தொடங்கியது ரியோ ராஜின் ‘ஸ்வீட் ஹார்ட்’ பட டப்பிங் பணிகள்!
நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், பௌசி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, பட தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனிக்கிறார். காதலை கொண்டாடும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் தலைப்பினை அறிவிக்கும் காணொளி அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில்.. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.