நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில் நடிக்கும் பிரியங்கா மோகனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!
நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
பான் இந்திய படைப்பாக உருவாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். கேங் லீடருக்குப் பிறகு நானியுடன் அவர் நடித்த இரண்டாவது படம் இது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக்கை இன்று, தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரியங்கா மோகனின் சாருலதா கதாப்பாத்திரம், அப்பாவி போலீஸ் அதிகாரியாக காட்சியளிக்கிறது. அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார். அவரது முகத்தில் ஒரு அழகான புன்னகை மிளிர்கிறது. காக்கி உடையில், தோளில் பையுடன் சாலையில் நடந்து செல்கிறார் பிரியங்கா. இப்படத்தில் பிரியங்காவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
விவேக் ஆத்ரேயா இயக்க, DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் DVV என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் மிகச்சிறந்த தொழில்நுட்ப தரத்துடன், இப்படத்தினை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கின்றனர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு முரளி ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் செய்கிறார். இந்த பான் இந்திய திரைப்படம் ஆகஸ்ட் 29, 2024 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.