தனுஷ் 50 ராயன் விமர்சனம்!
வேலையில்லா பட்டதாரி தனது 25 வந்து படமாக தனது தயாரிப்பில் வெளியிட்ட தனுஷ்… அடுத்த பத்து வருடத்தில் தனது 50 வது படத்திற்கு இயக்குனராக தன்னை பட்டைத்தீட்டி திரைக்களத்தில் இரத்தம் தெறிக்க ராயனை இயக்கி நடித்துள்ளார்.
கதை என்ன..?
கிராமத்தில் தாய் தந்தையை இழந்து தங்கை தம்பிகள் இவர்களோடு சென்னை வந்த ராயன் fastfood கடை நடத்தி வாழ்ந்து வருகிறார். ஊருக்குள்ள இரண்டு gangster சரவணன் மற்றும் sj சூர்யா இவர்களுக்குள் மோதலை உருவாக்கி அவர்கள் கூட்டத்தை ஒளித்து விட துடிக்கிறார் காவல் அதிகாரி பிரகாஷ்ராஜ்.. இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் தனுஷ் தம்பியாக வரும் சந்தீப் கிஷன் சிக்கி கொள்கிறார்.. அப்புறம் கதை சூடு பிடிக்கிறது.. தம்பிகள் மற்றும் தங்கை இவர்களுக்காக களத்தில் சிங்கமாக சீறுகிறார். முக்கிய தலை விழுகிறது.. பரபரப்பு பற்றி கொள்ள அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு தான் மீதி கதை..!!
தனுஷ் இயக்கத்தில் வெற்றிமாறன் இயக்கும் விதமான பாதிப்பு தெரிந்தது…
கதைக்களத்தில் துரோகம், பழிவாங்குவது என இரத்தக் களத்தில் தான் தமிழ் சினிமா பயணிக்கிறது… அதில் சற்று திரைக்கதை திருப்பங்கள்… அதற்கு பக்க பலமாக இசைப்புயல் இசை உடன்… அந்த உசுரே… நீதானே… போதும் அந்த குரலில் ராயன் ராஜ சிம்மாசனம் அடைந்தான் என்பதில் ஐயமில்லை….
திரைக்கதையில் தொய்வு இல்லாமல் இயக்கிய விதம், நடித்த நடிகர் நடிகைகள் அனைவரின் பங்களிப்பும் அவர்களை இயக்கிய இயக்குனர் தனுஷ் தனது 50 வது படத்தில் முத்திரை பதித்தார்.
பத்து தல இராவணன் ஆக STR நடித்து அதில் இசைப்புயல் தந்த அதே புல்லரிக்க வைத்த அந்த ஆகாயம்… மற்றும் நம்ம சத்தம்… பாடல் தந்த பிரமிப்பு ராயனில் வெளிப்பட்டுள்ளது… தனுஷ் ஸ்டைலில்…
பத்து தல ராவணன்…ராயனினுலும் உள்ளான்…!!!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.4/5