போட் திரை விமர்சனம்!
போட்
இயக்கம்: சிம்பு தேவன்
நடிகர்கள்: யோகி பாபு , கௌரி கிஷன், எம் எஸ் பாஸ்கர்,
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு – பிரபா பிரேம்குமார்
இந்த படம் இரண்டாம் உலகப் போரின் கால கட்டத்தில் சென்னையில் நடக்கும் ஒரு நிகழ்வாக இருக்கிறது, சென்னையில் உள்ள கடற்கரை அருகே உள்ள ஒரு முகாமில் குண்டு விழப்போவதாக ஒரு செய்தியை ஒருவன் கேட்கிறான், தனது பாட்டி அந்த முகாமில் இருப்பதை தெரிந்து கொண்டு அவரை கடலுக்குள் கூட்டுக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார் , அப்படி அவன் கூட்டுசெல்லும் போது அவனுடம் இன்னும் சிலரும் பயணிக்கின்றனர், இப்படி இருக்க அந்த கடல் பயணத்தில் நடக்கும் உரையாடல் தான் இந்தப் படம் ,
இயக்குனர் சிம்பு தேவன் படங்கள் எப்போதும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் வடிவேலுவின் 23 ஆம் புலிகேசி முதல் தளபதி விஜய்யின் புலி வரை அனைத்தும் வித்தியாசமான முயற்சி தான், அதற்கென்றே பெயர் போன இயக்குனர் அவர் இந்நிலையில் தற்போது யோகி பாபுவை வைத்து ஒரு உலக அரசியல் பேசியுள்ளார்,
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் சூழ்னிலையில் மிக பிசியான நடிகர் என்றால் அது யோகி பாபு தான், ஒரு புறம் மண்டேலா போன்ற படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார், ஜெயிலர் போன்ற படங்களில் காமெடி நடிகராக நடிக்கிறார், அனைத்தும் அவருக்கு வெற்றியாக தான் அமைகிறது, அதே போல இந்தப் படமும் அவருக்கு ஒரு பெரிய பெயரை வாங்கி தரும், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் விசித்திரமாக இருந்தது, மொத்த படமும் கடலில் நடப்பது போல தான் இருக்கிறது,
இந்தப் படத்தில் படகில் பயணிக்கும் ஒரு இளம் பெண்ணாக நடிகை கௌரி கிஷன் நடித்துள்ளார், தனது கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், அதற்கு ஒரு படி மேலாக நடிகர் எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ளார், அவரது நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும், சொல்ல போனால் நாசரின் இடத்தை அவர் நிரப்பி கொண்டிருக்கிறார்,
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார், ஏற்கனவே வெளியான பாடல்கள் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் வரும் பின்னணி இசை கதையின் நகர்விற்கேற்ப இருந்தது இன்னும் சிறப்பு , இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது கொஞ்சம் சிரமம் தான் ஏனென்றால் பல காட்சிகள் கடலில் நடப்பது போல தான் இருக்கிறது , குறிப்பாக நடுக்கடலில் தான் படத்தை எடுத்தார்கள் என்று சொல்ல வேண்டும் இதில் பல சிக்கள்கல் இருக்கும் விபத்துக்கள் ஒளி அமைப்பு என பல சிக்கல்கள் இருந்தாலும் படம் ஒரு உலகதரதிற்கு ஏற்ப ஒரு காட்சியை பெற்றுள்ளது, கண்டிப்பாக அதற்கு நாம் படக்குழுவை பாராட்டியே ஆக வேண்டும்,
யோகி பாபு மற்றும் சிம்பு தேவன் இருவரின் கூட்டணி கண்டிப்பாக பெரிய எதிர்பார்ப்பு தான் ஏனென்றால் இருவரும் அனைத்து விதமான மக்களுக்கும் பிடிக்கும் படங்களை கொண்டவர்கள் , இந்த இருவரும் இணைந்து ஒரு அரசியல் உரையாடலை நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளனர் , இயக்குனர் சிம்பு தேவன் படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார், தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கடலில் எடுத்த படம் இதுவாக தான் இருக்க வேண்டும் அதற்கே அவரை நாம் பாராட்ட வேண்டும், இந்நிலையில் சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் உலக அரசியலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் ,
மொத்தத்தில் இந்த “போட்” கண்டிப்பாக பயணம் செய்ய வேண்டிய ஒரு படகு.
நம்ம tamilprimenews Rating – 3.2/5