இந்தியன் 2 திரை விமர்சனம் 

இந்தியன் 2 திரை விமர்சனம் 

 

இயக்குனர் – ஷங்கர்

நடிகர்கள் – கமலஹாசன் , சித்தார்த் , ப்ரியா பவானி ஷங்கர்

இசை – அனிருத்

தயாரிப்பு – லைகா ப்ரொடக்ஷன்

 

 

 

இந்தியன் 2 கதை

 

open பண்ணா..

 

சித்தார்த் தனது நண்பர்களுடன் இணைந்து யூ ட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சமூகத்தில் ஊழலால் நடக்கும் அநியாயங்களை சுட்டி காட்டி நடித்து அதை யூடியூப் வீடியோக்களால் தட்டிக் கேட்கிறார்கள்..

நாட்டில் எங்கும் லஞ்சம் அதனால் நடக்கும் தற்கொலைகளை தட்டி கேட்க போராடுகிறார்கள்…ஆனால் அரசு துறைகளில் எங்கெங்கும் லஞ்சம் ஊறி போய் விட்டதை அறிந்து இதை தடுக்க நம்ம இந்தியன் தாத்தா வந்தால் தான் முடியும் என்று உணர்ந்து டுவிட்டர் மூலம் #ComebackIndian ஹாஷ்டேக்கை உருவாக்கி வைரலாக்க தொடங்குகின்றனர்இதை பார்த்த வெளிநாட்டில் உள்ள ஒருவர் இந்தியன் தாத்தா தைபை நாட்டில் வர்மக்கலை கற்று கொடுக்கும் ஆசானாக இருக்கும் சேனாபதியை சந்தித்து இந்தியா திரும்பும் படி கேட்டு கொள்ள …

தாத்தா தன் ஆட்டத்தை ஆரம்பிக்க கதை சூடு பிடிக்கிறது..!

 

இந்த சூழலில் சிபிஐ அதிகாரி நெடுமுடி வேனு மகன் பாபிசிம்ஹா இந்தியன் தாத்தாவை கைது செய்து விட துடிக்கிறார்.. அவரிடம் இருந்து தப்பித்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஊழல்வாதிகளை வர்மக் கலை வாயிலாக போட்டுத் தள்ள தொடங்குகிறார். இறுதியில் இந்தியன் தாத்தா கடைசியில் கைதானாரா? தப்பித்தாரா? என்பது தான் இந்தியன் 2 படத்தின் மீதிக்கதை.

 

28 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல்வாதிகளை வேட்டையாடிய இந்தியன் தாத்தாவை மீண்டும் வரவைக்க சமூக வலைத்தளங்கள் வழியாக வேண்டுகோள் வைப்பது ஷங்கர் பஞ்ச்..

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

 

4 மணி நேரம் ஒவ்வொரு முறையும் மேக்கப் போட்டு கமல் நடித்த நடிப்பு மொத்த படத்தையும் தாங்கியுள்ளது. அதேபோல் படத்தில் நடித்துள்ள சமுத்திரகனி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி…ரேணுகா சப் ரெஜிஸ்டர்… எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர். மறைந்த நடிகர் விவேக் காமெடி அனைவரையும் சிரிக்க வைக்கிறது.

பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம்

முதல் பாகத்தில் முன்னாள் சிபிஐ அதிகாரி நெடுமுடிவேனு அலட்டல் இல்லாமல் சேனாபதியை கைது செய்ய முயற்சி செய்வார்…ஆனால் சிம்ஹா அவர் மகனாக சேனாபதியை தான் கைது செய்து விட்டோம் என்கிற திமிரை கண்களில் காட்டுவதில் நடிப்பு அருமை…

சித்தார்த் தான் அதிக காட்சிகளை கையாண்டுள்ளார், ஒரு நேர்மையான குடும்ப பாசம் கொண்ட மகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார், நடிகை பிரியா பவானி ஷங்கர் கதைகேற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக SJ சூர்யா நடிப்பு சிறிது நேரம் வந்தாலும் நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.

நம்மை விட்டு மறைந்த விவேக் மனோபாலா மாரிமுத்து நெடுமுடிவேணு .. இவர்களை திரையில் பார்த்ததும் கண்கள் பனித்தன..

அவர்கள் நடிப்பு awesome..!

 

குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு பலமாக அமைந்துள்ளது. மொத்த படத்தையும் கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார், இந்தப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், படத்தின் பிரம்மாண்டத்தை அவர் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்

 

 

இந்தியன் முதல் பாகத்தில் தமிழ்நாட்டில் நடந்த லஞ்சம் ஊழலை சுட்டிக்காட்டி படம் எடுத்திருந்த ஷங்கர், இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க சேனாபதி சென்றால் என்ன நடக்கும் என்பதை பிரமாண்டமாக காட்டியுள்ளார்..

இடைப்பட்ட காலம் சேனாபதியின் வாழ்க்கை மற்றும் இந்த கதைக்கு பின்னர் என்ன ஆனது என்பதை.. அவரது பிரம்மாண்ட ஸ்டைலில் இந்தியன் 3 ம் பாகத்தில் உருவாக்கியுள்ள்ளார்…

 

மொத்தத்தில் இந்த ‘இந்தியன் 2’ சேனாபதியின் Come Back இந்தியன் 3 வரவை நோக்கி மிகுந்த எதிர் பாப்ர்பினை ஏற்படுத்தி உள்ளது..

மொத்தத்தில் இந்தியாவை ஒரு கலக்கு கலக்குவார்..இந்த இந்தியன் தாத்தா..!

 

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.9/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *