஆமாம் இந்த படம் இந்த தீபாவளிக்கு வந்த படங்களில் ஆக சிறந்த படமாக ஆனது.. Hatsoff வெங்கி அட்லூரி and டீம்

 

நம்ம tamilprimenews.com rating 3.9/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *