நிறைய ஃபன் இருக்கிற படமாக இப்படம் இருக்கும்! 2K லவ்ஸ்டோரி” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் சுசீந்திரன்!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழுவினர் விரைவில் திரைக்குகொண்டுவரும் பணிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் அறிமுக நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மக்கள் நாயகன் ராமராஜன் படக்குழுவினரை வாழ்த்தி, அறிமுக நாயகன் ஜெகவீரை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்வினில்…
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி என்னை நானே மீட்டெடுத்துக்கொண்ட படம், வெண்ணிலா கபடி குழு படத்தைப்போல் நிறைய பாசிடிவ் விசயங்கள் நடந்தது. இயற்கையே நிறைய செய்து தந்தது. எதேச்சையாக நாயகனை ஒரு ஆபிஸில் சந்தித்தபோது, என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டேன், அவர் ஒரு புராஜக்ட் செய்வதாக சொன்னார். சொல்லுங்கள் நாம் ஒரு படம் செய்வோம் என்றேன். நான் ஒர்க் பண்ணிய ஹீரோக்களிடம் கூட இப்படி கேட்டதில்லை, அவரும் உடனே சரி என்று வந்தார். அவரே அவரது நண்பர்கள் உதவியுடன் புரடியூஸ் செய்ய வந்தார், ஆனால் நடக்கவில்லை, அப்போது உங்கள் அக்கவுண்டில் இருந்து 10000 போடுங்கள், நாம் அடுத்த மாதம் படம் செய்யலாம் என்றேன். வெண்ணிலா கபடி குழு படத்தில் இப்படி தான் ஆரம்பமானது. யார் தயாரிப்பாளர் என்று தெரியாமல் தான் அந்தப்படமும் ஆரம்பித்தேன். அதே போல் இந்தப்படமும் தயாரிப்பாளர் தானாக வந்து சேர்ந்தார். படத்தில் பணியாற்றிய பலரும் அது போலவே வந்தார்கள். நிறைய புதுமுகத்தை வைத்து எடுத்துள்ளேன். இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். அவருடன் எனக்கு 10 வது படம், அவருக்கு எப்போதும் ஒரு வகையான கிராமத்து முகம் தான் இருக்கிறது. அதை மாற்றி சிட்டி சப்ஜெக்ட், இளமை துள்ளலுடன் செய்யலாம் என கூட்டி வந்தேன் அட்டகாசமாக பாடல்கள் தந்துள்ளார். நிறைய ஃபன் இருக்கிற படமாக இப்படம் இருக்கும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். பாண்டிய நாடு படத்திற்கு பிறகு உன்னிடம் கான்ஃபிடண்ட் இல்லை என என் நண்பன் சொல்வான், இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என கான்ஃபிடண்டாக சொல்லிக்கொள்கிறேன். என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவில் எப்படி விஜய் சேதுபதி வந்தாரோ அப்படி ஒரு ஹீரோவாக ஜெகவீர் ஜொலிப்பார். சினிமாவின் மீது பேஷனோடு இருக்கும் இளைஞன், சூரி விஷ்ணு போல் இவரும் ஜொலிப்பார். அனைவருக்கும் நன்றி.
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசியதாவது…
சுசீந்திரன் சாருடன் மூன்றாவது படம், எங்க வீட்டில் நம்பி தனியாக ஷீட் அனுப்புவது சாரோட ஷீட்டிங் ஸ்பாட் தான். இன்னொரு வீடு மாதிரி தான். சார் காலை 6 மணிக்கு ஷீட் வைத்தாலும் சீக்கிரம் முடித்து மதியமே அனுப்பி விடுவார். அவ்வளவு பரபரப்பாக வேலை பார்ப்பார். ஷீட்டின் மிக ஜாலியாக இருந்தது. ஜெகவீர் நன்றாக நடித்துள்ளார். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் ராமராஜன் பேசியதாவது…
City light pictures தயாரிப்பாளர் விக்னேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், நான் இந்தப்படத்திற்கு வரக் காரணம் சுசீந்திரன், அவர் மாமா கலைச்செல்வன் என் 38 வருட நண்பர், அவர் அழைப்பில் தான் இந்த விழாவில் கலந்துகொண்டேன். காதல் நம் மனதை விட்டு அகலாத ஒன்று, இன்று எல்லோரும் சொல்வது 2கே கிட்ஸ் கதை இது. அவர்களின் கதையை அருமையாக சொல்லக்கூடிய சுசீந்திரன் இருக்கிறார். இந்தப்படம் மிக நல்ல படமாக அமையும். இந்தப்படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். சுசீந்திரன் மிக அழகாக எடுத்திருப்பார். புதுமுகங்களை வைத்து படமெடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். தம்பி ஜெகவீருக்கு வாழ்த்துக்கள் நன்றி.