கடைசி உலகப்போர் திரை விமர்சனம்!

கடைசி உலகப்போர் திரை விமர்சனம்!

இயக்கம் – ஹிப் ஹாப் ஆதி
இசை – ஹிப் ஹாப் ஆதி
நடிகர்கள் –ஹிப் ஹாப் ஆதி , நட்டி , அனகா சிங்கம்புலி
தயாரிப்பு – ஹிப் ஹாப் ஆதி என்டர்டெய்ன்மென்ட்

 

படம் 2028-ல் தொடங்குகிறது, தமிழக முதலமைச்சர் மச்சான் மற்றும் பினாமி தான் இந்த ஆட்சியையே உருவாக்கினார் என்பது போல ஒருவன் இருக்கிறான். உலகமே தற்போது இரண்டாக பிரிந்துள்ளது. ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிய, இதில் இந்தியா நடுநிலையாக உள்ளது, இந்த நேரத்தில் முதலமைச்சர் மகளின்அறிமுகம் கிடைத்து அவரை காதலிக்கவும் தொடங்குகிறார். இந்த நிலையில் பல லட்சம் கோடிகள் ஒரு ஹார்பர் கண்டெய்னரில் இருக்க, அதை வெளியே எடுக்க முதலமைச்சர் ஒரு கலவரத்தை ஏற்படுத்துகிறார். ஆனால், கலவரம் கண்ட்ரோல் மீறி செல்ல, ராணுவம் களம் இறங்கி தமிழகத்தை கைப்பற்றுகிறது. ஆதியை தீவிரவாதி லிஸ்டில் சேர்கின்றனர். இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள் இந்தியாவை தாக்க ஆரம்பிக்க, மொத்த சென்னையையும் அழிக்கின்றனர், அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

ஹிப்ஹாப் ஆதி உலகப்போர் அளவுக்கு சிந்தித்து இந்த கதையை உருவாக்கி தான் மட்டுமே இதை சுமக்க வேண்டும் என்று இல்லாமல், படத்தின் செகண்ட் ஹீரோ போல் தான் வருகிறார். முதல் ஹீரோ நட்ராஜ் என்கிற நட்டி தான். இவர் தான் கதையே சொல்லி படத்தை தொடங்குகிறார், ஆரம்பத்தில் உலகம் எப்படி தோன்றியது என இவர் சொல்லும் கதையே நம்மை படத்திற்குள் கொண்டு வருகிறது. தான் ஒரு கிங் மேக்கர் என அவர் எடுக்கும் முட்டாள்தனமே படத்தின் கதையாக நீள்கிறது, நடிகை அனகா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

இதில் நாசர், முனிஷ்காந்த், சிங்கம்புலி மற்றும் ஆதி-யின் அனைத்து படங்களில் வரும் அவர்கள் நண்பர்கள் என அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். தமிழ்நாடு ரிபப்ளிக் கண்ட்ரோல் வந்து தனி நாடாகி, அதுவரை ஊர், மொழி, சாதி, இனபெருமை பேசிய மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அவர்கள் படும் கஷ்டத்தை காட்டிய விதம், கண்டிப்பாக இந்த தலைமுறை அடுத்த தலைமுறைகளுக்கு இதை எடுத்து செல்ல கூடாது என்பதை உணர்த்துகிறது. ஹிப்ஹாப் ஆதி எப்போதுமே இந்த ஜெனரேஷன் ஆட்களை கவரும் படி கதை, வசனம் என எடுப்பவர். அந்த வகையில் ஒரு சென்சிட்டிவ் அண்ட் எதிர்காலத்துலாக ஒரு கதையை கற்பனையாக சொன்ன விதம் சிறப்பு.

Kadaisi Ulaga Por first glimpse: Hip Hop Tamizha presents an extravagant war thriller | Watch
ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு முக்கியமான அம்சமாக இருந்தது, சென்னையே அழிந்தது போல ஒரு ஊரையே காட்ட வேண்டும், அதை நன்றாக செய்திருந்தனர், பல இடங்களில் லைட் வெளிச்சம் நமக்கு கன் கூசுகின்றது. இந்தப் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைத்துள்ளார், எப்போதும் போல அவரது இசை அரங்கை அதிர வைக்கிறது, இசை நடிப்பு இயக்கம் என அனைத்திலும் தனது திறனை வெளிக்கொண்டு வந்துள்ளார் .

இந்த கதையை இவ்வளவு சிறிய பட்ஜெட்டில் VFX Work இவ்வளவு பெட்டர் ஆக செய்தது பெரிய விஷயம். கதைக்களமும் இதுவரை பார்த்திராத களமாக இருப்பதால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு படமாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த ”கடைசி உலகப்போர்” ஒரு புதுமையான அனுபவம்.

நம்ம tamilprimenews. com ரேட்டிங் 3.1/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *