பிரதர் திரை விமர்சனம்!

இயக்கம் – ராஜேஷ்
நடிகர்கள் – ஜெயம் ரவி, பிரியங்கா மேனன் , பூமிகா , நட்டி
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு – ஸ்கிரீன் சீன்
ஒருவன் சிறு வயதிலேயே பாய்ண்ட் பிடித்து பேசுவதால் அவருடைய அப்பா வக்கிலுக்கு படிக்க வைக்கிறார். ஆனால், போற இடத்தில் எல்லாம் லா பாயிண்ட் பேச, ஒரு கட்டத்தில் அவர் அப்பாவிற்கு நெஞ்சு வலி வர, இதுக்கு மேல் நீ வீட்டில் இருக்காதே என்று திட்டுகிறார். அவனது அக்கா இனி நான் தம்பியை பார்த்துக்கொள்கிறேன், அவனை ஒரு நல்ல பையனாக மாற்றுகிறேன் என தன் குடும்பத்திற்கு அழைத்து செல்கிறார் , ஆனால், அங்கே சென்றதும் அவர்கள் குடும்பமே பிரியும் நிலை ஏற்பட பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வந்தவர், கடந்த சில நாட்களாக கொஞ்சம் சறுக்கி வர, இந்த பிரதர் பட அவருக்கு கை கொடுக்கும்.
ஜெயம் ரவி-க்கு என்றே அளவு எடுத்து செய்த பேமிலி படம், அதை அவரும் திறம்பட செய்துள்ளார். பூமிகா குடும்பத்திற்குள் சென்ற பிறகு VTV கணேஷுடன் அவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது, எமோஷ்னல் காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார்.
கண்டிப்பாக சந்தானம் இல்லாமல் ராஜேஸ் தடுமாறுவதை நன்றாக பார்க்க முடிகிறது, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தையே மீண்டும் இந்த ஜெனரேஷன் கிட்ஸுகளுக்கு ராஜேஷ் எடுக்க முயற்சித்துள்ளார்,
ஒளிப்பதிவு ஊட்டியை செம கலர்புல்லாக காட்டியுள்ளனர், ஹாரிஸ் ஜெயராஜ் மக்காமிஷி, ஒரு அக்கா தம்பி செண்டிமெண்ட் பாடலில் ஸ்கோர் செய்கிறது,
படத்தின் கதை ஒரு கமர்ஷியல் காமெடி படத்திற்கு பொருந்துமாறு அமைந்துள்ளது , அதுவே படத்திற்கு பெரிய பிளஸ், திரைக்கதையில் இன்னும் உழைப்பை போட்டிருந்தால் கண்டிப்பாக தீபாவளி வெற்றிப் படம் இதுவாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த ” பிரதர் ” ரொம்ப பழைய குடும்ப கலாட்டா …!
நம்ம tamilprimenews. com rating 2.9/5