டிமான்டி காலனி2 திரை விமர்சனம்
டிமான்டி காலனி2
இயக்கம் – அஜய் ஞானமுத்து
நடிகர்கள் – அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன்.
இசை – சாம் சி எஸ்
தயாரிப்பு – பாபி பாலச்சந்திரன் , விஜய் சுப்ரமணியன், ராஜ்குமார்
டிமான்டி காலனி படத்தின் முதல் பாதியில் நாய்கன் இறப்பது போல் முடிந்திருக்கும். ஆனால், இந்த பாகம் அதனுடனேயே parallel ஆக நாயகியின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் காண்பிக்கப்படுகிறது. நாயகன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அவருடைய அண்ணன் ரகுநந்தன் (இன்னொரு அருள்நிதி), தந்தையின் சொத்துக்களை அடைய தம்பி சாகவேண்டும் என்று முற்படுகிறார். அப்போது ஒரு காரணத்திற்காக சீனிவாசன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கூறி ரகுநந்தனை தடுக்கும் அந்த பெண் அவருடன் இணைந்து டிமான்ட்டி காலனிக்கு அழைத்து செல்கிறார். அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான அமானுஷ்ய சம்பவங்களே டிமாண்டி காலனி 2.
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தன் கணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்விக்கு ஒரு பெண் விடைதேடி அலைகிறார்.அதில் ஆரம்பிக்கும் மர்மம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தொடர்வதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. ரகு கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் சுயநலவாதியாக வரும் அருள்நிதி, சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்து கதையில் ரசிகர்களை நிற்க வைத்துள்ளார், நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு இது ஒரு புது கதாபாத்திரமாக இருந்தது , அதனை சிறப்பாக செய்துள்ளார் அவரைச்சுற்றி தான் மொத்த படமும் நகர்கிறது,
இந்தப் படத்திற்கு சாம் C.Sயின் பின்னணி இசை மிகப்பெரிய பலம். காட்சிக்கு காட்சி திகிலூட்ட அது உதவுகிறது. பாடல்கள் மிகவும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனினும் பின்னணி இசையில் பெரிய பலத்தை கொடுத்துள்ளார், ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு பிரமாதம், காட்சிக்கு காட்சி நம்மை இருக்கையின் நுனியில் அமரும் வண்ணம் சிறப்பாக காட்சிகளை வடிவமைத்துள்ளார்,
முதல் பாகதிற்கும் இரண்டாம் பாகத்திற்கும் உள்ள இணைப்பு நன்றாக இருந்தது, இடைவேளையிலேயே படம் முடிந்தது போன்ற உணர்வை முதல் பாதி தருகிறது.
இரண்டாம் பாதியில் அந்த வவ்வால் காட்சிகளின் நீளத்தை குறைத்து பார்க்கிறவர் காதுகளை பதம் பார்க்காமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்… இரண்டாம் பாகம் இன்னொரு கதை ஆரம்பித்து அதையும் விறுவிறுப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர், கோப்ரா படம் அவருக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆனால் நினைத்த அளவிற்கு வெற்றியை அந்த படத்தில் அவர் சந்திக்கவில்லை , அதற்கு பதில் சொல்லும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் அஜய் ஞான்முத்து ,
மொத்தத்தில் இந்த “டிமான்டி காலனி 2” ஹாரர் த்ரில்லர் விருந்து.
நம்ம tamilprimenews. com ரேட்டிங் 3.6/5